Friday, October 9, 2009

காயத்ரி மந்திரம்




உலகில் பல மதங்கள், பல மந்திரங்கள். அனைத்தின் சாரமும் ஒன்றாக இருந்த போதும் சில மந்திரங்களின் அமைப்பு, பொருள், அதன் ஆற்றல் வரையறுக்க முடியாத அளவு உள்ளது. அறிவியலில் ஒரு மிக சிறிய சூத்திரம் E=mc2 எப்படி அனைத்தையும் உள்ளடகியதோ அதே போல் காயத்திரி மந்திரமும் வரையறுக்க முடியாத ஆற்றலை கொண்டுள்ளது.

கிருஷ்ணர் பகவத் கீதையில் மந்திரங்களில் நான் காயத்திரி என்கிறார்.

ஓம்² பூ⁴ர்பு⁴வ: ஸ்வ:
தத்ஸவதுர்வரேண்யம்²
ப⁴ர்கோ³ தே³வஸ்ய தீ⁴மஹி
தி⁴யோ யோ ந: ப்ரசோத.

மேலோட்டமாக அறிந்தால் பொருள் படுவது சில.

கடவுளே. நீ எங்கும் நிறைந்தவன்.சர்வ வல்லமை படைத்தவன். சர்வமும் அறிந்தவன்.
நீயே ஒளி, நீயே பொருள், நீயே பேரின்பம்.
நீயே உலகை படைப்பவன், நீயே துன்பங்களை நீக்குபவன். நீயே உயர்ந்ததில் உயர்ந்தவன்.
நாங்கள் உன்னை ஒளியினிலும் வணங்குகிறோம். நீயே எங்களை நல்வழி காட்டுவாயாக.



ஆனால் இதன் ஒவ்வொரு எழுத்தும் மிக அடர்த்தியான பொருளை கொண்டுள்ளது.

ஓம்² பூ⁴ர்பு⁴வ: ஸ்வ

இது மூவுலகை குறிப்பதாகவும் ஓம் என்பது,அதனை வணங்குவதாகவும் உள்ளது. அறிவியலின் படி பூ⁴ர் - பூமியையும், பு⁴வ - சூரிய மண்டலத்தையும், ஸ்வ- பால்வழிதிரளையும் குறிப்பிடுகிறது. ஒரு சாதரண மின்விசிறி சுழலும் பொழுது எப்படி ஒரு ரீங்கார ஒலி கேட்க முடிகிறதோ அதே போல பால்வழி மண்டலத்தில் உள்ள அனைத்து கோள்களும் ஒருசேர சுழலும் பொழுது, உண்டாகும் ஒலியே இந்த ஓம் என்னும் மந்திரத்தை குறிப்பதாகும்.

தத்ஸவதுர்வரேண்யம்²

தத் என்பது கடவுளையும், ஸவதுர் என்பது சூரியனையும் வரேண்யம் என்பது வர்ணிதலைக் குறிக்கிறது. அதாவது கடவுள் என்ற எளிதில் அறியமுடியாத ஒன்றை, வர்ணிக்க முடிய கூடிய ஒன்றை கொண்டு வர்ணிக்கப்படுகிறது.

ப⁴ர்கோ³ தே³வஸ்ய தீ⁴மஹி
ப⁴ர்கோ³ என்பது ஒளியையும், தே³வஸ்ய என்பது கடவுள் தன்மையையும், தீ⁴மஹி வணங்கபடவேன்டியது அல்லது தியானிக்க படவேண்டியது.

தி⁴யோ யோ ந: ப்ரசோத.
தி⁴யோ பேருணற்வனது யோ ந: நாம் அனைய்வருக்கும் நல்வழி காட்டடும்.

ஒரு மந்திரத்தை அறிவது ஒரு வகை. கற்பது ஒரு வகை, அதன் பொருள் உணர்ந்து அனுபவிப்பது மற்றொரு வகை. எந்த ஒன்றை அறிய முற்படும் பொழுதும் பொருள் உணர்தல் அதனை அனுபவிப்பது எளிதாகிறது. அனுபவித்து இசைஅமைத்து பாடுவது அடுத்த வகை.
கீழே உள்ள படக்காட்சி மற்றும் ஒலி உங்களை உண்மையாகவே பரவசப்படுத்தும்.



குறிப்பு:- மேலே உள்ள பாடல் இசை தேவ ப்ரேமல் என்ற ஜெர்மனி பாடகரால் உருவாக்க பட்டது. இவரின் உருவாக்கம் அனைத்தும் இந்து மத வேதத்தின் வரிகளை உள்ளடக்கியது.

3 comments:

கடை(த்)தெரு said...

மிக நல்ல பதிவுக்கு நன்றி ஸ்ரீனிவாசன்.

அன்புடன்
இன்பா

Anonymous said...

It may be a strategy of nobel committee to take obama/US in the direction of peace. Anyhow,i dont think obama can win in next US Election.

R.Gopi said...

Excellent Mr.Inba...

Very detailed narration with pictures...

 
Follow @kadaitheru