மாணவர்கள் அளிக்கும் ஆவணங்கள் சரியாக இருந்தால் விண்ணப்பித்த 15 நாளில் கல்வி கடன் வழங்கப்படுமென்று ஐ.ஓ.பி. அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சென்னை மண்டல பொது மேலாளர் டி.தேனப்பன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கல்விக் கடன் கேட்கும் மாணவ-மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கல்விக் கடன் கேட்பவர்களுக்கு இந்தியன் ஓவர் சீஸ் வங்கி உடனே வழங்கி வருகிறது. சரியான ஆவணங்களை கொடுக்கும் பட்சத்தில் மறுப்பது இல்லை.
பணம் இல்லை என்ற ஒரு காரணத்திற்காக கல்வி தடைபடக் கூடாது. அதை மனதில் கொண்டு கல்விக்கடன் கேட்கும் என்ஜினீயரிங், மருத்துவம், நர்சிங், மற்றும் தொழில் நுட்ப உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களே அதிகம் பேர் கல்விக் கடனுக்கு விண்ப்பித்துள்ளனர். ரூ. 4 லட்சம் வரை எந்த பணயமும் இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது. ரூ.7.5 லட்சம் வரை 3-வது நபர் கியாரண்டி கிடையாது. அதற்கு மேலான தொகைக்கு பாதுகாப்புக்காக ஆவணங்கள் எதாவது பெறப்படும்.
உள் நாட்டுக்கடன் ரூ.10 லட்சம் வரை பெற விண்ணப்பதாரர்கள் 5 சதவிதம் பணம் வங்கியில் செலுத்த வேண்டும். வெளிநாட்டு கல்விக்கடன் ரூ.20 லட்சம் வரை பெறுபவர்கள் 15 சதவீதம் மார்ஜின் கட்ட வேண்டும். பெரும்பாலும் கல்விக்கடன் பெற விரும்புபவர்கள் அருகில் உள்ள வங்கிகளில் அணுகுவது தான் முறையாகும். அல்லது கணக்கு உள்ள பாங்கிகளை நாட வேண்டும். அப்போதுதான் எளிதாக கடன் அளிக்க முடியும்.
படிப்புக்காக பெறுகிற கடனை வங்கிகளுக்கு திரும்ப செலுத்த வேண்டும் இலவசமாக கருதக்கூடாது அப்போதுதான் மற்றவர்களுக்கு கடன் கொடுக்க முடியும். கல்விக்கடனை 5 முதல் 7 வருடத்தில் திருப்பி செலுத்த வேண்டும்.
வட்டியை படிக்கும் போதே கட்டலாம். படித்து முடித்து ஒரு வருடம் வரை கடனை திருப்பி செலுத்துவதற்கு அவகாசம். அதற்கு முன் வேலைகிடைத்து விட்டால் கடனை திருப்பி செலுத்த வேண்டும்.
வட்டியை படிக்கும் போதே கட்டலாம். படித்து முடித்து ஒரு வருடம் வரை கடனை திருப்பி செலுத்துவதற்கு அவகாசம். அதற்கு முன் வேலைகிடைத்து விட்டால் கடனை திருப்பி செலுத்த வேண்டும்.
மத்திய-மாநில அரசு களின் அங்கீகாரம் பெற்ற கல்லுரிகளில் படிக்கிற மாணவர்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். வங்கி கேட்கும் எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தால் 15 நாட்களில் கல்விக்கடன் பெறலாம். கல்விக் கடனுக்கு வட்டி இல்லை என்பது தவறு.
மாணவர்கள் செலுத்த வேண்டிய வட்டியை மத்திய அரசு மானியமாக வங்கிகளுக்கு வழங்கும். ஆனால் இதுபற்றிய தகவல் எதுவும் இதுவரை வரவில்லை. கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் ஐ.ஓ.பி. மூலம் 82 ஆயிரத்து 737 மாணவர்களுக்கு ரூ.1450 கோடி கவ்விக்கடன் வழங்கப்பட்டது. இதில் தமிழகத்தில் தான் பெருமளவில் கடன் கொடுத்து இருக்கிறோம்.
இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை (6 மாதம்) 950 பேருக்கு ரூ.250 கோடி கல்விக்கடன் அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை (6 மாதம்) 950 பேருக்கு ரூ.250 கோடி கல்விக்கடன் அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவுக்கு கூப்பிட்டாலும் வரமாட்டேன்....இந்தியாவுல நான் பொறந்ததே ஒரு ஆகசிடெண்டுன்னு நோபெல் பரிசு வாங்குன சங்கட ச்சே வேங்கட ராமகிருஷ்ணன் சொல்லி இருக்காரு.... இந்த மாதரி படிப்புக்காக கடன் வாங்கும் பசங்க.. கண்டிப்பா இந்தியாவுலதான் வேலை செய்யணும்..அல்லது எங்கே வேலை செஞ்சாலும் இந்தியனா இருக்கனும்ன்னு ஐ.ஓ.பி. தனியா ஒரு பேப்பருல கையழுத்து வாங்கிகிட்டா நல்லா இருக்கும்..
1 comments:
கடைக்காரர் கமெண்ட்:
இந்தியாவுக்கு கூப்பிட்டாலும் வரமட்டேன்....இந்தியாவுல நான் பொறந்ததே ஒரு ஆகசிடெண்டுன்னு நோபெல் பரிசு வாங்குன சங்கட ச்சே வேங்கட ராமகிருஷ்ணன் சொல்லி இருக்காரு.... இந்த மாதரி படிப்புக்காக கடன் வாங்கும் பசங்க.. கண்டிப்பா இந்தியாவுலதான் வேலை செய்யணும்..அல்லது எங்கே வேலை செஞ்சாலும் இந்தியனா இருக்கனும்ன்னு ஐ.ஓ.பி. தனியா ஒரு பேப்பருல கையழுத்து வாங்கிகிட்டா நல்லா இருக்கும்..
//
நச் கமெண்டுபா
Post a Comment