Wednesday, June 30, 2010

அரசுக்கு சில 'ஜாலி' அட்வைஸ்...


"தமிழுக்கு என்னென்ன செய்ய வேண்டுமென்று அரசுக்கு ஆணையிடுங்கள்,'' என்று செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கத்தில் பங்கேற்றுள்ள தமிழறிஞர்களிடம் முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.

ஒரு தமிழ் அறிஞர் (!?) என்கிற முறையில், முதல்வருக்கு தமிழ் இனம் செழிக்க அடியேன் தரும் சில 'அட்வைஸ்கள்'..

1 . திமுக 'வீக்'கான தொகுதிகளை, உளவுத்துறையின் மூலம் ஆராய்ந்து, அங்கெல்லாம் மாதம் ஒரு முறை 'தமிழ் செம்மொழி மாநாடு' நடத்தலாம்.

அப்படியே, மாநாடு நடக்கும் ஊர்களில், மரங்கள் வெட்டும் பணியை 'அனுபவம் வாய்ந்த' பாமகவிடம் ஓப்படைத்து, தமிழின் பெயரால், ஒரு புதிய கூட்டணிஅமைக்கலாம்.

2. தமிழ் மாநாட்டு சிறப்புகளை, சுருதி ஹாசனைபோல தமிழே தெரியாத வட மாநில பாடகர்களை பாடவைத்து 'செம்மொழி பாடல் ' அமைக்கலாம். அதை, கௌதம் வாசுதேவ மேனனை தொடர்ந்து , ராம் கோபால் வர்மா போன்ற இயக்குனர்களை படமாக்க சொல்லலாம்.

3."தமிழ் பெண்டீர் கற்பு நிலை" என்கிற தலைப்பில், நடிகை குஷ்பூ தலைமையில் தமிழ் பண்பாடு பற்றி ஒரு கருத்தரங்கம் நடத்தலாம்.

4."தமிழ் கலாச்சாரத்தில் ஊடல்" என்ற தலைப்பில் 'மானாட மயிலாட' சிறப்பு கண்காட்சிக்கு ஏற்ப்பாடு செய்யலாம். கூடவே, அந்த நிகழ்ச்சிக்கு நமிதா அணிந்து வந்த ஆடைகளை வைத்தும் ஒரு கண்காட்சி நடத்தலாம்.

5."தமிழ் - இந்தி மொழி தொடர்பு " என்ற தலைப்பில், அமைச்சர் தயாநிதி மாறனை ஒரு ஆய்வு(அனுபவ!)கட்டுரை வாசிக்க சொல்லலாம்.

6.'அஞ்சாநெஞ்சனும், தமிழர் வீரமும்' என்று ஒரு ஆய்வரங்கம் நடத்தி, அதற்க்கு மு.க.அழகிரியை தலைமை ஏற்க வைக்கலாம்.

7."கெமிஸ்ட்ரி தமிழ்" பற்றி கலா மாஸ்டர், சன் டிவி மற்றும் கலைஞர் டிவி டிவி நிகழ்ச்சி நடுவர்களை வைத்து, ஒரு கலந்துரையாடல் அமைக்கலாம்.

8.தமிழை வளர்த்தது சன் டிவி தொகுப்பாளினிகளா? அல்லது கலைஞர் டிவி தொகுப்பாளினிகளா? என்ற தலைப்பில் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் ஒரு பட்டிமன்றம் நடத்தலாம்.

9.தமிழ் திரையிசையில் உலகத்தரம் என்ற தலைப்பில், "சமைஞ்சது எப்படி" என்கிற இந்து பட பாடலை கவிஞர் வாலியும், "டுபுக்கு அடிக்கடி துடிக்கிது" என்கிற கேப்டன் பட பாடலை கவியரசு வைரமுத்துவும் அரங்கேற்றம் செய்யலாம்.

10."தமிழனின் நன்கொடைகள்" என்ற தலைப்பில், கச்சதீவை இலங்கைக்கும், காவேரியை கர்நாடகத்துக்கும் வழங்கிய நமது மண்ணின் பெருமைகளை விளக்கும் நினைவுச்சின்னங்களை அமைக்கலாம். தீவிரவாதத்தை(?) அழித்து தமிழ் இனத்தை இலங்கையில் வாழ வைத்து(!) கொண்டிருக்கும் ராஜபக்க்ஷேவுக்கு செம்மொழி மாநாட்டு அழைப்பு அனுப்பலாம்.

11. "தொலைதொடர்பு துறையில் தமிழர்(!) வளர்ச்சி" என்று ஸ்பெக்ட்ரம் ராஜாவை ஒரு கருத்தரங்கு நடத்த செய்யலாம்.

12.பள்ளிகள் போலவே, எல்லா கல்லூரிகள்,அரசு,தனியார் அலுவலங்கள் ஆகிய அனைத்துக்கும் ஒரு வாரம் விடுமுறை வழங்கலாம். அந்த விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டின் எந்த மூலைக்கும் பஸ் மற்றும் ட்ரைன் மூலம் இலவசமாக சென்று வரலாம் என்று அறிவிக்கலாம்.

13.மாநாட்டில் கூட்டம் சேர்க்க, மாநாடு நடக்கும் குறிப்பிட்ட நகரில் மட்டுமே 'டாஸ்மாக்' கடைகள் இயங்கும் என அறிவிக்கலாம். மாநாடு முடியும் வரை மற்ற ஊர்களில் 'டாஸ்மாக்' சேவைகள்(!) தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அரசாணை தரலாம்.

பெண்கள் கூட்டம் சேர்க்க, டிவி தொடர்களை தற்க்காலிகமாக நிறுத்தலாம்(குறிப்பாக அத்திபூக்கள், நாதஸ்வரம்).

14."கலைஞரின் கடித இலக்கியம்" என்ற தலைப்பில், தமிழ்நாடு மற்றும் தமிழர் பிரச்சினைகள் குறித்து டெல்லிக்கு கருணாநிதி எழுதிய கடிதங்களை வைத்து ஒரு அருங்காட்சியகம் வைக்கலாம்.(டெல்லிவாலாக்கள் 'டிஷ்ஷு' பேப்பராக பயன்படுத்தியது போக மீதம் உள்ள கடிதங்களை மட்டும்??).

இதை படிக்கும் நீங்களும் ஒரு 'தமிழ் அறிஞர்' என்கிற முறையில், நீங்களும் அரசுக்கு ஆலோசனை சொல்லுங்க அய்யா.


-இன்பா

 
Follow @kadaitheru