Wednesday, October 7, 2009

யூனுஸ்GONE??


இலங்கை வீரர்கள் மீதான திவிரவாத தாக்குதல்களை தொடர்ந்து பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த உலககோப்பை போட்டிகள் ரத்தானபோது, இனி பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அவ்ளோதான்.. பாகிஸ்தான் கிரிக்கெட் அஸ்தமித்துவிட்டது என்றார்கள். தளர்ந்துபோய் இருந்த பாகிஸ்தான் அணியை தூசுதட்டி, யாரும் எதிபாராதவகையில் 20-20 உலககோப்பையை பெற்றுதந்து ஒரு புதிய தொடக்கத்தை தந்தவர் யூனுஸ்கான். இன்று அவர் நிலைமை... அந்தோ பரிதாபம்.


ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் ஆஸ்திரேலியாவிடம், பிறகு அரையிறுதியில் நியூஸீலாந்திடமும் தோல்வி தழுவியதற்கு பின்னணியில் சூதாட்டம் இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் பாகிஸ்தான் நாடாளுமன்றக் குழு அணித் தலைவர் யூனிஸ் கான், பயிற்சியாளர் இன்டிகாப் ஆலம், வாரியத் தலைவர் இஜாஜ் பட்

ஆகியோரிடம் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த தோல்விகள் குறித்த விளக்கம் அளிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) தலைவர் இசாஜ் பட், கேப்டன் யூனிஸ் கான் மற்றும் பயிற்சியாளர் இன்டிகாப் ஆலம் ஆகியோருக்கு பாகிஸ்தான் பார்லிமென்ட் குழு(விளையாட்டு) சம்மன் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து விளையாட்டுத்துறை தலைவர் ஜாம்ஷெட் கான் தஸ்டி கூறியது:

பாகிஸ்தான் அணியின் உள்நோக்கம் இந்திய அணியை தொடரை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதே. அதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடைசி பந்தில் தோல்வியடைந்துள்ளனர். இதற்கு உள்நோக்கம் உள்ளது. தவிர, அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான தோல்வியும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் வெற்றிக்கு கொஞ்சம் கூட முயற்சிக்கவில்லை.

தென் ஆப்ரிக்காவில் என்ன நடந்தது என்ற உண்மையை பாகிஸ்தான் மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட சிலர் மற்றும் சீனியர் வீரர்களிடமும் பேசியுள்ளோம். சூதாட்டம் நடந்துள்ளது குறித்து உறுதியான தகவல்கள் எங்களுக்கு கிடைத்துள்ளது. அதற்கான ஆதாரங்களை திரட்ட முயற்சித்துக் கொண்டுள்ளோம். எனவே எங்களுக்கு உண்மை தேவை. இதுகுறித்து இரண்டு நாட்களுக்கும் பதில் தெரிவிக்க வேண்டும். தேவைப்பட்டால் பி.சி.பி.,யில் மாற்றங்களை கொண்டுவரவும் தயங்க மாட்டோம்.

இவ்வாறு ஜாம்ஷெட் கான் தஸ்டி கூறினார்.

யூனிஸ் கான், இன்டிகாப் ஆலம் ஆகியோர் உடனடியாக நேரில் வந்து விளக்கம் அளிக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அரையிறுதியில் நியூசிலாந்திடம் நடந்த போட்டியில் கிரான்ட் எலியட் கொடுத்த சுலப "கேட்ச்' வாய்ப்பை கேப்டன் யூனிஸ்கான் கோட்டை விட்டார்.
கிராண்ட் எலியட்டிற்கு யூனிஸ்கான் கேட்சைக் கோட்டைவிட்டதுதான் தோல்விக்கு காரணம் என்று கருதப்பட்டு வருகிறது.

ஆனால் யூனிஸ்கான் 'காயம் பட்ட விரலை தற்காத்துக் கொள்ளும் ஒரு இயல்பான உந்துதலிலேயே கேட்சை கோட்டை விட்டேன் என்று கூறியதோடு, இதே கையில்தான் பந்தை த்ரோ செய்து இந்தியாவின் கௌதம் கம்பீரை ரன் அவுட் செய்தேன்' என்றார்.

மேலும் கம்பீரை ரன் அவுட் செய்த போது ஆஹா எவ்வளவு பெரிய நட்டுப்பற்றாளர் இவர் என்று என்னைப் புகழ்ந்தனர். தற்போது வேறு விதமாக பெயர் தெரியாத ஆளைக் குறிப்பிடுவதுபோல் குறிப்பிடுகின்றனர். ஆனால் எது நடந்தாலும் எனக்கு கவலையில்லை' என்று கூறியுள்ளார் யூனிஸ்கான்.

ஒரு கேட்சைக் கோட்டைவிட்டதற்க்காக இப்படியல்லாம் நடவடிக்கை எடுக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். தொடர் முழுவதும் சொதப்பிய இந்திய அணியை என்ன செய்யப்போகிறது நமது கிரிக்கெட் வாரியம்??


பதிவு : இன்பா

1 comments:

தமிழினி said...

உங்கள் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட , உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்களுக்கு நீங்கள் கடைசியாக எழுதிய ஐந்து பதிவுகளை சிறு படங்களாக வலது அல்லது இடது பக்கத்தில் இடம்பெறச் செய்ய இந்த gadaget ஐ இணையுங்கள்
gadget ஐ பெற இங்கே செல்லவும்

tamil10 .com சார்பாக
தமிழினி
நன்றி

 
Follow @kadaitheru