இன்றைக்கு நாம் வேலையில் இருப்போமா? .. இதுதான் தனியார் அல்லது ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் மனதில் ஒவ்வொரு நாள் காலையிலும் எழும் கேள்வி.
மனைவி, குழந்தைகள் என்று வாழும் ஒரு குடும்பத் தலைவனுக்கு திடிரென்று வேலை பறிபோனால் எழும் மனஉளைச்சல்கள்...பதட்டம்...இவற்றை வார்த்தைகளில் விளக்க முடியுமா?
குறிப்பாக வங்கிகளில் கடன் வாங்காத ஐ.டி நிறுவன ஊழியர்களே இல்லை எனலாம். வேலை போகும் பட்சத்தில் அவர்கள் எவ்வாறு சமாளிப்பார்கள்?
ஐதராபாத்திலுள்ள சத்யம் நிறுவனம் 6400 பேரை வேலை நீக்கம் செய்வதாக தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது.
ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் செயல்பட்டு வந்தது. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிறுவனத்தில் அதிபர் ராமலிங்க ராஜூ நிறுவனங்களில் மோசடி செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
அதன் பிறகு சத்யம் நிறுவனத்தை மத்திய அரசு அமைத்த குழு நிர்வாகம் செய்தது. பின்னர் மகேந்திரா நிறுவனம் சத்யம் கம்ப்யூட்டரை வாங்கி விட்டது.
இதையடுத்து இந்த நிறுவனம் ஊழியர்களை குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இங்கு வேலை பார்த்த 9 ஆயிரம் ஊழியர்களுக்கு கடந்த ஜூன் மாதம் கட்டாய விடுமுறை அளித்து பணியில் இருந்து தற்காலிகமாக நிறுத்தி இருந்தனர். அவர்களில் 1600 ஊழியர்களை திரும்ப அழைத்து கொண்டனர்.
இந்த நிலையில் மீதி உள்ள 6400 ஊழியர்களுக்கு நிர்வாகம் நேற்று இ.மெயில் ஒன்று அனுப்பி உள்ளது. அதில் உங்களை பணியில் தொடர வைக்க முடியாது. டிசம்பர் 18-ந் தேதிக்குள் உங்கள் கணக்குகளை முடித்து பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே 6400 ஊழியர்களும் திடீரென வேலையை இழந்துள்ளனர்
ஏற்கனவே வேலை வாய்ப்புகள் குறைவை உள்ள இந்த பொருளாதார சூழலில்..அவர்ளுக்கு வேறு சரியான வேலை எப்போது..எப்படி கிடைக்கபோகிறது?
"நிரந்தரம் இல்லாமையே நிரந்தரம்" என்னும் தத்துவம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ ஐ.டி நிறுவன ஊழியர்களுக்கு நூறு சதம் பொருந்துகிறது.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அவர்களின் பாடல ஒன்று..பள்ளி நாட்களில் படித்தது.
"உழவும் தொழிலும் இல்லாமல் உலகில் ஒன்றும் செல்லாது"
எங்கு வேலை செய்தாலும்..எவ்வளவு சம்பாதித்தாலும் ஒரு சுயதொழிலுக்கான முனைப்புகள், முதலிடுகள் மற்றும் சேமிப்புகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் உணர வேண்டியதைத்தான் இந்த பாடலும், செய்தியும் உணர்த்துகிறது.
கடைக்காரர் கமெண்ட் :
என்னத்தை சொல்றது...நான் படிச்ச ஜோக்கு ஒன்னு உங்களுக்கு சொல்றேன்..
என் மூத்த மகன் கம்ப்யூட்டர் எஞ்சினியர்..ரெண்டாவது மகன் விமானம் ஓட்டுறான்...மூணாவது மகன் ஷேர் மார்க்கெட் பத்தி ஆலோசனை சொல்றவன்..ஆனா..நாலாவது மகன் டீக்கடை வச்சு இருக்கான்...
ஏன் அவனை மட்டும் படிக்க வைக்கலையா நீங்க...
அட நீங்க வேற...அவன் குடும்பத்தோட ..மூத்த பசங்க குடும்பத்தையும் சேர்த்து அவன்தான் இப்போ பாத்துக்கிட்டு இருக்கான்.
சொந்தமா,நமக்குன்னு ஒரு தொழில் இருக்கறதுதான் எப்போவும் நல்லதுன்னு தோணுதுங்க...
பதிவு : இன்பா
Friday, October 23, 2009
சத்தியம் தவறிய சத்யம் நிறுவனம்
Posted by கடை(த்)தெரு at 1:37 PM
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அதெல்லாம் சரி "தல"...
எல்லாருமே சொந்தமா தொழில் தொடங்க முடியுமா??
அப்படி முடியும்னா, எதுனா ஐடியா குடுப்பா......
எதுவுமே ஒரு cyclic process தான். என்னுடைய அண்ணன் சொல்லுவார்: 80களில் Polytechnic மிகவும் பிரபலமாக இருந்தது. 90களில் Engineering பிரபலமாக இருந்தது. மில்லினியம் துவக்கத்தில் IT பிரபலமாக இருந்தது. இப்பொழுது IT பாடு திண்டாட்டமாக உள்ளது. ஆனால் இதுவும் மாறும்.
இப்போ இருக்கிற நிலைமைக்கு solution குடுன்னா பழசைக் கிளறுகிறாயே என்று கேட்கிறீர்களா? - அதுக்கு இந்த பாட்டுதான் நினைவுக்கு வருகிறது.
"ஆடிய ஆட்டமென்ன, பேசிய வார்த்தையென்ன....."
அன்னாச்சி கமென்ட் சூப்பர். இதை பற்றி என் கதை இங்கே (sorry for the ad.. ஒரு விளம்பரம்...?) -
http://tamilkothu.blogspot.com/2009/10/blog-post_20.html
Post a Comment