Sunday, October 18, 2009

நான் நடிகர் இல்லை - மன்னிப்பு கேட்கிறார் நோபல் ராமகிருஷ்ணன்


"இந்தியாவில் இருந்து எல்லா தரப்பு மக்களும் எனக்கு இ-மெயில் அனுப்பி வருகிறார்கள். எனது இ-மெயில் பகுதியையே நிரப்பி முடக்கி விடுகிறார்கள். அவர்களது கடிதங்களை அழிப்பதற்கே எனக்கு ஒன்றிரண்டு மணி நேரம் ஆகி விடுகிறது. இவர்களது இ-மெயில் வெள்ளத்தால், எனது சகாக்களிடம் இருந்து வரும் முக்கியமான தகவல்கள் கூட கிடைக்காமல் போய் விடுகின்றன.


இவர்களுக்கு இரக்கமே கிடையாதா? நான் நோபல் பரிசு பெற்றதற்காக இவர்கள் பெருமைப்படுவது எல்லாம் சரிதான். அதற்காக என்னை ஏன் தொந்தரவு செய்கிறார்கள். நான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன் என்பது கூட முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. நாமெல்லாம் மனிதர்கள். ஒருவரின் தேசம் என்பது, பிறப்பால் வருவது தானே?" - என்று பேசினார் நோபல் இந்திய தமிழர்(?) ராமகிருஷ்ணன்.


இப்படியெல்லாம் தான் பேசிய கருத்துக்களுக்கு, இந்தியர்களுக்கு எதிரான விமர்சனங்களுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார் 'நோபல்' ராமகிருஷ்ணன்.


மேலும், அவர் கூறியதாவது


"இந்தியாவில் இருந்து வந்த இ - மெயில்கள் குறித்து நான் தெரிவித்த கருத்துக்களுக்கு எழுந்துள்ள எதிர்ப்பை பார்த்து, நான் பெரிதும் வருத்தம் அடைந்தேன். நான் தெரியாமல் பலரது மனதை புண்படுத்தியதை உணர்ந்து கொண்டேன். இதற்க்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.


எனக்கென்று தனிப்பட்ட உதவியாளர் கிடையாது. எனது இ-மெயிலை எனது பணிக்காக பயன்படுத்துகிறேன். ஆகவே, முக்கியமான கடித தகவலை தெரிந்து கொள்வது கடினமாக உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்.


நடிகர்கள்,விளையாட்டு வீரர்கள் போலன்றி, நாங்கள் அமைதியான வாழ்க்கை வாழ்பவர்கள். திடீர் பிரபலம் ஆகும் போது அதை எப்படி எதிர்கொள்வது என்று எங்களுக்கு தெரியாது. அதுவம், யாரென்று தெரியாதவர்களிடம் இருந்து மலைபோல் இ- மெயில்கள் வந்தபோது அதை எப்படி அணுகுவது என்று தெரியாமல் போய்விட்டது.


தேசம் என்பது பிறப்பால் வருவது என்று நான் கூறியதற்கு மக்கள் ஆட்சேபனை தெரிவித்து உள்ளனர். நாம் எல்லாம் மனிதர்கள் என்று நான் சொன்னதை அவர்கள் பார்க்க தவறிவிட்டனர். ஒருவர் சாதனையில் மகிழ்ச்சி அடைய வேண்டுமானால், அவர் செய்த பணிகள் மீது விருப்பம் கொள்வதுதான் சரியான வழிமுறை.


எனக்கு நல்ல கல்வியும், வசதி வாய்ப்புகளும், நல்ல குழுவும் இருந்ததால்தான் இந்த சாதனையை செய்ய முடிந்தது.


தனிப்பட்ட முறையில் நான் முக்கியம் அல்ல. நான் செய்த சாதனைகளே முக்கியம். அதுதான் மக்களை மகிழ்ச்சி அடைய செய்ய வேண்டும்.


இந்தியாவிலும், வேறு நாடுகளிலும் நோபல் பரிசு பெறாத எத்தனையோ திறமையான விஞ்ஞானிகள் உள்ளனர். அவர்களின் பணிகளை அங்கிகரிக்க வேண்டும், இந்தியாவிலும் அத்தைகைய திறமைசாலிகளும், புத்திசாலி இளம் மாணவர்களும் உள்ளனர். அவர்களை நான் இந்தியா சென்ற போது நேரடியாகவே சந்தித்து இருக்கிறேன்."என்று கூறியிருக்கிறார் ராமகிருஷ்ணன்.


2002 ஆம் ஆண்டுக்கு பின் வருடம் தோறும் இந்தியா வருவதாகவும், அப்படி வரும்போதெல்லாம் நட்சத்திர ஹோட்டல்களில் தங்காமல் மாணவர்களுடன் கல்வி நிறுவனங்களில் தங்குவதாகவும் தெரிவித்து இருக்கிறார்.


"நான் பல ஆண்டுகளுக்கு முன்னால் சந்தித்த சக விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களிடம் இருந்தும், தொடர்பை இழந்து விட்டவர்களிடம் இருந்தும் வாழ்த்துக்களை பெறுவது சந்தோஷமாக இருக்கிறது " என்கிறார் அவர்.கடைக்காரர் கமெண்ட் :
நல்ல சாமியார்களும், நல்ல விஞ்ஞானிகளும் தனக்குன்னு ஒரு உலகத்தை உண்டாக்கி...அதுல வாழறவங்க ....அவங்களை வாழ்த்துக்களை சொல்றதோட... விட்டுவிடுவோம்.

பதிவு : இன்பா

4 comments:

R.Gopi said...

சாரிபா...

ம‌ன்னிச்சுக்கோன்னு ஒரு 50 கோடி தந்தி அனுப்ப‌ ஏற்பாடு செய்வோம்...

ஏதோ ந‌ம்மால‌ முடிஞ்ச‌து...

("தல" ஆரம்பிச்சு வச்ச "தந்தி கொடுக்கும் போராட்டம்" இப்பொ ராமகிருஷ்ணன் அவர்களுக்கு உபயோகப்படட்டும்...)

r.selvakkumar said...

அவரது மனநிலையை தெளிவாக உணர்த்திவிட்டார்.

C said...

அப்போ நம்ம வலை உலகத்துல உலாவர சாமியார்?

Anonymous said...

// ("தல" ஆரம்பிச்சு வச்ச "தந்தி கொடுக்கும் போராட்டம்" இப்பொ ராமகிருஷ்ணன் அவர்களுக்கு உபயோகப்படட்டும்...)//

அது ’”தல” இல்லை
தள.. சொன்னது!

 
Follow @kadaitheru