Tuesday, October 6, 2009

அன்புள்ள இட்லிவடைக்கு


அன்புள்ள இட்லிவடைக்கு,


குமுதத்திற்கு என் முதல் நன்றி. காரணம், ஒரு வலையை துவக்கி, எழுதவேண்டும் என்று நான் நினைத்துகொண்டிருந்த சமயத்தில், டாப் டென் வலைப்பதிவுகளில் ஒன்றாக உங்கள் பெயரை குமுதத்தில் படித்தேன்.


இட்லிவடை, வித்தியாசமான அதே சமயம் நம் அன்றாடவாழ்வில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த பெயரே என்னை கவர்ந்தது. இதைகுறித்து என் நண்பனிடம் பேசியபோது, அவன் தன்னுடைய நண்பன் ஒருவன் இட்லிவடை வலைப்பதிவில் ஆரம்ப காலகட்டங்களில் பணியாற்றி இருப்பதாக சொன்னான். 'நீயும் இட்லிவடையிலையே எழுது' என்றான்.


நடுநிலையான, நேர்மையான அதே சமயம் தங்களுக்கே உரிய நக்கல்தொனியிலான பதிவுகள் மற்ற எல்லாரையும்போலவே என் விருப்பமானது.

அது பாராளுமன்ற தேர்தல்நேரம். தொகுதி நிலவரம் குறித்த தேர்தல் அறிக்கைகள் அனுப்பும்படி கேட்டுஇருந்திர்கள். எனக்கு நன்கு பரிச்சியமான, எனது சொந்த ஊரான சிதம்பரம் தொகுதி குறித்த என் தேர்தல் அலசலே இட்லிவடையில் என் முதல் பதிவு.

தொடர்ச்சியாக 24 பதிவுகள். பதிவுக்கு பதிவு என் எழுத்தில் நான் ஏற்றிவரும் மெருகுக்கு, வலைகள் குறித்தான பரிச்சியங்களுக்கு தாங்கள் மற்றும் தங்களின் பண்பட்ட வாசகர்களின் பின்னூட்டங்களே என் ஊட்டங்கள்

கடை(த்)தெருவில் நானும் சொந்தமாய் ஒரு கடைபோடுகிறேன் என்றவுடன், அதை இட்லிவடையில் தங்கள் பாணியில் மஞ்சள்பெயிண்ட் அடித்து அறிமுக படுத்தினீர்கள்.

"நல்லது மட்டும் எழுதுங்க இன்பா" என்று நீங்கள் சொன்னதுதான் இன்று கடைதெருவில் கடை திறக்கவிருக்கும் ஒவ்வொரு கடைகாரரின் தாரகமந்திரம். என்னுடைய கடைக்கும் கூட.

நன்றிகள் பல.

என்றென்றும் அன்புடன்,
இன்பா

2 comments:

R.Gopi said...

My hearty congratulations to you Mr.INBA....

We expect more useful articles / write-ups from you as advised by IV.

சீனு said...

//நடுநிலையான//

!!!!!!!!!!!!!!!!!

 
Follow @kadaitheru