இதுவரை 7 இந்தியர்கள் மட்டுமே நோபல் பரிசை பெற்றிருந்த நிலையில் 8-வது நபராக ராமகிருஷ்ணன் சேர்ந்துள்ளார். ஏற்கனவே விருது பெற்ற வர்களில் சர்.சி.வி.ராமன், சந்திரசேகர் ஆகியோர் தமிழர்கள். ராமகிருஷ்ணனும் இதில் இடம் பிடித்துள்ளார்.
மற்ற இந்தியர்கள் வேறு துறைகளில் நோபல் பரிசு பெற்றிருக்கும் நிலையில் தமிழர்கள் 3 பேருமே அறிவியல் துறை ஆராய்ச்சி மூலம் நோபல் பரிசு பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் ராமகிருஷ்ணன் வேதியியல் துறையில் பெற்றுள்ளார். ராமகிருஷ்ணனின் ஆராய்ச்சி சாதாரணமானது அல்லது. உலகில் மிக உயரிய ஆராய்ச்சிகளில் இதுவும் ஒன்று என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நமது மனித உடலில் உள்ள ரிபோசம் செயல் பாட்டை ராமகிருஷ்ணன் யாடோயோனத், தாமஸ் ஸ்டீட்ஸ் ஆகிய விஞ்ஞானிகளுடன் சேர்ந்து ஆய்வு செய்து, முப்பரிமாண படம் உருவாக்கி இருப்பது பெரும் சாதனையாக கருதப்படுகிறது
ரிபோசம் 25 நானோ மீட்டர் அளவு கொண்டது. அதாவது 1 மில்லி மீட்டரில் 10 லட்சம் பங்கில் ஒன்றுதான் 25 நானோ மீட்டர். இவ்வளவு குறுகிய அளவுள்ள பொருளின் பணியை துல்லியமாக கணித்து முப்பரிமாண படம் உருவாக்கி இருப்பது பெரும் சாதனை.
ராமகிருஷ்ணன் கதை
ராமகிருஷ்ணனின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் சிதம்பரம். அங்குள்ள அக்ரகாரத்தில் அவரது வீடு உள்ளது.
பள்ளி பருவத்திலேயே சிறந்த மாணவராக திகழ்ந்து உள்ளார். 1952-ம் ஆண்டு பிறந்த ராமகிருஷ்ணன் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பி.யூ.சி. படித்துள்ளார். குஜராத் மாநிலம் பரோடா பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. படித்தார். அடுத்து அமெரிக்காவுக்கு மேல்படிப்புக்காக சென்றவர் ஓகியோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பி.எச்.டி. டாக்டர் பட்டம் பெற்றார்.
அடுத்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றியதுடன் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். பின்னர் யேல் பல்கலைக்கழகம், புரூக்கெலன் தேசிய ஆய்வுக்கூடம், யாத் பல்கலைக்கழகம் ஆகிய வற்றிலும் பணியாற்றினார்.
1999-ம் ஆண்டு இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பணியில் சேர்ந்த அவர் அங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதில் ரிபோசம் பற்றி தனது குழுவினருடன் 9 ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதில்தான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்து உள்ளது.
ராமகிருஷ்ணன் 1977-ம் ஆண்டில் இருந்து இதுவரை 95 ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டு உள்ளார். ரிபோசம் பற்றி மட்டும் 3 கட்டுரைகள் எழுதி உள்ளார்.
விஞ்ஞானி ராமகிருஷ்ணன் தந்தையும், தாயும் விஞ்ஞானிகள், இவர் தன்னைப் பற்றிக் கூறும் போது, "விவசாயி மகன் எப்படி விவசாயியாக இருப்பாரோ அது போல, எனக்கு விஞ்ஞான ஆர்வம் உண்டு. பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே ஆர்வம் காரணமாக, விஞ்ஞானத்தில் ஈர்க்கப்பட்டேன். பெற்றோர், டாக்டர் ஆக விரும்பினர். ஆனால் இயற்பியல், அதற்குப் பின் வேதியியல் ஆய்வில் ஈர்க்கப்பட்டேன்' என்று கூறியுள்ளார்.
நோபல் பரிசு கிடைத்து இருப்பது பற்றி ராமகிருஷ்ணன் கூறியதாவது:-
"வேதியியல் ஆராய்ச்சியில் பங்களிப்பு செய்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். இத்துறையில் நோபல் பரிசு பெறும் மூவரில் என்னையும் தேர்ந்தெடுத்தது வியப்பு அளிக்கிறது. இந்த பரிசால் நான் கவுரவிக்கப்பட்டதாக உணர்கிறேன். மரபணுக்களில் உள்ள தகவல்கள் மூலம் புரதங்களை எவ்வாறு உருவாக் குவது என்பதை கண்டறிந்துள்ளேன். இந்த கண்டு பிடிப்பு பல நோய் எதிர்ப்பு மருந்துகளை தயாரிக்க உதவும்.
இந்த பரிசுக்காக எனது பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர் களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். சிதம்பரத்தில் உள்ள அனந்தீஸ்வரர் கோவில் அக்ரஹாரத்தில் எங்கள் வீடு உள்ளது. 3 வயது வரை சிதம்பரத்தில் இருந்தேன். அதன் பிறகு எனது தந்தைக்கு பரோடாவில் வேலை கிடைத்ததால் எனது பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பை பரோடாவில் படித்தேன்.
2 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தையுடன் சிதம்பரத்தில் உள்ள பிறந்த வீட்டை சென்று பார்த்தேன். எனது மகள் டாக்டராகவும், மகன் இசைக்கலைஞராகவும் உள்ளனர். இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள்.
இந்திய அறிவியல் துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாக உணர்கிறேன். இந்திய அரசு அடிப்படை அறிவியல் துறைகளில் ஆராய்ச்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். அதன் மூலம் சுகாதாரம், தொழில் நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகள் சாத்தியமாகும்". என்று கூறியுள்ளார்.
திரு.ராமகிருஷ்ணன் அவர்களால் சிதம்பரத்திற்கு, தமிழகத்திற்கு, ஒட்டுமொத்த இந்தியாவிற்கு ஏன் அமெரிக்காவுக்கும் பெருமை.
பதிவு : இன்பா
Thursday, October 8, 2009
நோபல் தமிழர் ராமகிருஷ்ணன் கதை
Posted by கடை(த்)தெரு at 7:47 PM
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
அவருக்கு நம் அனைவரின் வாழ்த்துக்கள். தற்போது அவர் எந்த நாட்டின் குடிமகனாக உள்ளார்? அதை மட்டும் யாருமே சொல்ல மாட்டேன் என்கிறார்கள்.
ramakrishnan setteld in US and holder of US citizenship
இவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தேசியம் என்பது தனக்கு இல்லை என்று சொல்லி உள்ளார்.
இவர் அமெரிக்க குடிமகன்.
மேலும் அவர் இந்தியா ஆராய்ச்சி துறையில் முன்னுக்கு வர பல காலம் ஆகும் என்று சொல்லி உள்ளார்.
Wishes to Mr.Ramakrishnan for the NOBEL PRIZE and to Mr.Inba for this detailed write-up
Hi
Thanks for nice article. However there were few minor fatual mistakes.
1. He never studied at Annamalai Univ.
2. I believe you meant University of Utah and not Yath univ.
Would be nice if you correct those facts.
KCDesi
USA
தவறுகளை சுட்டிகாட்டியமைக்கு
மிக்க நன்றி திரு. KCDesi
அவர்களே.
அன்புடன்,
இன்பா
Post a Comment