Thursday, October 22, 2009

அம்பானி சகோதரர்களின் Gas Trouble


கடந்த 15 ஆம் தேதி,நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா, சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி ஆகியோர் ஒன்று கூடி அவசர ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள்.

மத்திய அரசின் மூன்று முக்கிய அமைச்சர்கள் இப்படி ஆலோசிக்கும் அளவுக்கு என்ன நடந்துவிட்டது நம் நாட்டில்...??

இந்திய பொருளாதாரத்தின் தலைஎழுத்தை தீர்மானிக்கும் ஒரு குடும்பத்தின் இரண்டு சகோதரர்களுக்கிடையே நடக்கும் மோதல்தான் அமைச்சர்களின் இந்த கூட்டத்திற்கு காரணம்.

RIL எனப்படும் Reliance industries Limited - இது முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது. RNRL எனப்படும் Reliance Natural Resources Limited - இது அவர் சகோதரர் அனில் அம்பானிக்கு சொந்தமானது.

2005ம் ஆண்டுக்கு முன்பு வரை ரிலையன்ஸ் நிறுவனங்கள் அனைத்தும் ஒரே குழுமமாக இருந்தன. அதன் பிறகு குடும்ப பாகப் பிரிவினை ஏற்பட்டது. முகேஷுக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் கிருஷ்ணா கோதாவரி படுகை வாயு உற்பத்தியில் அனிலின் ஆர்என்ஆர்எல் நிறுவனத்துக்கு குறைந்த விலையில் காஸ் சப்ளை செய்ய ஒப்புக் கொள்ளப்பட்டது.


இப்போது வாயு உற்பத்திக்கான செலவுகள் அதிகரித்து விட்டதால், பழைய விலையில் சப்ளை செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்து வருகிறது. இதுதொடர்பாக, மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அனில் அம்பானிக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது.


அந்த தீர்ப்பு, Reliance to sell 28 million metric standard cubic metres of gas a day at $2.34 per mBtu for 17 years to RNRL என்கிறது.

அதை எதிர்த்து அண்ணன் முகேஷ், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கிறார்.

இதன் காரணமாக..நேற்று சந்தை ஒரு பெரிய சரிவை சந்தித்து இருக்கிறது.மும்பை பங்குச் சந்தை 213 புள்ளிகள் குறைந்து, 17,009 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 50 புள்ளிகள் குறைந்து, 5,063 புள்ளிகளுடனும் முடிந்தது.


வழக்கை தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையிலான பென்ச் விசாரித்து வருகிறது. நீதிபதிகள் கூறுகையில், "பிரச்னையை இரு நிறுவனங்களும் மத்தியஸ்தர் அல்லது நடுவர் தீர்ப்பு மூலம் தீர்த்துக் கொள்ள முன்வர வேண்டும்" என்றனர்.


"இந்த வழக்கின் இறுதிகட்ட நிலையிலும், நானும் முகேஷ் 'பாய்' யும்(??) இந்த பிரச்சனையை சுமுகமாக பேசி தீர்க்க முடியும் என தான் நம்புவதாக(!) கூறுகிறார் அனில் அம்பானி. அவர்கள் இருவரும் ஒருமித்த கருத்தை எட்ட விரும்பினால் என்று ஒரு கண்டிஷன்(?) போட்டும்இருக்கிறார் அவர்.

இந்திய சந்தையின் இந்த வாய்வு தொல்லை(Gas Trouble) விரைவில்
குணமடையும் என்று நம்புவோம்.



கடைக்காரர் கமெண்ட் :
நூறு கோடி பேரு இருக்குற நம்ம நாட்டோட மார்க்கெட்டையே ஒரே ஒரு கடைக்காரர்(!) குடும்பந்தான் ஆட்டிப்படைக்குது.... பாத்தீங்களா..









பதிவு : இன்பா

4 comments:

Unknown said...

உங்கள் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட , உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்களுக்கு நீங்கள் கடைசியாக எழுதிய ஐந்து பதிவுகளை சிறு படங்களாக வலது அல்லது இடது பக்கத்தில் இடம்பெறச் செய்ய இந்த gadaget ஐ இணையுங்கள்
gadget ஐ பெற இங்கே செல்லவும்

உங்கள் வலைதளத்தை தரவரிசைப்படுத்த (page-rank)


tamil10 .com சார்பாக
தமிழினி
நன்றி

velji said...

குறும்பான தலைப்பு..,ரசித்தேன்!

R.Gopi said...

த‌லைப்பும், க‌டைசி வ‌ரியும் சூப்ப‌ர்....

"த‌ல‌" குடும்ப‌ம் கூட‌... இதே ரேஞ்ச்தானா?? இன்னும் ஜாஸ்தியா??

பெசொவி said...

நூறு கோடியானாலும், ஆறு கோடியானாலும், ஒரு குடும்பம்தான் ஆளணும்னு எங்களுக்கு ஏற்கெனவே தெரியுமப்பு!

 
Follow @kadaitheru