Saturday, October 10, 2009

பேராண்மை - சினிமா பார்வை


கடற்கரை கிராமங்கள் மீதான என் காதல் அதிகரித்துவிட்டது இயக்குனர் ஜனநாதனின் 'இயற்கை' பார்த்தபின். அதிலும், "காதல் வந்தால் சொல்லி அனுப்பு" பாடல்.வைரமுத்துவின் வரிகளும், வித்யாசகரின் இசையும், பாடல் படமாக்கபட்ட விதமும் கடல் அலைகள் பாதங்களை வருடும் இனிமை.

அடுத்து, 'ஈ' , வித்தியாசமான தலைப்பில் வித்தியாசமான படம். ஒரு சமுக விரோதி , சமுக பிரச்சினைகளுக்கு எதிராக போராடும் போராளியாக பரிணமிக்கும் கதை. அணுகுமுறையில் அசத்திஇருந்தார் ஜனநாதன்.

இயக்குனர் எஸ்பி ஜனநாதன் மீதான எதிர்பார்ப்புகளோடு, ஜெயம் ரவியின் கேரியரில் ஒரு முக்கியமான படமாக உருவாகி இருக்கிறது தீபாவளிக்கு வெளிவர இருக்கும் 'பேராண்மை'.

ஒரு வனத்துறை அதிகாரி, தனிதிறமைகள் உடைய ஐந்து பெண்களுடன், திவிரவாதிகளிடம் சிக்கிய வெளிநாட்டு பணய கைதிகளை மீட்பதுதான் படத்தின் மைய கதை.

ஜெயம் ரவியுடன், ஐந்து கதாநாயகிகள். ஆனால் வழக்கமான சினிமாக்களில் வரும் காதல் இல்லை. மேலும் படத்தில் அவருக்கு டூயட்டும் கிடையாது. படத்தில் உள்ள ஹைலைட் விஷயம், வில்லனாக தமிழில் அறிமுகம் ஆகும் ஹாலிவூட் நடிகர் ரோலான்ட். டெர்மினேட்டர் படவரிசையின் நான்காம் பாகத்தில் அர்னால்டுக்கு பதிலாக நடிக்கவிருப்பவர் இவர்தான்.

பேராண்மை படம் முழுக்க அடர்ந்த காடு, மலை, காட்டாறு போன்ற லொக்கேஷன்களில் படமாக்கப்பட்டிருக்கிறது. காரணம் படத்தின் கதைக்களமே காடுதான். பிலிம் நெகட்டிவை மிச்சப்படுத்துவதற்காக கேமராவை புது மாதிரியாக வடிவமைத்திருக்கிறார்கள். இந்த கேமராவின் மூலம் படம் பிடிக்கும்போது 1 லட்சம் அடி நெகட்டிவிற்கு 2500 அடி நெகட்டிவ் மிச்சமாகிறதாம். இதற்காக வெளிநாட்டிற்கு கேமராவை அனுப்பி அங்கு இந்த புதிய தொழில் நுட்பத்திற்கு தகுந்தது மாதிரி கேமராவில் மாற்றங்கள் செய்து வரவழைத்து இருக்கிறார்கள். த்ரீ பர்பரேஷன் கேமரா என்ற இந்த கேமராவின் மூலம் ஒரு படத்திற்காகும் நெகட்டிவ் செலவை கனிசமாகக் குறைக்க முடியும். படத்தின் ஒளிப்பதிவாளர் சதிஷ்குமார்.

இந்த படத்திற்க்காக போடப்பட்ட விண்வெளி ஆராய்ச்சிமைய செட்டை பார்த்துவிட்டு பாராட்டிஇருக்கிறார் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை. படத்தின் கலை இயக்குனர் செல்வகுமார்.

இயற்கைக்கு பின் மீண்டும், வித்யாசாகர் - வைரமுத்து கூட்டணியில் ஐந்து பாடல்கள். ஒரு மெலடி பாடலை சாதனாசர்கம் பாடிஉள்ளார். when the boys என்ற ஆங்கில பாடலை, லண்டனை சேர்ந்த பிரபல கவிஞர் ஓப் ஏ‌ரிஸ் எழுத,பாடலை சோனியா ராபர், செயின்ட் ஜோன்ஸ் பாடியுள்ளனர்.

லண்டன் அய்ங்கரன் தயாரிப்பில் ஒரு இந்திய பின்னணியில்,ஹாலிவூட் பாணியில் உருவாகி வருகிறது 'பேராண்மை'. பேராண்மை என்று மற்றுமொரு படமும் உருவாகி வருகிறது. இதற்காக ஒரு இயக்குநர், கேமராமேன் என்று ஒரு தனி யூனிட்டே செயல்பட்டு வருகிறது. நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பேராண்மை படம் பற்றிய அனுபவங்கள், மேக்கப், காஸ்டியூம், ஆர்ட் டிபார்ட்மெண்ட் வேலைகள், படப்பிடிப்பு பயணங்கள் என பேராண்மை படம் உருவாகும் விதம் பற்றிய அனைத்தும் படம் பிடிக்கப்பட்டு வருகிறது.

"கேரக்டராக மாறுவது எவ்வளவு கஷ்டம்ங்கிறதை இப்போ உணர்றேன்" என்கிறார் பேராண்மை அனுபவம் குறித்து ஜெயம் ரவி. No pain, No gain என்பதை படத்தின் வெற்றி உணர்த்தும் என்று எதிர்பார்ப்போம்.




படவிளம்பரங்களில், இயக்குனர் ஜனநாதன் பயன்படுத்திஇருக்கும் பின்வரும் வாசகம், படத்தின் கதையை உணர்த்துகிறது


கற்பி,ஒன்று சேர்,புரட்சி செய் - டாக்டர் அம்பேத்கர்.


பதிவு : இன்பா

4 comments:

Anonymous said...

JayamRavi havnt taste the success in other than remake movies.. Even the director's Iyarkai and E are good movie dint succeeed commercially. Lets wait...

R.Gopi said...

I think this movie will definitely be different from all other usual commercial formula masala movies...

கடை(த்)தெரு said...

கடைத்தெருவுக்கு
வருகை தந்தமைக்கு
நன்றி திரு.கோபி

அன்புடன்
இன்பா

ஆர்வா said...

இந்த மாதிரி திரைப்படங்கள் நிச்சயம் வெற்றி பெறணும்..

 
Follow @kadaitheru