Thursday, November 27, 2014

'அரசியலுக்கு வர ரஜினிக்கு தகுதி இல்லை' - சீமான்


 'அரசியலுக்கு வர ரஜினிக்கு எந்த தகுதியும் இல்லை " என்று கூறி இருக்கிறார் சீமான்.

அவர் விடுத்துள்ள அறிக்கை இங்கே...

"ரஜினியை பலரும் அரசியலுக்கு அழைக்கிறார்கள். மக்களுக்காக போராடிய நல்லக்கண்ணு, நெடுமாறன் ஆகியோருக்கு இல்லாத தகுதி அப்படி ரஜினி இடத்தில் என்ன இருக்கிறது?

நம் மண்ணிற்காக, தமிழ் மொழிக்காக, இயற்கையை காக்க தங்கள் வாழ்க்கையை அற்பணித்த பலர் இருக்கையில் எதற்காக ரஜினியை முன்னிறுத்துகிறார்கள்.

அதை ஆதரிக்கவும் ஆட்கள் உள்ளனர். இந்த தமிழ் சமூகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது?

ரஜினி மக்களுக்காக ஏதாவது ஒரு விஷயத்திலாவது உறுதியாக இருந்துள்ளாரா?

அரசியலுக்கு அவர் வரட்டும் பார்த்துவிடலாம்.

அவர் தனியாக வந்தாலும் சரி, கூட்டணி வைத்து வந்தாலும் சரி. தேர்தல் வரட்டும் பிரபாகரனின் தம்பிகளா? அல்லது ரஜினி ரசிகர்களா? என்று பார்த்துவிடலாம்.

2016ம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியா இல்லை கூட்டணி வைப்பீர்களா என்று கேட்கிறார்கள். தனித்து தான் போட்டி என்று நாம் பலமுறை சொல்லிவிட்டோம். வாழ்வோ, சாவோ தனித்து தான் போட்டி.

இங்கே எதற்காக பிரபாகரனை தலைவர் என்று கூறி அவருக்கு விழா எடுக்கிறீர்கள் என கேட்கிறார்கள். எனக்கு சம்பந்தமே இல்லாத பலர் இந்த மண்ணில் சிலருக்கு தலைவர் ஆகுகையில் தமிழின விடுதலைக்காக போராடிய பிரபாகரனை தலைவர் என்று கூறக் கூடாதா? சோனியா அன்னை ஆகலாம், நேரு மாமா ஆகலாம். ஆனால் தமிழுக்காக, மண்ணிற்காக போராடிய பிரபாகரன் அண்ணனாகக் கூடாதோ? அண்ணன் வழியில் நம் பயணம் தொடரும்

-என்றார் சீமான்.

ஈழத்தமிழர்கள் முதுகில் ஏறி 'தலைவர்' ஆக துடிக்கும் சீமான், ஏன் தனித்து போட்டியிட வேண்டும்?

. இவர் குறிப்பிட்டு இருக்கும் நல்லக்கண்ணு, நெடுமாறன்  ஆகியோரை முன்னிறுத்தலாமே???

அரசியலுக்கு வர ரஜினிக்கு தகுதியில்லை என்றால், ஊருக்கு ஊர் 'பிரபாகரன்' பட்த்தை போட்டுக்கொண்டு உண்டியல் குலுக்கும் சீமானுக்கு, தமிழினத்தை பற்றிப் பேச எந்த தகுதியும் இல்லை.

ஒவ்வொரு முறை சீமானின் வாய்ச்சவடால்களை கேட்டும்பொதெல்லாம், பின்வரும் பழமொழி நினைவுக்கு வருகிறது.

"கேக்கறவன், கேணையா இருந்தா....."

Wednesday, November 26, 2014

காடு - 'கத்தி'க்கூர்மைசமிபகாலமாக தமிழ்சினிமாவில் மிகவும் ஆரோக்கியமான போக்கு ஒன்று உருவாகி இருக்கிறது. அது, சமகால சமுதாய பிரச்சனைகளை பேசும் போக்கு.

கிரிக்கெட்டில் சாதியம் பேசும் ஜீவா,அரசியல் தெளிவு பற்றி பேசும் மெட்ராஸ், எல்லாவற்றும் ஒருபடி மேலே சென்று பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலை பேசியது கத்தி.  

 விஜய் போன்ற முண்ணனி நடிகர் ஒருவர் மக்கள் பிரச்சனைகளை, திரைப்படத்தில் முழங்கி இருப்பது, எம்.ஜி.ஆர் படங்களுக்கு பிறகு கத்தியில் மட்டுமே பார்க்கமுடிந்து இருக்கிறது. கேப்டன் பிரபாகரனையும் இந்த லிஸ்டில் சேர்க்கலாம்

இந்த வரிசையில், "காடு"

இப்படி ஒரு படத்தை துணிந்து தயாரித்த நேரு நகர் நந்து அவர்களையும், தனது முதல் படத்திலேயே இப்படி ஒரு கதைகளத்தை தேர்வு செய்த இயக்குனர் ஸ்டாலின் ராமலிங்கத்தையும் எவ்வளவு வேண்டுமானலும் பாராட்டலாம்.

காடு - தலைப்புக்கு ஏற்றார்போல காட்டின், மரங்களின் அருமையை பேசுகிறது.

எப்படியாவது வனத்துறை அதிகாரி ஆகவேண்டும் என்று விரும்பும் ஒருவன், அந்த வேலைக்கு பணம் கொடுக்க சந்தனமரம் கடத்துகிறான்.
அவனுக்காக பழி ஏற்று, சிறைக்கு செல்லும் நண்பன் விதார்த், அங்கு புரடசியாளர் சமுத்திரகனியை சந்திக்கிறார். அதன் பிறகு, அவர் வாழ்வில்,குறிப்பாக கொள்கைகளில் நிகழும் மாற்றமே "காடு" படத்தின் கதை.
 
"நாங்க உயிர் வாழ்வதற்க்காக காட்டில் இருந்து, எத வேண்டுமானாலும் எடுத்துகொள்வோம். ஆனா, வசதியா வாழறதுக்காக ஒரு செடியை கூட வெட்டமாட்டோம்" என்னும் வசனமே படத்தின் உயிர் நாடி.

சமுத்திரகனி பேசும் சிந்தாந்தகளும், வசனங்களும். படத்துக்கு இன்னும் வலு சேர்த்து இருக்கின்றன. இதுபோன்ற ஒரு வேடத்துக்கு இவரைவிட வேறுயாரும் பொருந்தவாய்ப்பில்லை.

'கத்தி' படத்தில் விஜய் பேசியதைவிட,கூர்மையான வசனங்கள். இதுபோன்ற டிரெண்டை அமைத்து தந்து இருக்கும் விஜய்-முருகதாஸ் கூட்டணிக்கு நாம நன்றி சொல்லலாம்.

குறிப்பாக, "போராட்டம் என்றால் ஒன்று வெற்றி அல்லது தோல்வி.. சமாதானம் என்று ஒன்று இருக்கவே முடியாது. உலக சரித்திரத்தில், எங்கெல்லாம் சமாதானம் முன்வைக்கப்பட்டதோ அங்கெல்லாம் அதிகாரம் ஜெயித்து இருக்கு". என்று அவர் விதார்த்துக்கு கூறுவது.

இதற்கு நம் இந்தியாவைவிட ஒரு சிறந்த உதாரணம் இல்லை. கடைசிவரை சமாதானம் வேண்டாமென்று புலித்தலைவர் மறுத்ததின் அர்த்தமும் இதுவே.

அதைபோன்று, கூத்துக்கலைஞராக நடித்து இருக்கும் ஒரு பெரியவர். காவல்துறையினர் சிறையில் அவரை அடித்து உதைக்கும்போது, அவர் கூத்து கட்டிய காட்சிகளை பார்க்கும்போது, ஒடுக்கப்பட்டவர்கள் மீதான அதிகாரவர்க்கத்தின் தாக்குதல்கள் நம் மனதை பிளக்கின்றன.

படத்தின் பாடல்களை பற்றி இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

யுகபாரதியின் யதார்த்தமான வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மிகத்தேவையான அளவுக்கே இசைக்கருவிகளை பயன்படுத்தி இருக்கிறார் இசைஅமைப்பாளர் கே. தமிழ்சினிமாவில் இது புதிய முயற்சி. மேலும், தமிழிசை கருவிகளின் ஒலியை காட்சிகளில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

ஆகா,ஒகோவென்று புகழும் அளவுக்கான படமில்லைதான்.  கம்யுனிச நெடி படத்தில் தூக்கலாகவே இருக்கிறது.

ஆனால், படத்தின் கதைகளத்துக்காகவும், படத்தில் சொல்லி இருக்கும் கருத்துகளுக்காகவும்,குறைகளை மறந்துவிட்டு  நாம கொண்டாட வேண்டிய படம்.....காடு,

-இன்பா

Monday, November 24, 2014

ஐ vs என்னை அறிந்தால் - ஒரு 'ஜல்லிகட்டு' பார்வை
 \

தமிழரின் வீர விளையாட்டான, 'ஜல்லிகட்டு' க்கு நீதிமன்றம் தடை விதித்துவிட்டது.

ஆனால், உலக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, ஒரு பெரும் ஜல்லிக்கட்டு காத்திருக்கிறது.

ஜில்லாவோடு போன பொங்கலில் மோதி, வெற்றி பெற்றது வீரம். இந்த பொங்கலுக்கும் அதைபோன்ற ஒரு கடுமையான போட்டி 'தல'யின்
என்னை அறிந்தால் படத்திற்க்கு காத்திருக்கிறது.

அது, இயக்குனர் ஷங்கரின் "ஐ".

"ஐ" - பெரும் பிரம்மாண்டமான படம் என்றாலும், படத்தின் பாடல்கள், டிரைலர் போன்றவை வெளிவந்து சுமார் இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.

தீபாவளிக்கு வெளிவருவதாக திட்டமிடபட்டு, அப்பொதே படம் வெளிவந்து இருந்தால், எதிர்பார்ப்பு நிலைத்து இருக்கும், ஆனால், இந்த தாமதம், படத்தின் சூட்டை குறைத்துவிட்டது.

படத்தின் பாடல்களும் ஆகாவென்று இல்லை. அதே சமயம் பாடல்களை படமாக்குவதில் ஷங்கருக்கு இணை இந்திய சினிமாவில் இல்லை என்பதே நிதர்சனம். எவ்வளவுதான் பிரம்மாண்டம் என்றாலும், படத்தின் மூலம் காதல் கதை.

ஸ்லிம் விக்ரம், ஒநாய் மனிதனாவது, காதலியை கடத்திக்கொண்டுபோய் வைப்பது என்பதெல்லாம் ஆங்கில படங்களில் பார்த்த விஷயங்கள்தான். எதிர்ப்பார்ப்பை எந்த அளவு நிறைவேற்றும் என்பது தெரியவில்லை.

"என்னை அறிந்தால்" - ஷங்கர்-விக்ரம்-ரகுமான் கூட்டணிக்கு சற்றும் குறைந்தல்ல அஜித்-கவுதம்-ஹாரிஸ் கூட்டணி. குறிப்பாக, படத்தின் பாடல்கள் "ஐ"யை விட சிறப்பாக இருக்கும் என நம்பலாம்.  காரணம், கவுதம்-ஹாரிஸ் என்றாலே, அது மிகப்பெரிய மியுஸிக்கல் ஹிட்தான்.
கூடுதலாக, 'தல'.

கவுதமுக்கு மிகப்பிடித்த போலிஸ் அதிகாரியின் பயணம். அவருக்கே உரித்தான சென்டிமெண்ட் ஆக்ஷனின் அஜித் அழகாக பொருந்துவார்.
பெண்கள் மத்தியில் இப்படம் அதிகம் ரீச் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது

"என்னை அறிந்தால்" படத்தைவிட, "ஐ" படத்துக்கு கூடுதல் திரைஅரங்குகள்  ஒதுக்கப்பட்டு விட்டது.

இரண்டு படங்களும் போட்டியில் சளைத்தவை இல்லை என்றாலும், படம் ரிலிஸான முதல் வாரத்தில் "ஐ"  வசூலில் முந்ததும்

அடுத்தடுத்த வாரங்களில் " என்னை அறிந்தால்" முதலிடம் வரும் என்பதே எங்களின் கணிப்பு. பார்ப்போம்.

ரசிகர்களுக்கு 'தல' பொங்கலோடு, "ஐ" விஷுவல் விருந்து காத்திருக்கிறது.


Sunday, November 23, 2014

காணாமல்போன கழுதைகள்


பிரபல ஆங்கில கவிஞனரான ஆர்.எல். ஸ்டீவன்சனுக்கு கழுதைகளின்மேல் தனி மரியாதை இருந்தது. அதனைப் போற்றி பெரிய கவிதையே எழுதி வைத்தார். கவிதையின் மையப் பொருளாக அதன் சகிப்புத் தன்மை போற்றப்பட்டது.

மக்கள் அதனிடமிருந்து இக்குணத்தை கற்க வேண்டும் என்ற அவர் விருப்பம் அதில் தொனித்தது. நெப்போலியனின் தங்கை தன் முகச்சுருக்கத்திற்கு கழுதை பாலில் மருந்து தயார் செய்து பூசிக் கொண்டாளாம், ஹிப்போகிரேட்டஸ் கழுதை பாலை சர்வ ரோக நிவாரணியாக புகழாரம் சூட்டியுள்ளார். கிளியோபாட்ரா தினமும் கழுதை பாலில்தான் குளித்தாளாம். அதற்காக 700பெண் கழுதைகள் அவள் அந்தப்புரத்தில் வளர்க்கப்பட்டது. பாவம் அதன் குட்டிகளின் கதி என்னாயிருக்கும்? இப்படியெல்லாம் படாத பாடுபட்டு தன் மேனியழகை பளபளப்பாய் வைத்துகொண்ட அவர் அல்பாயுசில் பாம்பைக் கொத்த விட்டு இறந்து போனதை என் மனம் ஏற்க மறுக்கிறது.

போன மாதம் புத்தக நிலையத்திற்கு சென்று புத்தகங்களை வாங்கினேன் எனது 7 வயது மகளும் அவள் பங்கிற்கு அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ஆங்கில படக் கதைப் புத்தகத்தை வாங்கிக் கொண்டாள் . ஒரு வாரத்திற்கு பிறகு அவள் என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தாள். கதையில் அலிபாபாவிற்கு ஒரு கழுதை நண்பனாக உள்ளதை போல் எனக்கும் ஒரு கழுதைக் குட்டி உடனடியாக வேண்டும் என்றாள். கோரிக்கையின் உப பங்காக முதலில் தான் கழுதையை நேரில் பார்க்க வேண்டும் என்றாள். ஒரு தந்தையின் தார்மீக கடமையாகக் கருதி எனது இருசக்கர வாகனத்தில் தேனியின் ஒவ்வொரு தெருவழியாகவும் நாயாக அலைந்தும் கழுதையைக் காணவில்லை.

நான் சிறுவனாக இருந்தபோது நிறையக் கழுதைகள் என் வீட்டிற்கு அருகே நின்றிருக்கும். தற்போது நவீன நகர்மயமாகிப் போன தேனி நகரத்தில் துவைப்பவர்கள் தங்கள் துணிகளைப் பழைய எம்.80 வண்டியிலோ, சற்று கூடுதலாக இருந்தால் பைக், டெம்போ வண்டியில் ஏற்றிச் சென்று மெஸின் மூலமே துவைக்கின்றனர். அரிதினும் அரிதாகவே ஆற்றில் துவைப்பதை காண முடிகிறது. அக்கம்பக்க நண்பர்களிடம் கழுதைகளின் இருப்பிடம் பற்றிக் கேட்ட போது கேலிச் சிரிப்பே மிஞ்சியது. கஜினியின் விடா முயற்சியோடு நான்கு வாரத் தேடலுக்கு பின் தேனியின் புறநகர் பகுதியில் ஒரு தாயும் குட்டியும் மேய்வதைக் கண்டோம். என் மகளும் மிகவும் வாஞ்சையோடு அதனை அணுகினாள். நட்புடன் பார்த்த தாயும், துள்ளலுடன் வந்த சேயும், எந்த வித தடையுமின்றி ஓடிச்சென்ற என் மகளும் என்னை மிகவும் மகிழ்ச்சியுறச் செய்தனர்.

மனித வளர்ப்பில் ஆளாக்கப்படும் உயிரினங்களில் கழுதை மிகவும் கேவலமாகவும், அவமானத்துக்குரிய ஜீவனாகவும் உள்ளது. உண்மையில் குதிரைகளைப் போல் ஏன் அதைவிடவும் ஒருபடி மேலே பயனுள்ளதாகவும் உள்ள மிருகம் இது. குளம்பி வகையைச் சேர்ந்த கழுதைகள் மனித சமுதாயத்தோடு பண்ணெடுங்காலமாக தொடர்பு கொண்ட ஒன்று. மெசபடோமிய நாகரீக படிமங்களில் கழுதைகள் மனிதனோடு தொடர்பு கொண்ட சான்றுகள் சிக்கியுள்ளன.

மிகுந்த பொறுமையும், சகிப்புத் தன்மையையும் தன் சிறப்புக் குணங்களாக  கொண்ட இவ்வினம் தன்னை விட 1 1/2 மடங்கு அதிக எடையைச் சுமக்கும் திறன் கொண்டது. இன்றும் முஸ்லீம் நாடுகளில் அதிகமாக தங்கள் பயணங்களில் உபயோகிக்கப்படும் உயிரினம் கழுதைகள். சுமார் 50 ஆண்டுகள் வரை வாழும் இவை, மனிதனால் மிக அதிகபட்சமாக உபயோகிக்கப்பட்டு இறுதி நாட்களில் நோய்வாய்பட்ட நிலையிலேயே தெருக்களில் கைவிடப்படுகிறது. யாருடைய கவனத்தையும், மனதில் சஞ்சலத்தையும் இன்று வரை இந்த விலங்கினம் இந்தியாவில் ஏற்படுத்தியது இல்லை என்பதுதான் சுடும் உண்மை.

வளர்ந்தவை 3 அடி உயரமும், 5 அடி நீளமும் கொண்டவையாக இருக்கும். இதன் பிறப்பு அடர்ந்த வனப்பகுதியாகவே இருந்திருக்கும் என்கிறார் இது தொடர்பான ஆய்வு செய்த டாக்டர் டயனா நானன் . பின்னர் மனிதனால் பழக்கப்படுத்தப்பட்டன என்பது இவரது கருத்து. கூட்டமாக வாழ விரும்பும் இவைகள், 3 வயதிற்குப் பிறகு பருவத்திற்கு வருகின்றன. வயதில் முதிர்ந்த ஆணும் சரி, இளம் வயதினரும் சரி, பெண்ணைக் கவர்வதில் ஆவேசமாக போட்டி போடுவதில்லை. பெண்ணானது, சரிசமமாக உடலுறவு கொள்கிறது. ஆண்களுக்கு இடையேயோ அல்லது பெண்களுக்கு இடையிலோ போட்டி எனும் போது ஒன்றையொன்று வெறியோடு கடித்துக் கொள்கிறது. இதன் பற்கள் வலிமையானவை என்பதால் பலமான காயமேற்பட வாய்ப்புள்ளது. சந்தோஷ தருணங்களில் இவை அதே போல் செல்லமாக கடித்துக்கொள்ளும் நிகழ்வும் நிகழ்கிறது.

ஆண்குறியின் நீளம் அதிகமென்பதால் பெண்ணின் புழைக்குள் நுழைக்க அதிக முயற்சி தேவைப்படுகிறது. உணர்ச்சி வேகத்தில் இதன் விந்தும் உடனடியாக வீணாக வெளியேறி பெண்ணின் முதுகுப்புறத்தில், தொடையில் சிந்த நேரிடுகிறது. தவிர காதல் களியாட்டத்தின் ஒரு அங்கமாக உடலுறவு கொள்ளும் சமயம் பெண் திடீரென விலகி ஓடுவதும், பின்புறமாக எத்துவதுமாக இருப்பதும் ஆணின் பல முறை முயற்சிக்க நேரிடுகிறது. 10 நாட்கள் நீடிக்கும் இந் நாடகத்திற்குப் பின் கருவுறும் பெண் ஒரு வருடத்திற்குப் பிறகு குட்டிபோடும். குட்டியை மிகுந்த அக்கறையோடு வளர்க்கும். இளம் குட்டியைத் தாக்க நினைக்கும் எந்த உயிரினத்தையும், தயவு தாட்சண்யமின்றி கடித்துக்குதறும். ஒரு வேளை 300 மி.லி சுரக்கும் இதன் பாலைக் கறந்து இன்றும் கிராமத்தில்  விற்பனை செய்கின்றனர். பிறந்த குழந்தைகளுக்கு கழுதைப்பாலை சுமார் 10 சொட்டுகள் வரை குடிக்கக் கொடுப்பதன் மூலம் அதற்கு நோய் எதிர்ப்பு சக்தி வளரும் என்றும், பேய் பிசாசுகள் அண்டாது என்ற நம்பிக்கையும் உண்டு.

கழுதைகள் பேதமின்றி உணவைத் தின்கின்றன. மிக அதிகபட்சமாக உண்ணும். இவ்வுணவு மிக வளர்ந்த குதிரை உண்ணும் உணவை விட அதிகமாக இருக்கும். இதன் ஜீரணமண்டலமும், மிகச்சிறப்பானது. உலகிலேயே  பெரிய விலங்கினங்களில் மிகச்சிறந்த ஜீரண உறுப்பைக் கொண்டது கழுதைகளே. இதன் சாணமானது ,சத்துக்கள் முற்றிலும் உறிஞ்சப்பட்ட சக்கையாகவே வெளியேறும். இதனால் இது உரமாக்கப்படுவதில்லை. மலைப்பிரதேசங்களில் காய்ந்த இதன் சாணம் குளிர்காலங்களில் எரியூட்டப் பயன்படுகிறது. இதன் சிறுநீரும் காட்டமான நெடியுடையது. பழங்குடிகள், கொசு விரட்டியாக, பாம்பு போன்ற ஊர்வனம் தங்கள் குடிசைக்குள் வராமல் இருக்கவும் ,  இருப்பிடம் சுற்றி தெளிக்கின்றனர். அமெரிக்க பல்கலைக்கழகம்,

இதன் செரிமாண சக்தி குறித்து தொடர் ஆய்வு செய்து வருகிறது. இதன் மூலம் மருந்துகள் தயாரிக்கவும் முயற்சி செய்கிறது. ஸ்மித் சோனியன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் நைடால் எப்படி இதற்கு இப்படிப்பட்ட அதிக சக்தி படைத்த ஜீரண மண்டலத்தை இயற்கை படைத்துள்ளது என வியப்படைகிறார். அது இன்று வரை புரியாத புதிராகவே உள்ளதாம்!.

கழுதைகளின் காது மிகப் பெரியதாக இருப்பது இதன் உடலை மித வெப்பமாகவே நிலை நிறுத்தி வைக்க உதவுகிறது. இதன் மூலம் ரத்தமானது பிற பகுதிகளுக்கு செலுத்தப்படுகிறது. அதன் வாலும், மாட்டிற்கு உள்ளது போல நுனியில் அதிக முடி கொண்டது. உண்ணிகளை, ஈக்களை விரட்ட மட்டுமின்றி ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளவும் இது உதவுகிறது. மிக நுண்ணிய ஒலியையும், உணரும் இதன் காதுகள், எதிரிகளிடமிருந்து தன்னை காத்துக் கொள்ள எச்சரிக்கும் ஒரு கருவியாகவும் செயல்படுகிறது. தனது குறைந்த பார்வைத் திறனை காதுகளின் செயல்பாட்டின் மூலம் சமன் செய்து கொள்கிறது.

கழுதைகளின் ஒலி சற்று வித்தியாசமானது. சுமார் 7 விதமாக ஒலி எழுப்பும், ஒவ்வொரு ஒலியின் அலைவரிசையும் ஒரு குறியீடாக இருக்கும். உதாரணமாக நீண்ட ஒலிதான் காமத்தோடு இருப்பதையும் கர்.......கர்....என்ற ஒலி கோபத்தோடு இருப்பதையும், புர்.....புர் என்ற உறுமும் ஒலிதான் உண்ணும் உணவில் பூச்சிகள் அல்லது ஒவ்வாத பொருட்கள் இருப்பதையும் அதே உறுமும் ஒலி படுத்துக்கொண்டிருக்கும் போது வெளியிட்டால்தான் தூக்கத்திற்குத் தயாராக இருப்பது என பல்வேறு சமிக்ஞைகளின் அடையாளமாகின்றது.

அபூர்வ உயிரினமான கழுதைகள் இன்று இந்தியாவில் அருகி வருகின்றன. பம்பாய், கொல்கத்தா, போன்ற நகரங்களில் பல வயதான கழுதைகள்,
ஊனமுற்றும், நோய்களுக்கு ஆளாகியும் அநாதையாக விடப்படுகின்றன. கிராமங்களில், பாலியல் நோய்களால் தாக்கப்பட்ட, போதை பழக்கத்திற்கு ஆளான ஆண்கள், கழுதைகளோடு உறவு கொண்டால் நோய் தீர்ந்து போகும் என்ற தவறான நம்பிக்கையால் பல பெண் கழுதைகள் ,பாலியல் நோய் தொற்றுக்கு ஆளாகி இறந்து போகின்றது. இது திடுக்கிடும் உண்மையாகும். இதன் வாலில் பனை ஓலையை கட்டி தீ வைத்து மிரண்டு ஓடும் அதன் அழகை குரூரமாக ரசிக்கும் பல மக்களை கிராமங்களில் நான் பார்த்திருக்கிறேன்.

இவ்வாறு இவைகள் கஷ்டப்படுவதையெல்லாம் அறிந்த பேராசியரும், உயிரின ஆதரவாளருமான டாக்டர் ஜீன் மற்றும் அவரது துணைவி பால் ஆகியோர் அமெரிக்காவில் உள்ள தங்கள் சொத்துக்களை எல்லாம் விற்று கொல்கத்தாவில் ஒரு காப்பகம் துவங்கி உள்ளனர். முதிர்ந்த, நோய்வாய்ப்பட்ட, கைவிடப்பட்ட கழுதைகளை பேணிக் காப்பது இவர்களின் குறிக்கோள்.

கழுதைகளுக்கு 24 மணி நேரமும், மருந்தளிக்க மருத்துவர்களும் அழைத்து வர ஆம்புலன்சும் இங்குள்ளன. நேரம் கிடைக்கும் போதெல்லாம் பள்ளிகளுக்கு சென்று கழுதைகளின் சிறப்பு குறித்து வகுப்புகள் எடுக்கின்றனர். நிறைய துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்து விநியோகம் செய்கின்றனர். துவக்கத்தில் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளான இவர்கள் தற்போது புதுவித நெருக்கடியைச் சந்தித்துள்ளனர். நம் நாட்டில் உள்ள கழுதைகள் மேல் இவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை  என ஒரு மதவாத அமைப்பு கேள்வி கேட்டும்,   நிதிவரத்து குறித்தும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

மிக நுண்ணிய அறிவு படைத்த இவைகளை இந்தியா் மட்டும் ஏனோ கண்டு கொள்ளவே இல்லை. இவற்றைப் பொதி சுமக்க மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால் மேற்கத்திய நாடுகளில், இதனைப் புரிந்து இவற்றைப் பொதிசுமக்க மட்டுமின்றி ,உழவு வேலைக்கு, வண்டி ஓட்ட, மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை திருப்பி அழைத்து வர, பட்டியில் அடைத்த ஆடு,கோழிகளைப் பாதுகாக்க போன்ற அறிவு சார்ந்த செயல்கள் பலவற்றுக்கும் பயன்படுத்துகின்றனர். நம் ஊர் சேவல் சண்டை போல், ஆப்கானிஸ்தானில் கழுதைகளை வைத்து போட்டிகள், சண்டைகள் நடத்துகின்றனர்.

நமது மதங்களும் கூட கழுதைகளை காளராத்திரி தேவி, சீதளாதேவி போன்றோருக்கு வாகனமாக்கிப் பார்க்கிறது. நவ மாதர்களில் முக்கியமானவளாக கருதப்படுபவள் காளராத்திரி, நவராத்திரியில் இவளுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. துர் மந்திர உபாசனை செய்யும் போது காளி தேவிக்கு கழுதையை வாகனமாக்கி வழிபடுவது மற்றுமொரு தந்திர வழிபாடு. பண்டைய எகிப்திய அரசர்கள் இதனை தெய்வத்தின் அடையாளமாகவும், தாங்கள் இறந்தால் 10 கழுதைகளைப் பலியிட்டு புதைக்க வேண்டும் என்றும் கட்டளை இட்டனர். தற்போது கிடைத்துள்ள புதை பொருள் ஆராய்ச்சி இதனை உண்மை என நிரூபித்துள்ளது.

-எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா

Saturday, November 15, 2014

வடிவேலு அய்யா,,,,,விரசா வாருமைய்யா

தினசரிக்கூலிகள், பால்காரர்கள், பெட்டிக்கடைக்காரர்கள் என்று சாமானியர்கள் துவங்கிக் குறுமுதலாளிகள், பெருமுதலாளிகள், மருத்துவர்கள், மென்பொறியாளர்கள், ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளிக்குழந்தைகள் வரை அனைவரின் வாயிலும் வடிவேலுவின் வசனங்கள் புழங்கிக்கொண்டிருக்கின்றன.

இது மட்டுமல்லாது தமிழ் இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள் பலரும் வடிவேலுவின் வசனங்களைத் துணைக்கழைத்து எழுதியிருக்கின்றனர். தமிழ் இனத்தை மாளாத குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கிவிட்டு எரிபுகுந்த முத்துக்குமாரின் கடிதத்திலும் “இது வரைக்கும் யாரும் என்னத் தொட்டதில்ல” என்கிற வடிவேலுவின் வசனம் உண்டு.

இலக்கியவாதிகளுக்குத் தனிக்கொம்புண்டு என்றும் அவர்கள் தேவதூதர்கள் என்றும் நம்பிக்கொண்டிருந்த காலத்தில் வடிவேலுவின் வசனத்தை எடுத்தாண்டிருந்த ஒரு இலக்கியவாதிக்குக் காட்டமான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறேன். தங்களின் அமரத்துவம் வாய்ந்த எழுத்தில் ஒரு கோமாளி நகைச்சுவை நடிகனுக்கெல்லாம் இடம் அளிக்கலாமா என்பதுதான் அந்தக் கடிதத்தின் சாரம். ஆனால் அக்கடிதம் அத்தருணத்தில் எனக்கும் முளைத்திருந்த ஒரு குட்டிக்கொம்பால் எழுதப்பட்டது என்பதை வடிவேலு சீக்கிரமே நிரூபித்துக் காட்டினார்.

தன் நகைச்சுவைகளின் பின்புலத்தில், அவர் தமிழ்வாழ்வை, தமிழ்மனத்தின் உளவியலை, அதன் நுட்பமான மனவோட்டங்களை, அபிலாஷைகளை நிகழ்த்திக் காட்டினார். சில சமயங்களில் வடிவேலு இதையெல்லாம் தெரிந்துதான் செய்கிறாரா என்று எனக்கு வியப்பாய் இருக்கும்.

ஆனால் ஒரு கலைஞன் எதையும் தெரியாமல் செய்துவிடுவதில்லை. ஒருவேளை அவனுக்குத் தான் என்ன செய்கிறோம் என்பதைத் துல்லியமாகச் சொற்களால் சொல்லத் தெரியாமல் இருக்கலாம். அப்படி அவர் எதுவும் தெரியாதவருமல்ல என்பதற்கு ஆனந்தவிகடனில் சமஸிற்கு அவர் அளித்த நேர்காணலே சான்று. நான் என்னளவில் இந்நேர்காணலை இலக்கியம் என்கிற வகைமைக்குள்ளேயே வைக்க விரும்புவேன்.

வடிவேலுவின் பெரிய வெற்றி என்பது அவர் நம் அன்றாடத்துடன் கலந்ததுதான். வெற்றுக்கோமாளிகளால் இது முடியவே முடியாது.

“என்னடா பொழுது போய் பொழுது வந்துருச்சே. இன்னும் ஒன்னும் நடக்கலையேன்னு பாத்தேன். . .” என்றொரு வசனம்.

கடவுள் முகம் திருப்பியே பார்க்கமாட்டேன் என்று விறைப்பாய் அமர்ந்திருக்கும் வாழ்வு சில அதிர்ஷ்டக் கட்டைகளுடையது. அவர்களிடம் கேட்டால் தெரியும், இது ஒரு எளிய நகைச்சுவை வசனம் மட்டுமா என்று. பொங்கி வருகிற கண்ணீருக்குப் பதிலாக நான் பல தடவைகள் இந்த வசனத்தை வாய்விட்டுச் சொல்லியிருக்கிறேன். இதுபோல் பல வசனங்களை அவர் இவ்வாழ்வின் துன்பங்களுக்கு எதிராக உருவாக்கி வழங்கியிருக்கிறார். “பொறாமையா. . ?” என்கிற கேள்விக்கு “லைட்டா. . .” என்றவர் பதிலளிக்கையில் நான் அதை எப்படியெல்லாமோ விரித்துப் பார்த்துக்கொள்கிறேன். சத்தமிட்டுச் சிரிக்கிற அதேவேளையில் எனக்குள்ளே எங்கோ ஒரு வெளிச்சப்புள்ளி தோன்றி மறைகிறது. நான் என் பொறாமைகளைப் பரிவோடு பார்த்துப் புன்னகை செய்கிறேன். ஆலயமணி சிவாஜிதான் எவ்வளவு பாவம் என்று நினைத்துக்கொள்கிறேன்.

இப்படி நான் எழுதிச்செல்வது வடிவேலு தும்மினால்கூட அதனுள்ளே ஒரு மானுடத்துக்கம் ஒளிந்திருக்கும் என்று நீருபிக்க அல்ல. அவரிடமும் எண்ணற்ற எளிய கிச்சுகிச்சுக்கள் உண்டு. ஆனால் அவற்றையெல்லாம் மீறி அவர் தன்னை ஒரு கலைஞனாக வெளிப்படுத்திக்கொள்ளும் தருணங்களும் நிறையவே உண்டு.

தீப்பொறி பறக்கும் மதுரை மொழியை அவர் நகைச்சுவைக்கும் பகடிக்குமானதாக மாற்றிக்காட்டினார். எளிய மனிதர்களின் குசும்புகளை, ஏமாற்றங்களை, தில்லுமுல்லுகளை நேர்த்தியாகச் சித்திரித்தார்.

“வேட்டிக்கட்டு வெயிட்டா இருந்தாத்தான் நாலுபேர் பயப்படுவான் என்று உறுதியாக நம்பும் ஒருவன் ஆரஞ்சு கலர் டவுசரில் பாதி தெரியுமளவு வேட்டியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு வீதியில் நடந்துபோய்ப் போலீசிடம் உதைபடுகிறான். . .”

தன்னிடம் இருக்கும் பணத்தை வட்டிக்கு விட்டுப் பெரும் பணக்காரனாகிவிட ஆசைப்பட்டு நகரத்திற்கு வரும் ஒருவன் நண்பன் வீட்டில் இராத் தங்குகிறான். விடிகையில் தலைக்கு மேலே மேகங்கள் ஊர்ந்து போக வெட்ட வெளியில் கிடக்கிறான். நண்பன் பணத்தை மட்டுமல்லாது அந்த செட் - அப் வீட்டையும் பிரித்து எடுத்துப் போய்விடுகிறான்.

500 வாழைகளையும் 500 தென்னைகளையும் விளைவித்துக் கொடுத்துக்கொண்டிருந்த தன் வற்றாத கிணற்றைத் திடீரெனக் காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கிறான் ஒருவன்.

தன் வினோத உடல் மொழியாலும் ஊளையைப் போன்றதொரு அழுகையாலும் குழந்தைகளின் மனதிலும் நிறைந்து நின்றார் வடிவேலு. அவருடைய வசனங்களில் பயன்படுத்தப்படும் ரிதமிக்கான வரிகள், சொற்களில் இயங்குபவன் என்கிற முறையில் என் கவனத்தை ஈர்ப்பவையாகவே இருந்திருக்கின்றன. அக்காட்சியின் வெற்றியில் அவை முக்கியப் பங்காற்றுகின்றன. அக்காட்சியை எளிதில் தேய்ந்து போகாதவண்ணம் காப்பாற்றுகின்றன.

“பங்குனி வெயில் பல்லக்காமிச்சுட்டு அடிச்சிட்டிருக்கு, பனிமூட்டம்ங்கற. . .” போன்ற வசனங்களை இந்த வகையில் சேர்க்கலாம்.

வெறும் நடிப்பு என்றல்லாது பாடல், நடனம் என்று வெவ்வேறு திறமைகளோடு இயங்கியவர் வடிவேலு. அவரின் குறிப்பிட்ட ஒரு நடன அசைவைப் பிரபல நடிகர்கள் சிலர் அப்படியேயும் சற்றே மாற்றியும் தங்கள் நடனத்தில் பயன்படுத்தி உள்ளனர். தொழில்நுட்பம் பெரிதாக வளர்ந்துவிட்ட இந்நாளில் அநேக நடிகர்களும் பாடகர்களாகிவிட்டனர். வடிவேலுவும் சில முழுப்பாடல்களைப் பாடியிருக்கிறார். ஆனால் அதைவிடவும் காட்சிகளுக்கிடையே வாத்தியங்களின் துணையின்றிப் பாடிக்காட்டிய பாடல்கள் அவரது இசைலயிப்புக்குச் சான்றுகள்.

வடிவேலுவின் புகழை உச்சிக்குக் கொண்டுசென்ற இம்சை அரசன் 23ஆம் புலிகேசியில் புலிகேசி பாத்திரம் அவருக்குச் சாதாரணமானதுதான். அவர் வழக்கமாகச் செய்வதுதான். ஆனால் நாயக வேடமேற்றிருந்த உக்கிரபுத்தன் பாத்திரம் அவருக்குச் சவாலானது. மறக்கவே முடியாத நகைச்சுவைகளின் மூலம் பார்த்தாலே சிரிப்பை வரவழைக்கும் முகமாக மாறிப்போயிருந்த தன் முகத்தை வீரதீரங்கள் புரியும் நாயகனாகவும் மக்கள் ஏற்கும்படி செய்யவேண்டிய சவால் அதிலிருந்தது. வடிவேலு அதைத் திறம்படச் செய்து காண்பித்தார்.

வடிவேலுவின் வாழ்வில், ஒரு சூப்பர்ஸ்டார் தன் படத்தின் வெற்றிவிழாவின்போது “முதலில் வடிவேலு கால்ஷீட்டைத்தான் வாங்கச் சொன்னேன்” என்று வெளிப்படையாகச் சொன்ன காட்சி ஒன்று உண்டு.

அவர் ஜெயக்கொடி பறந்த சினிமாத் துறையிலிருந்து யாரையும் அழைக்காமல் ஒரு ரகசிய நடவடிக்கைபோலத் தன் மகளுக்குத் திருமணம் செய்துவைத்த காட்சியும் உண்டு. இந்த இரண்டு காட்சிகளுக்கும் இடையேதான் 2009 பொதுத்தேர்தல் என்கிற காட்சி வருகிறது. திடீரென அரசியல் தெளிவு பிறந்து அந்த மகத்தான லட்சியத்தில் தானும் பங்கேற்க விரும்பி அவர் அந்தத் தேர்தலில் கர்ஜிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. அத்தேர்தலையொட்டி அவருக்குச் சில கணக்குகள் இருந்திருக்கும். அது பொய்த்துப்போனது குறித்து எனக்கு வருத்தமேதுமில்லை.

ஆனால் ஆன்ற சுற்றமும் அருமை நட்பும் அவரிடம் சொல்லிக்கொள்ளாமல் போய்விட்டன குறித்து எனக்கு வருத்தமுண்டு. தவிர, ஒரு மனிதன் தான் விரும்பும் கட்சிக்கு ஆதரவாகப் பேசவும் இயங்கவும் உரிமையுண்டு என்றுதான் நமது ஜனநாயகமும் சொல்கிறது என்று நினைக்கிறேன்.

“ஒரு உண்மையைச் சொல் லட்டுங்களா. .? யாருமே என்கிட்ட பேசுறதே இல்லண்ணே. . . யாரும் போன்கூடப் பண்றது இல்ல. ஆனா, அதைப் பத்தி நான் கவலைப்படல. மௌனமாக் கவனிச்சுக்கிட்டு இருக்கேன். இது ஒரு காலம். இதையும் தாண்டி வருவோம்னு இருக்கேன்” என்று வடிவேலுவே ஆதங்கப்பட்டாலும் திரை உலகம் அவரை ஒதுக்கி வைத்தாலும் சாமானிய மக்களிடம் அவர் குவித்து வைத்த புகழ் சேதாரம் ஏதுமின்றி அப்படியேதான் இருக்கிறது என்பது என் எண்ணம்.

அவர் இல்லை என்று சொல்லப்படுகிற இந்த இரண்டாண்டு காலம் எனக்கு அவர் இல்லாதது போன்ற உணர்வே இல்லை. தொலைக்காட்சிச் சேனல்கள் அந்தக் குறை தெரியாது பார்த்துக்கொண்டன. தவிரவும், வெறும் இரண்டு வருட இடைவெளியில் மறந்து போகக்கூடிய கலைஞனுமல்ல அவர். தமிழ்ச்சமூகம் அவரின் மீள்வருகைக்காக ரகசியமாகக் காத்திருக்கிறது
என்றே தோன்றுகிறது.

-நன்றி : காலச்சுவடு.

நாய் சேகர், கைப்புள்ள, வட்டச்செயலாளர் வண்டுமுருகன், பிச்சுமணி போன்ற கதாபாத்திரங்களை, சினிமா உள்ளவரை யாரும் மறக்க இயலாது.

"தெனாலிராமன்" எதிர்பார்த்த அளவு ஒடாவிட்டாலும், அதே குழுவினரோடு வடிவேலு மீண்டும் இணையும் படமான "எலி" வெற்றி பெற வாழ்த்த்துவோம்.

 அவர் முழு நீள காமெடியனாக, புதிய இயக்குனர் குமரய்யா இயக்கத்தில், விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார்.

சந்தானத்தின் அலப்பறையையும், பரோட்டா சூரியின் மொக்கையையும் ரொம்ப நாளைக்கு நம்மால் தாங்கமுடியாது.

"வடிவேலு அய்யா,,,,,,விரசா வாருமைய்யா".


Wednesday, November 12, 2014

'தமிழக' விடுதலைப்புலிகள்தமிழீழ விடுதலைப் இயக்கத்தில் தமிழக இளைஞர்கள் பலர் தங்களை இணைத்துக்கொண்டு, பிரபாகரன் அவர்கள் தலைமையில் பங்காற்றிய செய்தி
கிடைத்து இருக்கிறது.

ஏறக்குறைய 50,000 போராளிகள் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சற்றேறக்குறைய 200 தமிழக போராளிகள் இருந்தனர்; அவர்களைப்பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை;

கிடைத்தவரை சில தகவல்கள் தருகிறேன்.வீரமரணம் அடைந்தோருக்கு புலிகள் வழங்கும் 'மாவீரர்' பட்டம் பெற்ற தமிழகத் தமிழர்களில் ஒரு கரும்புலி இரண்டு பெண்போராளிகள் உட்பட 14 பேரின் விபரங்கள்,
-------------------------
பிரிவு: கரும்புலி
நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்:செங்கண்ணன்
இயற்பெயர்: தனுஸ்கோடி செந்தூர்
ஊர்: சாத்தூர், சிவகாசி(தமிழகம்)
வீரப்பிறப்பு: 25.01.1975
வீரச்சாவு: 11.11.1993
நிகழ்வு: யாழ்ப்பாணம் பலாலி படைத்தளத்தினுள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது
வீரச்சாவு துயிலுமில்லம்: உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.
________________

நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: உமா
இயற்பெயர்: வேலுச்சாமி இந்துமதி
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 27.05.1972
வீரச்சாவு: 11.12.1999
நிகழ்வு: கிளிநொச்சி பரந்தன் பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: விசுவமடு
மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
_____________
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: மணியரசி
இயற்பெயர்: செல்லத்துரை கமலாதேவி
ஊர்: தமிழகம்.
வீரப்பிறப்பு: 02.02.1977
வீரச்சாவு: 19.04.1996
நிகழ்வு: யாழ்ப்பாணம் தென்மராட்சி கோட்டத்தை கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட சூரியகதிர்-2 நடவடிக்கைக்கு எதிரான
சமரில் வீரச்சாவு
துயிலுமில்லம்: ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.
______________
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: பத்மநாபன்
இயற்பெயர்: பி.பத்மநாபன்
ஊர்: திருச்சி, தமிழகம்.
வீரப்பிறப்பு: 27.07.1963
வீரச்சாவு: 16.03.1988
நிகழ்வு: தமிழகத்தின் திருச்சியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தின்போது வீரச்சாவு
________________
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: சுனில்
இயற்பெயர்: கதிரவன்
ஊர்: தமிழகம்.
வீரச்சாவு: 11.04.1988
நிகழ்வு: முல்லைத்தீவு ஒட்டங்குளத்தில் இந்தியப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
________________
நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: இனியன்(றஸ்கின்)
இயற்பெயர்: முத்தையா இராமசாமி
ஊர்: தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 23.07.1962
வீரச்சாவு: 11.12.1991
நிகழ்வு: மன்னார் மருதமடு வேப்பங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு துயிலுமில்லம்: ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
______________
நிலை: 2ம் லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: உதயசந்திரன்
இயற்பெயர்: சேதுபாணடித்தேவர் ராமமணி சேகரன்மகாதேவர்
ஊர்: திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 05.05.1969
வீரச்சாவு: 09.06.1992
நிகழ்வு: மன்னார் சிறுநாவற்குளத்தில் சிறிலங்கா படையினர் மீதான அதிரடி தாக்குதலின் போது வீரச்சாவு
__________________
பிரிவு: கடற்புலி
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: ஈழவேந்தன்
இயற்பெயர்: துரைராசன் குமரேசன்
ஊர்: தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 25.05.1969
வீரச்சாவு: 20.11.1992
நிகழ்வு: தமிழீழக் கடற்பரப்பில் வீரச்சாவு துயிலுமில்லம்: எள்ளங்குளம்
மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.
_____________
நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: சச்சு
இயற்பெயர்: அன்ரனி சிறிகாந்த்
ஊர்: பியர், இந்தியா.
வீரப்பிறப்பு: 04.09.1975
வீரச்சாவு: 20.12.1992
நிகழ்வு: மன்னார் நானாட்டன் மாதிரிக்கிராமம் படை முகாம்களுக்கிடையில் அமைந்துள்ள காவலரண்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
______________
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: குணதேவன்(லக்ஸ்மணன்)
இயற்பெயர்: அம்மனாரி தென்னரசு
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 01.01.1966
வீரச்சாவு: 13.05.1996
நிகழ்வு: அம்பாறை 11ம்கொலனியில் அமைந்திருந்த காவல்துறை நிலையம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
_____________
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: பெரியதம்பி(விஸ்ணு)
இயற்பெயர்: சிவானந்தம் முகேஸ்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 31.05.1975
வீரச்சாவு: 19.05.1996
நிகழ்வு: திருகோணமலை கீலக்கடவெல படைமுகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவு துயிலுமில்லம்: மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
_____________
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: குற்றாளன்
இயற்பெயர்: கந்தையா கலைச்செல்வன்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 08.08.1969
வீரச்சாவு: 16.07.1996
நிகழ்வு: மன்னார் பள்ளிமுனைப்பகுதியில் படையினரின் சுற்றிவளைப்பின் போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு
_________________
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: சுதா
இயற்பெயர்: வீரப்பன் இலட்சுமணன்
ஊர்: தஞ்சாவூர், தமிழ்நாடு
வீரப்பிறப்பு: 28.10.1980
வீரச்சாவு: 05.07.1999
நிகழ்வு: மன்னார் பள்ளமடு பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடிமோதலில் வீரச்சாவு
துயிலுமில்லம்: கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
_____________
நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: குருசங்கர்
இயற்பெயர்: பழனியாண்டி மகேந்திரன்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 18.04.1973
வீரச்சாவு: 25.07.1996
நிகழ்வு: முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து
பண்டுவம் பெறும்போது வீரச்சாவு துயிலுமில்லம்:
பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில்
இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
--------------------------

""நடிகனுக்குப் பாலூற்றும் இளைஞரைப்பற்றிப் பேசிக் களைப்படைந்தோர் இனி இவர்களைப்பற்றிப் பேசுங்கள்""

நன்றி : பத்திரிக்கையாளர் திரு.அருண்குமார்.
தமிழீழத்தை தங்களின் அரசியல் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொண்டு, மேடைகளில் உணர்ச்சி பொங்க பேசும் அயோக்கியர்களை அறிந்த அளவுக்கு,

ஈழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈந்த இந்த மறத்தமிழர்கள் குறித்து நாம் இதுவரை அறியாமலே போய்விட்டோமே.....


Sunday, November 9, 2014

நடிப்பு,விபச்சாரம்,கவிதை - ஒரு நடிகையின் பயணம்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, உயரிய விருதுகளில் ஒன்றான தேசிய விருது பெற்றவர் ஸ்வேதா பாசு.

ஹைதராபாத் நட்சத்திர ஹோட்டலில் வைத்து விபச்சாரம் செய்ததாக நடிகை ஸ்வேதா பாசு கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஸ்வேதா பாசுவின் தனிமனித உரிமையை பாதிப்பதாகும் என அவரது தாயார் அளித்த மனுவின் காரணமாக ஸ்வேதா பாசுவை அவரது தாயாருடன் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதனையடுத்து முதல்முறையாக தன்னிலை விளக்கம் அளித்துள்ளார் ஸ்வேதா பாசு.

"நான் எதையும் சொல்லாமல் அவர்களாகவே எழுதிய பத்திரிகையாளர்கள் தவிர மற்ற யார் மீதும் நான் குறைகூற விரும்பவில்லை. என்னுடைய விளக்கத்துக்காக அவர்கள் காத்திருந்திருக்க வேண்டும். நான் காவலில் இருந்ததால் எதையும் விளக்க முடியவில்லை. எனது தாய் தந்தையருடன் கூட என்னை பேச அனுமதிக்கவில்லை.

என்னைப் பற்றி எழுதப்பட்ட செய்திகளால் என்னை சுற்றி உள்ள கதவுகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. என்னுடைய புகழுக்கு களங்கம் ஏற்பட்டு விட்டது. இருந்தபோதும் திரைப்படதுறையில் எனக்கு ஆதரவு இருந்தது.

என்னை யாரும் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தவில்லை. எனக்கு சினிமா துறையில் நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. விபசாரத்திற்காக எந்த ஏஜெண்டும் என்னை ஹைதராபாத் அழைத்து செல்லவில்லை.

ஒரு விருது விழாவில் கலந்து கொள்ள ஹைதராபாத் வந்தேன். அடுத்த நாள் காலையில் போக வேண்டிய விமானத்தை தவற விட்டேன். என்னுடைய பயணம் மற்றும் தங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை விருது வழங்குபவர்கள் செய்து இருந்தனர்.

அந்த டிக்கெட் என்னிடம் தான் உள்ளது. சூழ்நிலையால் நான் பாதிக்கபட்டுள்ளேன். உண்மை இல்லாதது வெளியே சொல்லப்பட்டு உள்ளது.

நான் மனம் சோர்வடைந்துவிடவில்லை. எனக்கு உண்மை தெரியும். அதிர்ஷ்டவசமாக நான் விடுதலையானேன். எனக்கு ஆதரவாக எனது குடும்பம் இருந்தது. எனது பெற்றோர்கள் நான் எப்போதும் ஒரு கண்ணியமான் வாழ்க்கையை தொடர விரும்பினர். "

இவ்வாறு ஸ்வேதாபாசு கூறியுள்ளார்.

தேசிய விருது பெற்ற நடிப்பு, விபச்சார வழக்கு என்று சென்ற அவர் பயணம் இன்று ஒரு பக்குவப்பட்ட கவிஞராக முடிந்து இருக்கிறது.

தற்போதைய உணர்வுகளை பின்வரும் கவிதையாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஸ்வேதாபாசு.

"எனக்கு தற்கொலை அல்லது ஏதாவது செய்து கொள்ள தெரியவில்லை.

உங்களுக்கு தெரியுமா ! நான் பறக்க எண்ணினேன் மற்றும்
எல்லாவற்றிற்கும் மேலாக இருக்க எண்ணினேன்.."

இடியோசை கேட்கிறது ! நான் தனியாக இருக்கிறேன்

நான் ஒரு மலையின் விளிம்பில் நிற்கிறேன்.
நான் அடர்ந்த காட்டில் உருட்டப்பட்டேன்
அங்குள்ள பழங்குடியினர் மற்றும்
நாடோடிகள் மலையில் இருந்து
குதிக்க சொல்கிறார்கள்

நான் நிர்வாணமாக கீழே பார்க்கிறேன்!
குளிரால் நடுங்குகிறேன்,

மூர்க்கத்தனமான கடல்
அது என்னை விழுங்க வாய் திறந்து தயாராக உள்ளது

இருட்டில் பகுதியில் கர்ண கொடூரமான அலறல்கள்
நான் கடலில் குதிக்க முடிவு செய்து விட்டேன்

அப்போது நான் ஒரு பிரகாசமான
நட்சத்திரத்தைப் பார்த்தேன்....

-ஸ்வேதாபாசு


சாதாரணமானது அல்ல சினிமா நடிகையின் வாழ்க்கை. அது
சாதா 'ரணமானது' என்று நமக்கு புரிய வைக்கிறது ஸ்வேதாவின் வாழ்க்கை.

Saturday, November 8, 2014

மளிகைகடை நடத்துவது எப்படி?

வால்மார்ட் போன்ற வெளிநாட்டு கம்பெனிகள் காட்டும் பயம் ஒருபக்கம்; ரிலையன்ஸ், ஃபியூச்சர் போன்ற உள்நாட்டு கம்பெனிகள் தரும் போட்டி இன்னொருபக்கம் என நம்மூர் மளிகைக் கடைகள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பலப்பல.

இந்த சவால்களை கொள்கை அளவில் மட்டும் எதிர்த்தால் போதாது. தொழில்ரீதியில் பெரிய நிறுவனங்களுடன் போட்டி போடக் கூடிய அளவுக்கு மளிகைக் கடைகள் தங்களை வளர்த்துக்கொண்டால் மட்டுமே காலவோட்டத்தில் நிலைத்து நிற்பதோடு, அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கியும் செல்ல முடியும்.

இதற்கு மளிகைக் கடைகள் என்ன செய்ய வேண்டும், எப்படிப்பட்ட தொழில் யுக்திகளை பின்பற்ற வேண்டும் என ரீடெய்ல் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் முன்னாள் சிஇஓ டாக்டர் ஜிப்சன்.ஜி.வேதமணியிடம் கேட்டோம்.

‘‘மளிகைக் கடை வைத்திருப்பவர்கள் தங்களை அடுத்த கட்டத்துக்கு தரமுயர்த்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் தற்போது உருவாகியுள்ளது.

முன்பெல்லாம் அந்தந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு தேவைப்படும் பொருளை வாங்கி விற்பனை செய்தால் மட்டுமே போதுமானதாக இருந்தது.  ஆனால், இன்று மக்களே கடைக்குள் புகுந்து, தங்களுக்குத் தேவையான பொருட்களைத் தேர்வு செய்கிற அளவுக்கு காலம் வந்துவிட்டது.

அரிசிக்கு ஒரு கடை, பருப்புக்கு ஒரு கடை என்றில்லாமல், அனைத்து பொருட்களையும் ஒரே கடையில் வாங்கும் விதமாக கடைகள் வந்து விட்டன. நீண்ட ஷெல்ஃப்களில் வரிசையாக அடுக்கப்பட்டுள்ள பொருட்கள், ஒரு பொருளில் பல்வேறு பிராண்டுகள், விரும்பியதை நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் என்கிற வகையிலான ஷாப்பிங்கையே மக்கள்   விரும்புகிறார்கள். இதற்கேற்ப மளிகைக் கடைகள் மாறுவதற்கு முக்கியமான சில உத்திகளைக் கையாள வேண்டியுள்ளது.

முதலாவதாக, மளிகைக் கடைகாரர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்குத் தடையாய் வந்து நிற்பது நிதிப் பற்றாக்குறைதான். நிதிநிலையை சமாளிக்க முதலில் வரவு-செலவுக் கணக்கை  எழுத வேண்டும். இதனால் அவர்களது லாப நஷ்டம் என்ன என்று அவர்களுக்குத் தெரியும். தங்கள் நிதி தேவைகளுக்கு நிதி நிறுவ னங்களையும், சீட்டு கம்பெனிகளையும் நாடி செல்லும்போது வரவு-செலவுக் கணக்கை காட்ட வேண்டிய அவசியம் இவர்களுக்கு இல்லாமலே இருக்கிறது. ஆனால், இவர்கள் அடுத்த கட்டத்துக்கு செல்லவேண்டும் எனில், இந்தக் கடன் தரும் நிறுவனங்களை மட்டும் நம்பி இருக்க முடியாது. நீண்ட காலத்தில் குறைந்த வட்டியில் அதிக கடன் பெறவேண்டு மெனில், வங்கிகள்தான் சரியான தீர்வாக இருக்கும்.

வங்கிகளை நாடும்போது அவர்கள் கேட்கும் முதல் கேள்வி, கணக்குகளை முறையாக பதிவு செய்து வைத்திருக்கிறீர் களா, அதன் அடிப்படையில் உங்கள் வியாபாரம் எப்படி நடக்கிறது என்பதைப் பொருத்தே கடன் தருகிறார்கள். சிறிய கடையை பெரிய கடையாக மாற்ற, நிறையப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இந்தக் கடன் மிகவும் உதவும்.

இரண்டாவதாக, எந்த மாதிரியான பொருட்களை விற்க வேண்டும் என  தீர்மானிக்க வேண்டும். ஒரு கடை எனில் பொதுவாக மூன்று விதமான பொருட்கள் உள்ளன. அத்தியாவசிய பொருட்கள், வசதிக்கேற்ப வாங்கும் பொருட்கள், முன்திட்டம் எதுவும் இல்லாமல் திடீரென வாங்கும் பொருட்கள் என வாடிக்கையாளர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப பொருட்களை வாங்கி வைத்திருக்க வேண்டும்.  வாடிக்கையாளர்கள் கேட்கும் பொருட்கள் இல்லையென்றால், அடுத்தக் கடைக்கு மாறிவிடுவார்கள். எனவே, அவர்களைத் திருப்திப்படுத்த அனைத்து பொருட் களும் கிடைக்கும் விதமாகவும், தரமானதாகவும் இருக்குமாறு அமைக்க வேண்டும்.

மூன்றாவதாக, கடையின் அமைப்பு. சிறிய அளவில் இருக்கும்போது கடையின் முகப்பில் மட்டும் பொருட்களைச் சற்று கவர்ச்சிகரமாக அடுக்கிவிட்டு, மற்ற பொருட்களை கடையின் உள்புறத்திலிருந்து எடுத்துத் தருகிற மாதிரி வைத்திருப்பார்கள். ஆனால், இப்போது பெரிய கடையாக மாற்றும்போது கடையின் உள்ளே நடந்துசென்று பொருட்களைத் தேர்ந்தெடுக்கிற மாதிரி மாற்ற வேண்டும். பிராண்டுகளை முன்னிறுத்தும் கம்பெனிகளும் இதையே அதிகம் விரும்புகின்றன. கடையின் ஒருபகுதியில் குறிப்பிட்ட பிராண்டுக்கென ஒதுக்கீடு செய்துதந்தால், அதற்கு தனி வாடகை தருகின்றன பெரிய நிறுவனங்கள். இதன் மூலமும் கடைகளுக்கு நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.

நான்காவது விஷயம், லாப வரம்பு. பெரிய கடைகளுக்கு நிறுவனங்கள் லாப வரம்புகளாக அதிகபட்சம் சுமார் 8 - 10 சதவிகிதத்தை நிர்ணயிக்கின்றன. ஆனால், அவர்களது செயல்பாட்டு செலவே 14-15 சதவிகிதமாகிவிடுவதால், கூடுதல் லாபம் வேறுமாதிரியான யுக்திகளை பின்பற்ற வேண்டியிருக்கிறது.  அதாவது, மொத்தமாக பொருட்களை கொள்முதல் செய்து அவற்றை சிறிய பேக்குகளில் சில்லறையாக விற்பனை செய்வதன்மூலம், எதிர்காலத்தில் அவற்றை ஒரு பிராண்ட்டாக மாற்றலாம். இதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்புண்டு. சில உள்ளூர் பிராண்டுகள் தரமானதாகவும், அதிக லாபவரம்பு தருவதாகவும் இருக்கும்பட்சத்தில் அவற்றை தாராளமாக தேர்வு செய்ய லாம்’’ என மளிகைக் கடையை சூப்பர் மார்க்கெட்டாக மாற்றும்போது செய்ய வேண்டிய விஷயங்களை அடுக்கினார் அவர். 

தற்போதிருக்கும் மளிகைக் கடையை ஒரு சூப்பர் மார்க்கெட்டாக மாற்றுவதில் பல சாதகங்கள் இருக்கிறது.

1.வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும். இரண்டு பொருளை வாங்க வந்தவர்கள் மூன்றாவது பொருளையும் வாங்குவதால் விற்பனை அளவு அதிகரிக்கும்.

2. ஒரே கடையின் கீழ் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்வதால்,  அனைத்து வாடிக்கையாளர் களையும் ஈர்க்க முடியும்.

3. விரும்பியபடி பொருட்களை வாங்கலாம் என்பதால்தான் சூப்பர் மார்க்கெட்டுகளை நோக்கி வாடிக்கையாளர்கள் அதிகம் வருகிறார்கள். இதிலும் உள்ளூர் கடைகளையே மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். மக்கள் விரும்புவதை உள்ளூர் கடைகள் தரும்பட்சத்தில் எல்லா வாடிக்கையாளர்களும் அடிக்கடி வரத் தொடங்குவார்கள்.

4. நல்ல சேவையைத் தருகிற அதே நேரத்தில் பொருளின் விலையையும் கொஞ்சம் குறைத்துத் தந்தால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியோடு வாங்க வருவார்கள்.

5. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரீடெயில் நிறுவனங்கள் போட்டி வரும்போது, உள்ளூர் மளிகைக்கடைகள் தரும் மாற்றத்தால் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை உருவாகி,  நிரந்தர ஆதரவு அளிப்பார்கள்.

ஆக மொத்தத்தில், நாம் நடத்துவது சிறிய கடை, நம்மால் பெரிய கடைகளுடன் போட்டி போட முடியாது  என்று நினைக்காமல், சிறிய கடையாக இருந்தாலும் அதை வாடிக்கையாளர்களுக்குப் பிடிக்கிற மாதிரி சூப்பர் மார்க்கெட்டாக மாற்றி அமைப்பதன் மூலம், பெரிய நிறுவனங்களுடன் நிச்சயம் போட்டி போட்டு ஜெயிக்க முடியும்!

எஸ்.வி.கே.பி.தங்க மாரியப்பன்
எஸ்.வி.கே.பெருமாள் நாடார் & சன்ஸ், அயனாவரம்

‘‘ஆரம்பத்தில் என் தந்தை சிறிய மளிகைக் கடை ஒன்றை ஆரம்பித்தார், அவருக்குப்பின் நாங்கள் அதனைத் தொடர்ந்து செய்துவந்தோம். முதலில் பொருட்களை வாங்கி வந்து அருகில் உள்ள மக்களுக்கு விற்பனை செய்தோம். இதனை தொடர்ந்து செய்தபோது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்தது.

அதன்பின் புதிய பிராண்டுகளின் வருகையினாலும், தொலைக்காட்சி விளம்பரங்களினாலும் புதிய  பிராண்டு பொருட்களைப் பார்த்துவிட்டு, எங்களிடம் அந்தப் பொருட்களைக் கேட்டனர். அப்போதுதான் சற்று பெரிய கடையாக மாற்றலாமே என்று தோன்றியது. அதனால் வங்கிகளிடம் இருந்து சற்று நிதி உதவிகளைப் பெற்று கடையை விசாலமாக்கினோம்.

பின்னர் கடைகளில் புதிய பிராண்டுகள், பழக்கடை, காய்கறிக்கு எனத் தனிப்பிரிவு, மளிகை சாமான்களை பேக் செய்வது  என விரிவாக்கம் செய்தோம். அப்போது கடையும் பெரிதாக மாறியது; வாடிக்கையாளர்களும் எங்களை விட்டு மாறாமலும் அதே நம்பிக்கையோடு எங்களிடம் வியாபாரம் செய்ய விரும்பினர்.

இந்த மாற்றத்திற்குப் பின்னால் இங்குள்ள ஒவ்வொருவரின் கடின உழைப்பும், என் தந்தை செய்துவந்த தொழிலை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்ல நாங்கள் எடுத்த முயற்சிகளும் உள்ளன.

காலை 6 மணிக்கு ஆரம்பித்து இரவு 11 மணிவரை வாடிக்கையாளரை திருப்திப்படுத்தும் விதத்தில் நாம் செய்யும் வேலையும் மாற்றங்களும் இருந்தால்தான், தொடர்ந்து பிசினஸில் வெற்றி பெற முடியும்!’’

  ‘‘வாடிக்கையாளரை திருப்திப்படுத்த மாற்றம் தேவை!''

-நன்றி: விகடன் குழுமம்,

Monday, November 3, 2014

மீண்டு(ம்) வருமா "களவாடிய பொழுதுகள்"


கிராமத்து படம் என்றாலே அதன் களம் மதுரை பக்கம் இருக்கும் கிராமமாகத்தான் இருக்கவேண்டும் என்று இயங்கி கொண்டிருந்த தமிழ் சினிமாவில், வட மாவட்ட மக்களின் வாழ்வியலை, கிராமங்களை மண்வாசனையோடு சொன்னவர்/சொல்லிவருபவர் இயக்குனர் தங்கர்பச்சான்.

அவரது 'அழகி' ஒரு சர்வதேச தரம் வாய்ந்த, தமிழ் சினிமாவில் மறக்க முடியாத கலை படைப்பு. சொல்ல மறந்த கதை, ஒன்பது ருபாய் நோட்டு போன்ற படங்கள் வாழ்க்கையை பேசுபவை.

களவாடிய பொழுதுகள் - தங்கரின் அடுத்த படம்.

லண்டன் அய்ங்கரன் தயாரிப்பில், பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார். பூமிகா, இன்பநிலா இவர்களுடன் முக்கியமான வேடத்தில் பிரகாஷ்ரா‌ஜ்.

இதில் இன்பநிலா, கேரளா இறக்குமதி நடிகைகளுக்கு இடையே நம்ம தமிழ் நாட்டை சேர்ந்தவர். ஒன்பது ருபாய் நோட்டு மூலம் கவனம் பெற்றவர்.

தங்கர்பச்சான் முன்பு எழுதிய கதைதான் அதே பெய‌ரில் சினிமாவாகிறது. இதுவொரு கம்யூனிஸ்டின் கதை. பிரபுதேவா கம்யூனிஸ்டாக வருகிறார்.
மே தினம் அன்று பெ‌ரியார் கொடியேற்றும் நிகழ்ச்சி படத்தில் இடம் பெறுகிறது. பெ‌ரியாராக சத்யரா‌ஜ் நடிக்கிறார். இந்த‌க் காட்சியில் பாடல் ஒன்றையும் வைத்திருக்கிறார் தங்கர்பச்சான். பரத்வா‌ஜ் இசையில் உருவாகியிருக்கும் அந்தப் பாடல் படத்தின் ஹைலைட்களில் ஒன்றாக இருக்கும் என்கிறார்கள் யூனிட்டில்.

'யதார்த்த சினிமாவின் இன்னொரு ப‌ரிமாணமாக களவாடிய பொழுதுகள் இருக்கும்' என்று கூறிஇருந்தார் தங்கர்.

படம் முடிவடைந்தும் வெளிவராமல் இருக்கும் பல நூறு படங்களில் ஒன்றாகிவிட்டது இந்தப்படம்.

2012 ல் முடிந்துவிட்ட இந்த படத்தின் பாடல்கள், இப்பொதுதான் வெளிவந்து இருக்கின்றன. மொத்தம் ஐந்து பாடல்கள். அதில், தந்தை பெரியார், தோழர் ஜீவானந்தம் ஆகியோரின் கருத்துக்களை, அவர்கள் இக்கால தமிழர்களுக்கு கூறுவது போல அமைக்கப்பட்டு இருக்கும் பாடல் "சேரனேங்கே, சோழனேங்கே" என்னும் பாடல்.

"தமிழனை அழிக்க சவப்பெட்டி தேவை இல்லை. டிவிப்பெட்டி ஒன்றே போதும்" என்ற பெரியாரின் கருத்து, சத்யராஜின் குரலில் இடியாய் இறங்குகிறது.

 "களவாடிய பொழுதுகள்" தடைகளை கடந்து வெளிவரவேண்டும்.

யதார்த்த சினிமா மீது நம்பிக்கை கொண்ட, நல்ல படங்களை மட்டுமே கொடுப்பதை தனது கொள்கையாக வைத்து இருக்கும் தங்கர்பச்சான் போன்ற இயக்குனர்கள் நிலைத்து இருப்பது தமிழ் சினிமாவுக்கு மிக அவசியம்.

 'களவாடிய பொழுதுகள்' விரைவில் முடிந்து வெளிவரும் என்று நம்புவோம்.

-இன்பா


Sunday, November 2, 2014

'திரு(ட்டு).முருகதாஸ்'கள் கவனத்திற்க்கு -ஞாநி கட்டுரை

 தமிழ் சினிமாவைப் பற்றி இன்று வெளியாகும் செய்திகளில், படத்தின் தரம், வணிக வெற்றி, திருட்டு டி.வி.டி போன்ற செய்திகளுக்குச் சமமான அளவில் படத்தின் கதை திருடப்பட்டது பற்றிய செய்திகளும் இடம்பெறுகின்றன.

முன்பெல்லாம் பாடலின் மெட்டு, கதைக் கரு போன்றவை எந்தப் படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்பதை எளிதில் கண்டுபிடிக்க இயலாது. இப்போது இணையமும், பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களுக்கு நிகரான பங்கு வகிக்கும் சமூக வலைதளங்களும் இந்தத் திருட்டுகளைக் கண்டுபிடிப்பதை எளிதாகவும் விரைவாகவும் ஆக்கிவிட்டன.

பல வங்காள, மராத்திக் கதைகள் நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் தமிழ்ப் படங்களாகியிருக்கின்றன. ஆங்கிலப் படங்களிலிருந்து கதையை எடுப்பது என்பதைப் பலரும் செய்திருக்கிறார்கள். தன் கலை, அரசியல் வாழ்க்கையையே மாற்றியமைத்த படமான ‘நாடோடி மன்னன்’ படத்தின் கதை, அதை எடுப்பதற்கு சுமார் 20 வருடம் முன்னால் தான் கொல்கத்தாவில் பார்த்த கால்மன் நடித்த ‘இஃப் ஐ வேர் கிங்’ படத்தின் கதையிலிருந்து உருவாக்கியதுதான் என்று எம்.ஜி.ஆர். கட்டுரையே எழுதியிருக்கிறார்.

திருட்டுகளின் புதிய முகம்

கடந்த இருபது வருடங்களில்தான் இரண்டு முக்கியமான திருட்டு முறைகள் அதிகரித்திருக்கின்றன. ஒன்று அசல் படத்தின் திரைக்கதை, காட்சியமைப்பு, ஷாட் டிவிஷன், லைட்டிங், அவ்வளவு ஏன் விளம்பர போஸ்டர் டிசைன்வரை எல்லாவற்றையும் காப்பியடிக்கும் போக்கு இளம் தலைமுறையால் அறிமுகமாகியிருக்கிறது.

இரண்டாவது திருட்டு, வாய்ப்புக்காக முயன்றுகொண்டிருப்பவரிடமிருந்து திருடுவதாகும். முதல் பாணி திருட்டுகள், இணையத்தின், சமூக வலைத்தளங்களின் கண்காணிப்பால் உடனுக்குடன் அம்பலமாகிவிடுகின்றன.

இரண்டாவது வகைத் திருட்டுதான் நம் உடனடி அக்கறைக்கும் கவலைக்கும் உரியது. இது நடப்பதற்கான சூழல் தமிழ் சினிமாவில் ஏன் இருக்கிறது என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். முழுப் படத்தின் ஸ்கிரிப்ட்டை முன்கூட்டியே எழுதிவைத்திருந்தால் அதை காப்பிரைட் சட்டத்தின் கீழ் பதிவுசெய்துவைக்க முடியும்.

அந்த ஸ்கிரிப்ட்டை ஒரு கார்பரேட் கம்பெனியிடம் கொடுத்தால், அதற்கான ஆதாரத்தை மின்னஞ்சல் வழியாகவே உருவாக்கிக்கொள்ள முடியும். இதெல்லாம் முறையாகச் செய்யாதபோதுதான் முழு ஸ்கிரிப்ட்டைக் கொடுத்ததை நிரூபிக்க முடியாமல் போகிறது.

பல சமயங்களில் கதைத் திருட்டோ சீன் திருட்டோ ஐடியா திருட்டோ நடந்ததா இல்லையா என்பதையே தீர்மானிக்க முடியாத குழப்பமான நிலையே நிலவுகிறது. இதற்குக் காரணம் இந்தப் புகார்கள் உதவி இயக்குநரிடமிருந்தோ, கதை விவாதத்தில் பங்கேற்றவரிடமிருந்தோ திருடப்பட்டதாகச் சொல்லப்படுபவை. இவற்றில் எவ்வளவு உண்மை, எவ்வளவு பொய் என்பதெல்லாம் கண்டறியக் கடினமானவை.

கதைத் திருட்டின் ஊற்றுக்கண்

இப்படிப்பட்ட புகார்கள் இனியும் தொடருமே ஒழிய, குறையும் வாய்ப்பில்லை. அதற்குக் காரணம் தமிழ் திரையுலகில் பின்பற்றப்படு

இந்த அவலத்தின் ஊற்றுக் கண் டிஸ்கஷன் என்ற வடிவம். தமிழ் சினிமாவில் மட்டுமே இருக்கும் இம்முறை இந்தி சினிமா உலகில் இல்லை. இயக்குநரின் ஒரு வரிக் கதையை டிஸ்கஷனில் விவாதித்து சீன் சொல்லி அதை வளர்த்துச் செழுமைப்படுத்த டிஸ்கஷன் ஸ்பெஷலிஸ்ட்டுகள் பலர் அழைக்கப்படுகிறார்கள்.

இவர்களில் பல ரகத்தினர் உள்ளனர். சுவையாகப் பேசவும், பல மின்னல் கீற்று போன்ற பளிச் ஐடியாக்களை சொல்லிவிட்டுப் போகவும் மட்டுமே திறமையுடையவர்கள் ஒரு ரகம். ஒரு நாள் தானும் இயக்குநராவோம் என்ற கனவுடன் நிறைய சீன் ஐடியாக்களை மட்டும் மனதில் உருவாக்கிக்கொண்டே இருப்போர் இன்னொரு ரகம்.

இவர்களில் சொந்தமான கற்பனைகளைச் செய்பவர்கள் சிலர். படித்த நாவல், சிறுகதை, பார்த்த உலக சினிமா இதிலிருந்தெல்லாம் ரெஃபரென்ஸ் எடுத்து அதற்குக் கண் காது மூக்கு வைத்து சீன் பண்ணுகிறவர்கள் சிலர்.

இப்படியானவர்களெல்லாம் இயக்குநர் நடத்தும் டிஸ்கஷனில் விதவிதமான ஐடியாக்களை உதிர்க்கிறார்கள். அவற்றைத் தனக்குத் தெரிந்த அளவில் தொகுத்து ஒழுங்குபடுத்தி திரைக்கதை வசனம் எழுதிக்கொள்வதே இயக்குநரின் ஸ்கிரிப்ட் ரைட்டிங் பணியென்றாகிவிடுகிறது.

முழுப் படம் வெளிவரும்போது அதில் எந்த டிஸ்கஷனில் யார் உதிர்த்த எந்த ஐடியா சிறப்பாக வேலை செய்திருக்கிறது என்பதைப் பொறுத்து, அவருடைய சந்தை வேல்யூவும் கூடலாம். அல்லது அவர் தன் கதைதான் திருடப்பட்டுவிட்டது என்று கூட நிஜமாகவே நம்பலாம். படத்தின் கிரெடிட் கார்டில் இந்த டிஸ்கஷன் டீமின் பலரின் பெயர்கள் எந்தப் பிரிவிலும் வராது. வரும் சில பெயர்கள் உதவி இயக்குநர் பட்டியலில் இருக்கலாம்.

ஸ்கிரிப்ட்டைத் தானே எழுதும் திறமையுடைய இயக்குநர்கள் எந்த மொழியிலும், டிஸ்கஷனில் உட்கார்வதே இல்லை. முழு ஸ்க்ரிப்டும் முடிந்த பிறகு அதைப் படத்தின் முக்கியமான டெக்னீஷியன்களுடன் உட்கார்ந்து விவாதிக்கும் டிஸ்கஷன் முறையே இந்தி சினிமாவில் பின்பற்றப்படுகிறது. டிஸ்கஷனில் இருந்துதான் கதையும் திரைக்கதையும் உருவாக வேண்டும் என்ற நிலை தமிழில் மட்டுமே இருக்கிறது.

இந்த முறையைக் கைவிட முடியாதென்றால், குறைந்தபட்சம் இந்த டிஸ்கஷன் டீமுக்கு ஒரு முறையான அங்கீகாரம் தேவை. திரைக்கதை இலாகா என்று பட்டியலிடலாம். அதற்குரிய பணத்தை முறையாகக் கொடுக்கலாம். எழுபதுகள்வரையில் இருந்த ஸ்கிரிப்ட் ரைட்டர் என்ற பிரிவை மறுபடியும் புதுப்பித்து மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஜெமினி, தேவர் பிலிம்ஸ், மாடர்ன் தியேட்டர்ஸ், எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் போன்றவை தமக்கெனக் கதை இலாகாவை வைத்திருந்தன. அவற்றில் திரைக்கதை அறிவுடையவர்கள் இருந்தார்கள்.

இன்றும் நம்மிடையே வாழும் ஆரூர் தாஸ் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பின்னர் இயக்குநரான தர், பாலசந்தர், வி.சி.குகநாதன் போன்றோரும், இயக்குநராகாமல் ரைட்டராகவே தொடர்ந்து பணியாற்றிய ஜாவர் சீதாராமன், பாலமுருகன், தூயவன், ஏ.எல்.நாராயணன் என்று இன்னும் பலரும் உண்டு.

சிறுகதை, நாவல் எழுதிப் புகழ்பெற்ற எழுத்தாளரை ஸ்கிரிப்ட் ரைட்டராக்கிவிட்டால் இந்தப் பிரச்சினை தீரும் என்பது தவறான கருத்து. வணிக சினிமாவின் தேவைக்கேற்பத் தங்களை நல்ல ஸ்க்ரிப்ட் ரைட்டர்களாகச் செதுக்கிக்கொண்ட விதிவிலக்குகள் பாலகுமாரனும் சுஜாதாவும் மட்டுமே.

அதே சமயம் மேலே சொன்ன வெற்றிகரமான ஸ்க்ரிப்ட் ரைட்டர்கள் யாரும் சிறுகதையோ நாவலோ எழுதி வெற்றி பெற்றவர்களே அல்ல. ஆனால் திரைக்கதை என்ற அமைப்புக்குள் படத்தின் இயக்குநர் தேவைக்கேற்ப எழுதும் திறமையுடையவர்கள் அவர்கள். இன்று தமிழ் சினிமாவுக்கு அப்படிப்பட்ட ஸ்கிரிப்ட் ரைட்டர்கள்தான் மிக அவசரமாகத் தேவைப்படுகிறார்கள்.

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற சினிமா பாடல், இன்று அதே துறைக்கு மிகவும் பொருத்தமாய் இருக்கிறது. தன் வழிமுறைகளை தன் அணுகுமுறைகளை தானே திருத்திக்கொள்ள வேண்டிய பெரும் கட்டாயத்தில் தமிழ் சினிமாஇருக்கிறது. அதில் ஒன்றுதான் ஸ்க்ரிப்ட் திருட்டை ஒழிப்பதற்கான வழிமுறை.

-ஞாநிகடனும்,கடனும் 'நோக்கியா'

நோக்கியன் விர்டா என்ற நதி, பின்லாந்து மக்களின் பேச்சு வழக்கில் நோக்கியா எனச் சுருங்கிவிட்டது. அந்த நதியின் கரையில் 1868-ம் ஆண்டு அமைந்த காகிதக் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு, ஐடெஸ்டெம் என்கிற உரிமையாளர் நோக்கியா எனப் பெயரிட்டுள்ளார்.

அடுத்தடுத்து வளர்ந்த நோக்கியா நிறுவனம், 1980-களின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட செல்பேசிக்கும் அந்தப் பெயரையே சூட்டி, செல்பேசி உலகில் ஏக சக்ரவர்த்தியாக வளர்ச்சியும் பெற்றது. உலகில் 10 தொழிற்சாலைகள் மூலம் செய்யப்படும் உற்பத்தியைக் கொண்டு, சந்தையில் பெரும் பகுதியைத் தன் கையில் வைத்திருந்த நிறுவனம்தான் நோக்கியா.

2010-ல் இந்திய செல்பேசிச் சந்தையில் 50% தக்கவைத்திருந்த நோக்கியா நிறுவனம், 2014-ன் ஆரம்பத்தில் 21% ஆகக் குறைந்தது. தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் தனது பங்குகளை ஒப்படைத்துவிட்டு, இந்திய நிறுவனத்தை மட்டும் விற்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது. நவம்பர் 1 முதல் உற்பத்தி நிறுத்தம்குறித்த அறிவிப்பும், அது ஏற்படுத்தியுள்ள மற்றும் ஏற்படுத்தப்போகும் வேலை இழப்பும், இளம் தொழிலாளர் மத்தியில் பெரும் பதற்றத்தையும் பன்னாட்டு நிறுவனங்கள் மீதான கேள்விகளையும் உருவாக்கியுள்ளது.

விற்பது - இணைப்பது புதிதல்ல நோக்கியாவைப் பொறுத்த அளவில் தனது நிறுவனத்தை வேறொரு நிறுவனத்துடன் இணைப்பது புதிதல்ல. ஏற்கெனவே, செல்பேசித் தயாரிப்புக்குள் வருவதற்கு முன், ஃபின்னிஷ் ரப்பர் ஒர்க்ஸ் மற்றும் ஃபின்னிஷ் கேபிள் ஒர்க்ஸ் ஆகிய இரண்டு நிறு வனங்களுடன் இணைந்த வரலாறு 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இருந்திருக்கிறது. காகிதம், ரப்பர், கேபிள், மின்சாரம், மின்னணுச் சாதனங்கள் என ஐந்து தொழில்களில் ஈடுபட்டுவந்த நோக்கியா, பல்வேறு இணைப்புகளையும் விற்பனைகளையும் சந்தித்துதான் வளர்ந்திருக்கிறது. செல்பேசி தயாரிப்புக்குப் பின்னரே, குறிப்பாக 1994-க்குப் பின், உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனமாக நோக்கியா மாறியது.

ஜி.எஸ்.எம். என்ற இரண்டாம் தலைமுறை செல்பேசிக்கான ஒழுங்குமுறையையும், சி.டி.எம்.ஏ. என்ற மூன்றாம் தலைமுறை ஒழுங்குமுறையையும் மிக சாமர்த்தியமாகக் கையாண்டு, சந்தையில் தங்கள் செல்பேசி விற்பனையை மேம்படுத்திக்கொண்ட அனுபவம், மற்ற செல்பேசி நிறுவனங்களைவிடவும், நோக்கியாவுக்குத்தான் அதிகம்.

சி.டி.எம்.ஏ. ஒழுங்கு முறை என்ற 3ஜி, இந்தியாவில் அறிமுகம் செய்யப் படுவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே, அமெரிக் காவிலும் ஐரோப்பாவிலும் நோக்கியா அறிமுகப்படுத்தி, தனது செல்வாக்கை நிலைநாட்டியிருந்தது.

ஒரு செல்பேசியைத் தயாரிப்பதற்கு, 300-க்கும் மேற்பட்ட உதிரி பாகங்கள் தேவை. இவை சரியான நேரத்தில் கிடைப்பதும், அதற்கான உற்பத்தித் திறன் கொண்ட நிறுவனங்களுடன் உடன்பாடு கொண்டு செயல்படுவதும் தவறில்லை என்று நோக்கியா தலைமை முடிவெடுத்து, வேலைகளைப் பிரித்தது. இதன் காரணமாகவே இந்தியாவில் உருவாக்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ஃபாக்ஸ்கான், சால்காம்ப், லைட் ஆன் மொபைல் உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. பி.ஒய்.டி, ஃபிலெக்ஸ்ட்ரானிக்ஸ், ஆர்.ஆர்.டோனல்லி ஆகியவை அருகில் உள்ள சிப்காட்டில் செயல்பட்டுவருகின்றன.

நோக்கியா பல உதிரி பாகங்களை வேறு நிறுவனங்களிடம் ஒப்படைத்து, பிரதான வடிவமைப்பைத் தன் கைவசம் வைத்துக்கொண்டு, பாகங்களை ஒன்று சேர்க்கும் வேலையில் தீவிரமாகக் கவனம் செலுத் தியது. நோக்கியாவின் சந்தை விரிவாக்கம் பரந்ததாக இருந்த நிலையில், தனது தயாரிப்புப் பெயரைத் தக்க வைத்துக்கொள்வதற்காகவும், சிக்கனத்தைக் கையாளவும், மேற்குறிப்பிட்ட உற்பத்தி முறையில் தீவிரமாகச் செயல்பட்டது. இது மிகப் பெரிய பலனையும் நோக்கியாவுக்கு அளித்தது.

இந்தியாவில் முதலீடும் வருவாயும் செல்பேசி விற்பனையில், இந்தியச் சந்தையைக் கைப்பற்ற எடுத்த முயற்சியிலும் வெற்றி பெற்றது. இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கும் முன்னரே இந்தியச் சந்தையில் நோக்கியா செல்பேசிகள் விற் பனை செய்யப்பட்டாலும், இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கிய 2006-ல் மட்டும் 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 10 ஆண்டுகளில் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு நோக்கியா செல்பேசிகள் பெரும்புதூரில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையாகியுள்ளன. இந்தியாவில் நோக்கியா நிறுவனம் 2005, ஏப்ரல் மாதம் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தொடக்கத்தில் ரூ. 675 கோடியும், பின்னர் அடுத்த கட்டத்தில், சில நூறு கோடி ரூபாயும் முதலீடு செய்யப்படும் என்று உறுதிப்படுத்தியது. தமிழ்நாடு அரசு தொழில்துறை அரசாணை எண்-59 இந்த விவரத்தை அளித்திருக்கிறது.

இதற்காக சிப்காட் மூலம், ஸ்ரீபெரும்புதூர் ஏரிக்கரையில், 200 ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம்செய்து, ஏக்கர் ஒன்றுக்கு 4.5 லட்சம் ரூபாய்க்கு 99 வருடக் குத்தகைக்குக் கொடுக்கப்படும், பத்திரப் பதிவுக் கட்டணம் 0% என்பது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்குத் தமிழக அரசு ஒப்புதல் அளிக்கிறது என அரசாணை தெரிவிக்கிறது. இதற்கு மேல், வணிக வரி, விற்பனை வரி ஆகியவற்றை 10 ஆண்டுகளுக்குச் செலுத்த வேண்டியதில்லை.

வேலை ஒப்பந்த வரி, குத்தகை வரி, நுழைவு வரி ஆகியவற்றிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இத்தனை சலுகைகளும், தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காகவே என அரசுகள் அன்றைக்கு அறிவிப்பு செய்தன.

மென்பொருள் இறக்குமதி, அதற்காகப் பணத்தைத் திருப்பிச் செலுத்தியது போன்றவை மத்திய வருமான வரித் துறையால் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, தற்போது வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரி பாக்கி என்று குறிப் பிடப்பட்டுள்ளது. மாநில அரசு, வாட் வரியைத் தள்ளுபடி செய்தது. உள்நாட்டு விற்பனைக்குக் கொடுத்த சலுகையை, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ததற்கெல்லாம் அளிக்க முடியாது என்று 2,400 கோடி ரூபாய் வரி கோரி வழக்குத் தொடுத்து, முடிவாகாமல் உள்ளது.

இந்தப் பின்னணியில்தான் மைக்ரோசாஃப்ட், நோக்கியாவை விலைக்கு வாங்கியது. இந்திய ஆலையை வாங்க முடியாது என்று மறுத்துவிட்டதால், நோக்கியா பெயரில் செல்பேசி விற்கப்பட்டாலும் இந்தியாவில் உள்ள நோக்கியாவின் உரிமை, ஒப்பந்த தாரர் என்ற பெயரில் சுருங்கியது. ஒரு திரைப் படத்தில், “மாப்பிள்ளை இவர்தான். ஆனால், இவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது” என்று வரும் நகைச்சுவையைப் போல், நோக்கியா செல்பேசி விற்பனையாகும்; ஆனால், நோக்கியாவுக்குச் சொந்த மில்லை என்கின்றனர்.

இந்தியாவில் உள்ள நோக்கியா ஆலையை, மைக்ரோ சாஃப்ட் வாங்க மறுத்ததால், குறிப்பிட்ட காலத்துக்கு, குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே ஆர்டர் என்று ஒப்பந்தம் செய்துகொண்டதாகக் கூறுகிறார்கள். எனவே, முதலில் ஒப்பந்தத் தொழிலாளர்கள், பயிற்சித் தொழிலாளர்கள் என்று 5,000 தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர், 4,500 நிரந்தரத் தொழிலாளர்கள் விருப்ப ஓய்வுத் திட்டத்தில் வெளியேற்றப்பட்டார்கள். உதிரி பாக உற்பத்தி நிறுவனங்களிலும் இது பிரதிபலித்தது. அங்கும் விருப்ப ஓய்வு, ஆலை மூடல் காரணமாக சுமார் 5,000-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

நேற்றோடு ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிவந்த இந்த நிறுவனம் முற்றிலுமாக மூடப்பட்டுவிட்டது.

கனெக்டிங் பீப்பிள் - டிஸ்கனெக்டிங் எம்ப்ளாயீஸ்

- எஸ். கண்ணன்,
மாநிலக் குழு உறுப்பினர், சிபி(ஐ)எம்,

 
Follow @kadaitheru