Thursday, October 15, 2009

நடிகர் விவேக்கிற்கு ஒரு பகிரங்க கடிதம்வெட்கம் இல்லாத விவேக் அவர்களுக்கு,


மூடநம்பிக்கைகள் எல்லா மதங்களிலும் இருக்கின்றன. ஆனால், முற்போக்குத்தனம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட மதத்தின் பழக்க, வழக்கங்களை மட்டும் திரைப்படங்களில் நக்கல் செய்யும் உங்கள் கோமாளித்தனதிர்க்கு வர,வர ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.சரி, சினிமாவில் நீங்கள் உங்களை அறிவுஜீவியாக காட்டிக்கொள்வதர்க்காக இப்படியெல்லாம் உளறுகிறீர்கள் என்று எங்களால் புரிந்துகொல்ல முடிகிறது. ஆனால், நிஜ வாழ்க்கையில் உங்கள் முட்டாள்தனம், உங்கள் நடிப்பையும் மீறி வெளிப்பட்டுவிட்டது பத்திரிகையாளர்களை பற்றிய உங்கள் கிழ்த்தரமான பேச்சில்.


"டேய்! யாரு படத்தடா போடுற? உங்கக்கா, உங்கம்மா,உன் பாட்டி நிர்வாண படம் இருந்த அத எடுத்து போடு. இங்க திரிஷா குளிக்கிறத எடுத்து இன்டெர்நெட்ல உட்டியே, உன் பொண்டாட்டி, உன் அக்கா ,உன் அம்மா குளிக்கிற படம் இருந்த அதைப் போடு" என்ற ரீதியில் நடந்த உண்மையை எதிர்கொள்ள முடியாமல், எங்கே தானும், தன்னை சேர்ந்தவர்களும் மாட்டிக்கொல்வார்களோ என்ற பயத்தில் பேசிவிட்டீர்கள் திரு.விவேக் அவர்களே.

இப்படியெல்லாம் பேசிய உங்களை ஒன்று மட்டும் கேட்கிறேன். உங்களுடன் அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நடிகைகள் எல்லாருமே பத்திரிக்கையாளர்களை வலுவில் அழைத்து 'போஸ்' கொடுத்து இருக்கிறார்கள் என்ற உண்மை உங்களுக்கு தெரிந்தும், தெரியாத மாதரி எப்படி நடிக்க முடிந்தது உங்களால்??.


இவ்வளவு ஏன்? நீங்கள் வக்காலத்து வாங்கும் புவனேஸ்வரி அவர்களே வாய்ப்புகளுக்காக(?) தனது 'தரமான' படங்களை பத்திரிக்கைகளுக்கும், இணையதளங்களுக்கும் வாரி வழங்கி இருக்கிறார். அது எல்லாம் நீங்கள் சொன்ன வெறும் மார்பிங்க் இல்லை விவேக்...நிஜம்...உங்கள் நிழல் உலகின் நிஜம்.


இரட்டை அர்த்தங்கள் வாராத உங்கள் காட்சிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதை காமெடி என்பீர்கள். பொது மேடைகளில் மட்டும் நீங்கள் சகோதரிகள் என்று அழைக்கும் சக நடிகைகளின் முத்த மற்றும் கவர்ச்சி காட்சிகளை என்னவென்று அழைப்பீர்கள்? எல்லாம் 'தொழில்' என்று ஆகிவிடுமா? தவறு செய்யும் பெண்கள் எல்லா துறைகளிலும், குடும்ப பெண்கள் என்னும் போர்வையிலும் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதேசமயம் சினிமா உலக பெண்கள் பற்றி உங்களுக்கு தெரியாதது இல்லை. அப்படி இருந்தும், பத்திரிக்கையாளர்களை விமர்சிப்பது என்ன நியாயம்??.


நீங்கள் கடவுளை கிண்டல் செய்தால், மத உணர்வுகளை காமெடி என்ற பெயரில் நக்கல் செய்தால், அதை அனைவரும் பொறுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், போலீசிடம் கையும், களவுமாக மாட்டிய நடிகைகளை பற்றி எழுதினால் உங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. கூட்டம் போட்டு வாய்க்கு வந்தபடி கேவலமாய் பேசுவீர்கள் இல்லையா?


சினிமா பிரஸ் கிளப் சார்பில் ஒரு தீர்மானம் நிறைவேற்றபட்டு இருக்கிறது. அதில் "நாட்டின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் திரு.விவேக் அந்த விருதின் தன்மையையும், கவுரவத்தையும் சீர்குலைக்கும் விதத்தில் பொது நிகழ்ச்சியில் பேசியிருப்பதையும் அவருடைய திரைப்படங்களில் ஊனமுற்றவர்களையும், பெண்களையும் இழிவுபடுத்தி வசனம் பேசி வருவதையும் மத்திய அரசுக்கு உரிய ஆதாரங்களுடன் தெரியப்படுத்தி அந்த விருதை திரும்ப பெற வேண்டுகோள் வைக்க வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


உங்களை சொல்லி குற்றமில்லை. உங்களை எல்லாம் 'பெரியஆளாய்' ஆக்கிய எங்களையும் , நாகேஷ்,தங்கவேலு போன்ற சிறந்த கலைஞர்கள் கூட பெற முடியாத, விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் பெறக்கூட தகுதி இல்லாத உங்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியவர்களையும்தான் குற்றம் சொல்லவேண்டும்.பதிவு : இன்பா

5 comments:

சொல்ல விருப்பமில்லை said...

பதிவுக்கு வாழ்த்துக்கள். இருந்தாலும், கடைசி பாராவில் குறிப்பிடப் பட்டிருப்பது போல், விவேக் அவர்களின் அதிமேதாவித் தனமான உளறல்களுக்கு எல்லாம் பதில் சொல்லி அவரை பெரிய ஆளாக ஆக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Anonymous said...

Vivek MAAMA! If you have guts, why don't you educate other religion people too?

Anonymous said...

விவேக் வெறும் வெத்து வேட்டு.
காமெடி என்ற பெயரில் ஹிந்து மதத்தைச் சார்ந்த்வர்களின் மனதைப் புண்ணாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புண்ணாக்கு.
தரம் தாழ்ந்த பேச்சு அவரின் தரத்தைத் தண்டோரா போடுகிறது.
அவ்வளவுதான்.

R.Gopi said...

பகுத்தறிவு பேசும் (படத்தில் மட்டும்...) விவேக் அவர்கள் அவர் வீட்டை கட்டும் போது, வாஸ்து பார்த்து கட்டியது எவ்வளவு பேருக்கு தெரியும்???

நல்லா தோலுரிக்கணும் இந்த மாதிரி "பசப்பல் பகுத்தறிவுவாதிகளை"...

இது போன்று பதிவுகள் நிறைய எழுதுங்கள்...

சீனு said...

விவேக்கை பத்தி மத்தவங்க கிட்ட கேட்டா தான் தெரியும், இவன் எவ்வளவு ஒரு கீழ்தரமான மனிதன் என்பது.

இவன் அடிக்காத இரட்டை அர்த்த வசனங்களா? என்னமோ இவன் தான் யோக்கியன் மாதிரி பேசுவான். இதில் பெரிய்ய புடுங்கி மாதிரி, அப்துல் கலாம அடிக்கடி மேற்கோள் காட்டி பேசுவான்.

சினிமா ஃபீல்டுல விபச்சாரமும், அடுத்தவன் கூட படுத்துக்கிறதும் சாதாரணம். அதுக்காகக அத ஈஸியா எடுத்துக்க முடியாது. அடுத்த வேளை சோத்துக்காக விபச்சாரம் பன்னுறதும், அடுத்த பட சான்ஸுக்காக விபச்சாரம் பன்னுறதும் வேற வேற. இவளுங்கள பத்தி வெளியில சொன்னா மட்டும் தப்பாம்.

பணத்துக்காக உடம்புல இருக்கிற துணிய குறைச்சுக்கிறாங்களே, இவங்க என்ன யோக்கியமா? சில நேரங்களில், இயக்குநர் சொல்வதை விட இவங்களே அதிக 'ஈடுபாடோட' நடிக்கிறதே மார்க்கெட் பிடிக்கத்தானே.

மொதல்ல இவனுக்க் பத்மஸ்ரீ கொடுத்ததே தப்பு. இது அந்த விருதையே கேவலப்படுத்திட்டாங்க. இவன் என்ன புடுங்கிட்டான்னு பத்மஸ்ரீ கொடுத்தாங்கன்னு தெரியல. மளையாளா பொன்னுங்கன்னாலே புடைவை இல்லாம காட்டினதுக்கா, 'தக்காளி பிதுங்கிடுத்து' நு பேசுவானே அதுக்கா?, 'அது நெஞ்சூ...'னு சொல்லுவானே அதுக்கா இல்ல, ஜாதி கூடாதுன்னு சினிமாவுல சொல்லிட்டு அடிக்கடி ஜாதி விழாக்கள்ல கலந்துகிட்டு 'நாம தான் அடுத்தவங்களுக்கு வழிகாட்டனும்'னு பேசினானே அதுக்கா? இவன் என்ன புடுங்கிட்டான்னு பத்மஸ்ரீ கொடுத்தாங்கனு புரியல...

//நாகேஷ்,தங்கவேலு போன்ற சிறந்த கலைஞர்கள் கூட பெற முடியாத, விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் பெறக்கூட தகுதி இல்லாத உங்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியவர்களையும்தான் குற்றம் சொல்லவேண்டும்.//

நம்மளை நாமளே செருப்பால அடிச்சுக்கனும், இவனுக்கு விருது கொடுத்ததுக்கு.

இவனுக்கெல்லாம் கடிதம் எழுதறதே வேஸ்ட்.

 
Follow @kadaitheru