Saturday, October 10, 2009

சமாதானபுறா - அதிபர் ஒபாமா



அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள்து.

அணு ஆயுத பரவலை தடுக்க வேண்டும் என்று உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்து, அது தொடர்பான முயற்சிகளை மேற்கொண்டு வருவதற்காகவும், உலக அமைதிக்காக பாடுபட்டு வருவதற்காகவும் 2009 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் அதிபர் பதவியை வகிக்கும் முதல் ஆப்ரிக்க - அமெரிக்கரான ஒபாமா, அணு ஆயுத ஒழிப்புக்கு குரல் கொடுத்துவருவதோடு,அமெரிக்க அதிபராக தாம் பதவியேற்றதிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளில் நின்றுபோய் இருக்கும் அமைதி பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்காகவும் பாடுபட்டு வருகிறார்.


அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஒரு ஆண்டுக்கும் குறைவான காலக்கடத்திற்குள்ளாகவே, உலக அரங்கில் அசாதாரணமான அளவில் இராஜ்ஜிய நடவடிக்கைகளை பலப்படுத்தி வருவதாகவும், மக்களிடையே ஒத்துழைப்பு நிலவ முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அமைதிக்கான நோபல் பரிசு தேர்வுக் கமிட்டி ஒபாமாவை பாராட்டியுள்ளது.


கடைக்காரர் கமெண்ட் : இன்னும் ஒரு வருஷத்துல நிலைமை சீராய்டிசுன்னு(?) ஈராக்லேர்ந்து துருப்புகளை வாபஸ் வாங்க போறாங்களாம். இன்னும் 40,000 துருப்புகளை கூடுதலா ஆப்கனிஸ்தான்னுக்கு அனுப்புது அமெரிக்கா. இன்னும் இஸ்ரேல், பாலஸ்தின பிரச்னை முடியல.. கலைஞருக்கு சினிமாவுல நல்லா வசனம் எழுதறாருன்னு அவார்டு கொடுத்த மாதரி இருக்கு... ஒபாமாவுக்கு நோபேல் பரிசு...



பதிவு : இன்பா

0 comments:

 
Follow @kadaitheru