"அசல்" படத்தின் டான்ஸ் மாஸ்டர் கணேஷ் ஆச்சாரியாவின் ஒரிஜினல் பெயரும் சிவாஜி கணேசன்."நடிகர் திலகம் பிறந்த அதே ஊரில் பிறந்ததால், அவர் பெயரையே வைத்து விட்டனர் என் பெற்றோர்கள் " என்கிறார் இந்த சிவாஜிகணேசன்.
கணேஷ் ஆச்சாரியா இவரே வைத்து கொண்ட பெயர்.. சிறு வயதில் பெற்றோர்கள் இவரை மும்பை அழைத்து சென்று விட்டனர். 12 வயதில் அங்கு ஜூனியர் ஆர்டிஸ்ட் அசோசியேஷன் உறுப்பினர் ஆனார். பின்னர் 14 ஆவது வயதில் டான்ஸ்சர் அசோசியேஷன் உறுப்பினர். தனது 17 ஆவது வயதில் நடன உதவியாளர்.
இன்று பாலிவுட்டில் தவிர்க்க முடியாத, நம்பர் ஒன் டான்ஸ் மாஸ்டர் நம்ம சிவாஜிகணேசன் தான்.
டான்ஸ் மாஸ்டர் ஆக 1992 ஆம் வருடம் வெளிவந்த ஆணம் தொடங்கி, சமீபத்திய பெரும் வெற்றி படங்கள் ஆன ஆமிர்கான் நடித்த ரங்க் தே பசந்தி, ஷாருக் நடித்த சக் தே இந்தியா மற்றும் கார்ஸ் 4 ஆகைய அனைத்தும் இவருக்கு புகழ் தேடி தந்தன.
சுமார் 120 படங்களில் நடன இயக்குநராகவும், பல படங்களில் சிறு வேடங்களில் நடித்தும் இருக்கிறார்.
நடனம் என்பதை தாண்டி திரை பட இயக்குநராகவும் சாதித்து இருக்கிறார் கணேஷ். ஜுஹி சவலா நடித்த சுவாமி (Swami (2007)) என்ற இந்தி படம்தான் இவரது முதல் படம். "என் வீட்டில், எனது தந்தைக்கும், தாய்க்கும் உள்ள உறவையே முதல் படத்தின் கதையாக அமைத்தேன் " என்று குறிப்பிடுகிறார்.
இவரது இரண்டாவது படம் Money Hai Toh Honey Hai (2008).
அஜய் தேவுகன் நடித்து, உலகம் எங்கும் கவனம் பெற்ற "ஒம்காரா" படத்தில் நடனம் அமைத்தமைக்கு 2006 ஆண்டின் சிறந்த நடன இயக்குநருக்கான ஃப்லிம் ஃபேர் விருது பெற்றவர் கணேஷ்.
"இந்த விருது பெற்றது குறித்து நான் எதுவும் உணர வில்லை. காரணம், இந்த வெற்றிக்கு ஆதாரணமான என் தந்தை உயிரோடு இல்லை. மேலும், என் திறமைகளுக்கு உரிய அங்கீகாரம் பெற நான் வருடங்கள் பல காத்து இருந்தேன் " என்று தெரிவித்தார்.
தமிழில் "அழகாய் இருக்கிறாய். பயமாய் இருக்கிறது " படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்து இருக்கிறார்.
"கடந்த 19 வருடங்களாக இந்தியில் கோவிந்தா,ஷாருக்கான், ஹிரித்திக் ரோஷன் ஆகிய அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் நடன இயக்குநராக பணி புரிந்து இருக்கிறேன். தமிழில் இப்போதுதான் நல்ல வாய்ப்பு வந்து இருக்கு " என்றார் இவர்.
அசல் தமிழரான கணேஷ் ஆச்சாரியா என்கிற சிவாஜிகணேசன் , அசல் படத்துக்கு பின் இந்தி சினிமாவை போலவே, நம் தமிழ் சினிமாவையும் ஆட்டிவைப்பார் என எதிர்பார்க்கலாம்.
பதிவு : இன்பா
1 comments:
எங்கே கிடைக்குதய்யா நம்ம கடைக்காரருக்கு இது போல் நயம் சரக்கு.
தேடித் தேடி வாடிக்கையாளருக்கு தகவல் தருவதில் உங்களை அடிச்சுக்க ஆளே இல்ல தல.
Post a Comment