ஒரு காலத்தில் தமிழ் சினிமா என்றாலே, வட இந்தியர்களுக்கும் சரி, இந்தி சினிமா உலகிற்கும் சரி. ஒரு அலட்சியமான பார்வை இருந்தது. ரஜினி உட்பட நமது ஹீரோக்களை பற்றிய கிண்டல் உணர்வே இருந்தது.
அந்த பார்வையை தகர்த்து, இந்தி சினிமா உலகை விட, நம் தமிழில் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இருக்கிறார்கள் என்று நெற்றிபொட்டில் அடித்தாற்போல அவர்களுக்கு புரிய வைத்த படம்...இந்தியில் டப் செய்யப்பட்டு காஷ்மீர் உட்பட வட மாநிலங்களை கலக்கிய "ரோஜா".
ரோஜாவின் இயக்குனர் மணிரத்னம், இப்படத்தின் இந்தி வெளியீடு மூலம் அங்கு தவிர்க்க முடியாத ஒரு முக்கிய இயக்குனர் ஆனார்.
அதைவிட, வட இந்திய சினிமாவையே பிரமிக்க வைத்தது...ரோஜா படத்தின் பாடல்களும், மிரட்டலான பின்னணி இசையும்.
அதுவரை, யாரும் கேட்டிராத புதுப்புது இசை ஒலிகளை எழுப்பி, ஹாலிவுட் படங்களுக்கு இணையான இசையை தந்தார் நமது ஏ.ஆர்.ரகுமான்.
பின்னர் இதே மணிரத்னம் - ரகுமான் கூட்டணியில் வந்த "பம்பாய்" படமும், படத்தின் இசையும் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்ப்பை பெற்றது.
ராம்கோபால் வர்மா தனது "ரங்கீலா" படத்தின் மூலம் நேரடியாக இந்தி படத்தில் ஏ.ஆர்.ரகுமானை இசை அமைக்க வைத்தார். இந்தியா மட்டுமில்லாமல் உலகம் எங்கும் ரங்கீலாவின் வசீகர இசையால் கவனம் பெற்றார் ரகுமான். இந்திய இளசுகளின் தேசிய கீதமானது ரங்கீலா பாடல்கள். இந்தியாவின் நம்பர் ஒன் இசை அமைப்பாளர் ஆனார் ரகுமான்.
அதன் பின், இந்தியில் வெளிவந்த "தாள்", "உயிரே" தொடர்ந்து உலகையே கவர்ந்த "லகான்" என்று இசை புயலின் ஆதிக்கம் இந்திய சினிமாவில் தொடர்ந்து வீசிவருவது நாம் அறிந்ததே.
ஏ.ஆர்.ரகுமான் கால்ஷீட் இல்லாவிட்டால் மட்டுமே மற்ற இசை அமைப்பாளர்களை தேடுகிறார்கள் ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் இயக்குனர்கள் அனைவரும்.
இதில் பல பேருக்கு வயற்றுஎரிச்சல் குறிப்பாக இந்தி சினிமா உலகில் உள்ளோருக்கு.
Slumdog Millionaire படத்திற்கு சினிமா உலகின் மிகபெரிய விருதான "ஆஸ்கார்" விருதினை ஏ.ஆர்.ரகுமான் வென்றதும், அந்த விருது பெற்ற மேடையில் தமிழில் பேசி தனது தமிழன் என்ற அடையாளத்தை அறிமுகப்படுத்தியதும் வட இந்திய இசை அமைப்பாளர்களை 'மண்டை கொதிக்க' வைத்திருக்கும் என்று சமிபத்தில் நடந்த ஒரு சம்பவம் மெய்ப்பிக்கிறது.
இஸ்மாயில் தர்பார் (படத்தில் இருப்பவர்) - இந்தி சினிமாவின் ஒரு முக்கிய இசை அமைப்பாளர். ஹம திலே தி சுக்கே சனம், தேவதாஸ் படங்களின் இசை அமைப்பாளர்.
இவர் சமிபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்த ஒரு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தி இருக்கிறது.
" Slumdog Millionaire படம் எப்படி இசைக்கான இத்தனை கவுரவமிக்க விருதினை பெற்றது என்று எனக்கு தெரியவில்லை. இதற்க்கு பதில் ரோஜா அல்லது பம்பாய் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானுக்கு விருது கிடைத்திருந்தால் கூட சரி என்று சொல்லலாம்.
ஆனால், Slumdog Millionaire படத்திற்கு ரகுமானுக்கு ஆஸ்கார் விருது கிடைத்து இருப்பதின் மூலம் அந்த விருதுக்கு என்ன மதிப்பு இருக்கிறது? " - என்று தெரிவித்து இருக்கிறார் இஸ்மாயில் தர்பார்.
ஆஸ்கார் விருது பெற்ற இந்த படத்தை விட, சிறப்பான இசையை தனது முந்தைய படங்களில் தந்து இருக்கிறார் ரகுமான் என்கிற அவரது கருத்து சரியானதே.
ஆனால், சர்வதே நிறுவனம் மற்றும் குழுவினர் உருவாகிய Slumdog Millionaire படம் போன்று ரகுமான் இசை அமைத்த முந்தைய படங்கள் சர்வதேச திரை உலகை சென்று அடையவில்லை. அவ்வாறு ரீச் ஆகியிருந்தால், ரகுமானுக்கு எப்போது இந்த ஆஸ்கார் விருது கிடைத்து இருக்கும்.
இஸ்மாயில் தர்பரின் இந்த கருத்தாவது பரவாயில்லை.
அவர் ஒரு அளவுக்கு மீறி, "ஏ.ஆர்.ரகுமான் இந்த ஆஸ்கார் விருதை பணம் கொடுத்து வாங்கி விட்டார்" என்று அபாண்டமான ஒரு குற்றச்சாட்டை ரகுமான் மீது சுமத்தி இருக்கிறார் இஸ்மாயில் தர்பார்.
இஸ்மாயில் தர்பாரின் இந்த பேச்சுக்கு வட இந்திய இசை உலகில் லலித் பண்டிட், சுலைமான் மர்ச்சன்ட் உட்பட பல முக்கியஸ்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள் என்பதை நாம் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
இந்தியா மட்டும் இல்லாமல் ஹாலிவுட்டிலும் அடிபட்டு இருக்கிறது இந்த இஸ்மாயில் தர்பாரின் குற்றச்சாட்டு.
"ஆஸ்கார் விருது கமிட்டியில் 3000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களை எப்படி விலை பேசமுடியும்" என்று ஆவேசமாக மறுப்பு தெரிவித்து இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.
தேவதாஸ் போன்ற படங்களின் மூலம் நல்ல தரமான இசையை தந்த இஸ்மாயில் தர்பார், ஏ.ஆர்.ரகுமான் பற்றியும், அவருக்கு வழங்கப்பட்ட ஆஸ்கார் விருது பற்றியும் கொஞ்சமும் தரமில்லாமல் பேசி இருக்கிறார்.
ஒரு உயரிய விருது பெற்ற சக கலைஞனை, இப்படி முறையில்லாமல் பேசி
அவமானப்படுத்துபவன் எப்படி ஒரு நல்ல கலைஞனாக இருக்க முடியும்??
-இன்பா
Tuesday, May 31, 2011
விலைக்கு வாங்கியதா ஆஸ்கார் விருது? - ஏ.ஆர். ரகுமான்
Posted by கடை(த்)தெரு at 10:14 PM
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இவர்களுக்கெல்லாம் வேறு வேலை பொழப்பு இல்லை போலும்... எல்லாம் பொறாம தன வேற என்ன
Slum Dog Millionaire படம் ஆஸ்கார் விருது வாங்குவதற்கு முன்னரே BAFTA போன்ற பல சரதேச விருதுகளைப் தட்டிச் சென்றிருந்தது, மேலும், ஆஸ்காருக்குப் பின்னரும் கிராமி விருதையும் பெற்றது. ஆஸ்கார் விருதுக் குழுவில் உள்ள மூவாயிரம் பேருக்கும் மேல் இத்தனை விருதுக் குழுவினரும் இருக்கிறார்கள். இத்தனை பேரும் பணத்துக்கு சோரம் போய் விட்டார்கள் என்பது கற்பனையில் அதீத கற்பனை, மனநிலை சரியாக உள்ள ஒருத்தன் இந்த மாதிரி பேச மாட்டான்.
Post a Comment