Tuesday, May 10, 2011

பிகினி உடையில் 'திருமகள்' உருவம்


ஒரு மதத்தின் கடவுள்களை தங்களின் வியாபார நோக்கத்திற்கு அல்லது பிரபலமாவதற்கு பயன்படுத்துவது தற்போது ஒரு பேஷனாகி விட்டது.

நமது இந்தியாவை எடுத்துக்கொள்வோம்.

தற்போது கட்டார் நாட்டில் செட்டில் ஆகிவிட்ட பிரபல ஓவியர் எம்.எப்.ஹுசைன், பிரபலமானதற்கு முக்கிய காரணம் அவர் சரஸ்வதி மற்றும் லட்சுமி போன்ற இந்து கடவுள்களை நிர்வாண ஓவியமாக வரைந்ததுதான்.

சில வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் காலில் அணியும் காலணிகளில் சரஸ்வதி மற்றும் விநாயகர் உருவங்கள் பதிக்கபட்டு வெளிவந்தன. இது அங்கு வாழும் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதை போன்று, ஐரோப்பாவில், உருவமே இல்லாத நபிகள் நாயகம் அவர்களின் உருவத்தை ஒசாமா பின்லேடன் பாணியில் ஒரு தீவிரவாதி போன்று ஒரு படம் வெளியிடப்பட்டது. அது முஸ்லிம் மக்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்ப்படுத்தியது.

தற்போது, சமிபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற Sydney Fashion week நிகழ்ச்சியில் ஒரு மாடல் "பிகினி" உடை அணிந்து வந்தார்.

அந்த உடையில், இந்து கடவுளான லட்சுமியின் உருவம் இருந்தது.
(பார்க்க படம்)

இந்த உடையை வடிவமைத்தவர் லிசா ப்ளூ என்ற குழுவினர்(Lisa Blue Fashion House).

பிரட் கல்வின் என்கிற லிசா ப்ளூ பாஷன் ஹௌஸை சேர்ந்த டிசைனர், "இந்தியாவின் கலாச்சாரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கவே இந்த உடையை வடிவமைத்தோம்" என்கிறார்.

ஆஸ்திரேலியாவாழ் இந்துக்கள் மட்டுமலாமல், இந்தியாவிலும் இதற்க்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.


நமது மதஉணர்வுகளை தூண்டுவதை மேலைநாட்டினர் எதோ பொழுதுபோக்கை போன்று செய்துவருகிறார்கள்.

"நாங்கள் மத உணர்வுகளை மதிக்க தெரிந்தவர்கள். பல நாட்டு கலாச்சாரங்களை கொண்டாடுவதோடு, எங்கள் 'பிராண்ட்' மூலமாக அதை அனைவருக்கும் பகிரவே இப்படி வடிவமைத்தோம்" - இதுதான் இந்த ஆடைவடிவமைப்பு குறித்து Lisa Blue தந்திருக்கும் தரும் விளக்கம்.

இந்த விவகாரமோ, முன்னதாக சொன்ன நபிகள் நாயகம் விவகாரமோ, இதை போன்று மத கடவுள்களை இழிவு படுத்துவதை வேண்டுமென்றே தெரிந்து செய்கிறார்களா அல்லது இதன் பாதிப்புகள் பற்றி தெரியாமல் செய்கிறார்களா?


-இன்பா

1 comments:

Anonymous said...

கடவுள் பெயரில் உள்ள கம்பெனி பெயர்கள், உதாரணத்திற்கு "லக்ஷ்மி சீவல்" . அதன், உபயோகித்த காலி பாக்கெட்டுகள் ரோட்டில், காலில், டாய்லெட்டில்,இன்னும் என்னன்னமோ இடத்தில் கிடக்குதே அதுக்கு என்னபண்றதாம்?
இதுமாதிரி நிறையயிருக்கு அண்ணாச்சி,

 
Follow @kadaitheru