இரண்டு தலைவர்களுமே ஒரு தரப்பால் பயங்கரவாதிகளாகவும், இன்னொரு தரப்பால் மாபெரும் போராளிகளாகவும் பார்க்கப்பட்டனர்.
ஒருவர் தனது இனத்தின் பெயராலும்,மற்றவர் தனது மதத்தின் பெயராலும் தங்களது இயக்கங்களை வழிநடத்தினார்கள்.
ஒசாமா பின்லேடன், தனது இயக்கத்தின் தாக்குதல்களை மதத்தின் பெயரால் 'புனித போர்' என்றார். பிரபாகரன், தனது இன மக்களுக்கான தனிநாடு என்ற முழக்கத்தை முன்னிறுத்தினார்.
இரண்டு தலைவர்களின் இயக்கங்களுமே, தங்களின் தாக்குதலுக்கு விமானங்களை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இரண்டு தலைவர்களுமே தலையில் சுட்டிக்கொல்லப்பட்டதாக அறிவிக்கபட்டு உள்ளார்கள்.
ரத்த மாதிரிகளின் அடிப்படையில் இருவரின் உடல்களும் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
இரண்டு தலைவர்களையும் தாக்கி கொலை செய்த நாடுகள், அதற்க்கான முழுமையான ஆதாரங்களை உலகத்திடம் இன்னமும் வெளியிடவில்லை.
எந்த ஒரு இயக்கத்தின் தலைவராக இருந்தாலும், எதிரிகள் தன்னை சுற்றி வளைத்து விட்டார்கள் என்று தெரிந்த நிமிடத்தில், தற்கொலை செய்து கொள்வது உளவியியல் ரீதியான உண்மை.
அப்படியிருக்க, பிரபாகரன் மற்றும் பின்லாடனை தாங்கள்தான் சுட்டோம் என்று முறையே இலங்கை மற்றும் அமெரிக்க ராணுவங்கள் கூறுவது எவராலும் ஏற்கமுடியாதது.உலகம் ஒப்புக்கொள்ள மறுத்து வருகிறது.
பிரபாகரன் மற்றும் ஒசாமா, இந்த இருவருமே இறக்கவில்லை மீண்டும் வருவார்கள் என்கிறார்கள் அவர்களின் தீவிர ஆதரவாளர்கள்.
ஒசாமா பின்லேடன், எந்தவொரு அதிகார,பதவி ஆசைகள் அற்று களத்தில் இருந்தவர். அதனால், அவரது இயக்கத்திற்குள் பிரிவுகளோ இல்லை பிளவுகளோ இல்லை. மாற்று கருத்துக்களும் இல்லை.அவர்களுக்கு உள்ளாகவே காட்டிக்கொள்ளும் அவலங்கள் உருவாகவில்லை.
ஆனால், பிரபாகரன்.....?? கருணா??
ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதும், அமெரிக்காவில் கொண்டாடட்டங்களும், அவரது மதம் சார்ந்த நாடுகளில் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடந்தன.
ஆனால், பிரபாகரன் கொல்லப்பட்டதும், கொண்டாட்டங்கள் மட்டுமே நடந்தன.
(அவரது 'இனம்' சார்ந்த பகுதிகளில்,சில அரசியல்வாதிகள் மட்டும் 'ஓட்டுக்காக' (அ) தனக்கென்று ஒரு 'கூட்டம்' சேர்க்க அறிக்கை கொடுத்தார்கள்).
இரண்டு இயக்கங்களுக்கும் ஆயுத விற்பனை செய்து இருக்கிறது...அமெரிக்கா.
இந்த இரண்டு இயக்கங்களையுமே, சுயநலத்தோடு அவற்றை உருவாக்கியவர்களே, அதே சுயநலத்தோடு அவற்றை அடியோடு அழித்து விட்டார்கள்.
ஒன்றை...அமெரிக்கா, மற்றொன்றை...இந்தியா.
வன்முறை என்னும் கத்தியை, எந்த நோக்கத்திற்காக எடுத்தாலும், அதை எடுத்தவனுக்கு அந்த கத்தியாலேயே முடிவு ஏற்ப்படும்.
காந்தியடிகளின் அகிம்சையே,நிலையான வெற்றி தரும் ஆயுதம்.
இது,ஒசாமா பின்லேடன் மற்றும் பிரபாகரன் இருவரின் முடிவுகளும் உணர்த்தும் உண்மை.
-இன்பா
Wednesday, May 4, 2011
பிரபாகரன், பின்லேடன் மரணங்கள் - ஒரு ஒப்பீடு
Posted by கடை(த்)தெரு at 10:25 PM
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
அப்படின்னா, காந்தி அகிம்சையத்தானே செய்தார்,ஆனா சுட்டுட்டாங்களே!அப்ப அந்த அகிம்சைக்குள்ள ஆக்ரோசம் இருந்துச்சா?
dont compare...
தயவு செய்து ஒப்பிடாதீர்கள்...
காந்தி அகிம்சையை கையில எடுத்தபோது வெற்றி பெற்றார.. ஏன்?? வௌ்ளைக்காரனிடம் ஒரு மூலையிலாவது மனிதாபிமானம் இருந்தது..
2ம் உலகப்போருக்குப்பின் நாடுகளை வைத்திருப்பது முடியாத காரியமாய் போனது..
ஆனால் இப்போது அகிம்சை அடக்குமுறை கொண்டு அடக்கப்படுகிறது... தோளில் தட்டி கூப்பிட்டால் அவர்கள் கேட்க தயாராயில்லை... தலையில் அடித்தால்தான் கேட்போம் என்ற மனநிலை வந்துவிட்டது...
Your statements are wrong. At the death of VP thousands of diaspora tamils mourned. It is ridiculous that u r saying it as a celebration.
இதை ஒரு முட்டாள் எழுதினான் என்றால் இதற்கு 19ஓட்டு போட்ட மற்ற முட்டாள்கள் எங்கே. முட்டாள்தனமான மதக்கொள்கையால் ஒருவர் செய்த ஆட்டுழியத்தையும், விடுதலைக்காகப் போரிட்டவரையும் ஒப்பிட்ட உன்னை எல்லாம் கட்டி வைத்து கல்லால் அடிக்க வேண்டும்.
Post a Comment