Thursday, November 26, 2009

ரேனிகுண்டா - சினிமா பார்வை


சுமார் பத்து வருடங்களுக்கு முன்னால், சிதம்பரத்தில் ஒரு அரசியல் பிரமுகரை கொலை செய்த வழக்கில், நான்கு பேரை கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது, நான் அவர்களை பார்க்க நேரிட்டது. அவர்கள் ஜீன்ஸ், டீ சார்ட் அணிந்து இருந்தார்கள். அனைவர்க்கும் வயது 20 க்குள்.

அன்று கிடைத்த அதே அதிர்ச்சி, இன்று "ரேனிகுண்டா" படத்தின் ட்ரைலர் பார்த்தபோது கிடைத்தது.

மீசை கூட முளைக்காத ஒருவன் "உன் சங்கை அருப்பேன்" என்கிறான். இன்னொருவன் ஒரு போலீஸ்க்கராரை "உன் குடும்பத்தை தூக்குவேன்" என்று மிரட்டுகிறான்.

நான்கு கல்லூரி மாணவர்கள் சேர்ந்தால் எப்படி காதல்,கலாட்டா என்று செய்யவேண்டுமோ, அது போல நான்கு படிக்காத பசங்க சேர்ந்தால் வன்முறை என்ற தமிழ் சினிமாவின் இலக்கணத்தின்படி, உருவாகி இருக்கிறது ரேனிகுண்டா.

படத்தின் அறிமுக இயக்குநர் பன்னீர்செல்வம் , லிங்குசாமியின் உதவியாளர்.

நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி மற்றும் ஃபிலிம் பேப்‌ரிகேட்டர்ஸ் தயாரிப்பில், தயா‌ரிப்பாளர் சக்ரவர்த்தியின் மகன் ஜானி கதாநாயகனாக நடிக்க , "பீமா"வில் நடித்த சனுஜா கதாநாயகியாக நடிக்கிறார். மற்ற முக்கிய கதா பாத்திரங்கள் அனைவரும் புதுமுகங்கள்.

மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவாவின் உதவியாளர் சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். படததோகுப்பு அந்தோனி. சண்டைக்காட்சிகளை அமைத்து இருக்கிறார் ராஜசேகர்.

படத்துக்கு இசை கணேஷ் ராகவேந்திரா . இவர் சிவாஜி நடித்த "அந்த நாள் " போன்ற படங்களுக்கு இசை அமைத்த வீணை எஸ் பாலசந்தர் அவர்களின் கொள்ளு பேரன் "மழை பெய்யும்" என்ற பாடலை ஹரிஷ் ராகவெந்திரா பாடி உள்ளார். "விழிகளில்" என்ற பாடலை பாம்‌பே ஜெயஸ்ரீ பாட, "தல்லா குளம்" என்ற அதிரடி பாடலை பாடி இருக்கிறார் சிம்பு. பிறைசூடன், நா.முத்துக்குமார், யுகபாரதி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

"இளம் குற்றவாளிகளின் கதையாக ரேனிகுண்டா உருவாகிறது" என்றார் இயக்குனர் பன்னீர்செல்வம்.

"பத்திரிகைகளில் வரும் சில கொலை குற்ற செய்திகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறேன். அந்த கொலைகளை செய்தவர்கள் மைனர்கள் என்ற போது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. இரண்டாயிரம், மூவாயிரம் ரூபாய்க்காக அவர்கள் இந்த கொலைகளை செய்ய யார் காரணம்? எந்த மாதிரியான சூழல் இக்கொலைக்குற்றத்துக்கு அவர்களை தூண்டுகிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை" என்றார் இயக்குனர் பன்னீர்செல்வம்.

மதுரை சிறுவர் சிறையில் இருந்து தப்பிக்கும் குற்றவாளிகள் மும்பை செல்லும் வழியில் "ரேனிகுண்டா" வில் இறங்கிவிட, அங்கு நடக்கும் சம்பவங்கள்தான் படம்.

படத்தின் இசை வெளியிட்டு விழாவில், இயக்குநர் லிங்குசாமி பேசுகையில் "இப்போது கூட பன்னீர்செல்வம் என்னை விட்டுத் தனியா போனதை என்னால் உணர முடியவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் பல நேரம் என்னையறியாமல் பன்னீர்... இது எப்படி பாருங்க என்ற பேசிவிடுகிறேன். பிறகுதான் ஆஹா, பன்னீர்தான் நம்மிடம் இல்லையே என்று உணர்கிறேன்.அவர் பல பிரமாதமான சீன்களை சொல்லியிருக்கிறார். அவற்றை எடுக்கும்போது அவரை கேமிராவுக்கு பக்கத்திலேயே நிற்க சொல்லிடுவேன். அவரு திருப்தியா இருக்குன்னு சொன்ன பிறகுதான் வேற சீன் எடுப்பேன்" என்றார்.

இயக்குநர் அமீர். பேசுகையில் "என்னுடைய அசிஸ்டென்ட் சசிக்குமார் எனக்கு எப்படி சவாலா இருக்கானோ, அதே மாதிரி லிங்குசாமியோட அசிஸ்டென்ட் லிங்குசாமிக்கு சவாலா இருப்பான் போலிருக்கு" என்றார்.

"சிட்டி ஆஃப் காட் படம் மாதிரி இருக்கு" என்று ரேனிகுண்டா படத்திற்குப் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார் அமீர்.

ஒரு புதுமுகம் நடித்த படத்திற்கு ஆறு கோடி பிசினஸ் என்கிறது ஒரு செய்தி . ரேனிகுண்டா(ஸ்) - இன்னொரு சுப்ரமணியபுரம் என எதிர்பார்க்கலாம்



பதிவு : இன்பா

3 comments:

தர்ஷன் said...

City of god தான் ஏற்கனவே புதுப்பேட்டை ஆயிருச்சே

shabi said...

மெக்காவோ////...உங்கள் bolg ஆரம்பத்தில் இவ் வரி தேவையற்ற ஒன்று

Loganathan - Web developer said...

இளம் இயக்குனர்கள் வளரவும் , அடுத்த தலைமுறைக்கு சொல்லவும் சீனியர் இயக்குனர்கள் வழி செய்ய வேண்டும். மற்றபடி வன்முறை வன்முறைதான்...

 
Follow @kadaitheru