Friday, November 13, 2009

தலாய்லாமாவின் பயணம் ஏன்?




"சீனா ஆக்கிரமித்துள்ளதாகச் சொல்லப்படும் பகுதி மனிதர்கள் வாழத் தகுந்த பூமி அல்ல என்றும், மண்ணும், கற்களும் நிறைந்த அப்பகுதியில் புல் பூண்டு கூட முளைக்காது என்றும், இதற்காக நாம் சீனாவுடன் சச்சரவுகள் எதுவும் செய்து கொள்ள வேண்டியதில்லை" என்று சீனா ஆக்கிரமிப்பு பற்றிய ஒரு கேள்விக்கு அன்றைய பிரதமர் நேரு அவர்கள் பதில் அளித்ததாக நாடாளுமன்ற குறிப்பில் பதிவாகி இருக்கிறது.

அந்த அலட்சியமே இன்றுவரை தொடரும் இந்தியா - சீனா உறவு சிக்கல்களுக்கு ஒரு முக்கிய காரணம். 1962 ஆம் வருடம் நடந்த யுத்தத்தில் இந்தியா தோற்று, தனக்குச் சொந்தமான 40 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பை இழந்தது. மேலும், இந்தியாவுக்குச் சொந்தமான 90 ஆயிரம் சதுர கி.மீ. நிலப்பரப்பை இன்றுவரை சீனா உரிமை கொண்டாடி வருகிறது.

சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து நேரு கருத்துக் கூறும்போது, "சீனா என்னை ஏமாற்றி விட்டது, என் முதுகில் குத்திவிட்டது' என்று விரக்தியை வெளிப்படுத்தினார். ஆனால்,எல்லாம் கண் கெட்ட பின் செய்யும் சூரிய நமஸ்க்காரம் என்று ஆகிவிட்டது.

சீன அரசாங்கம், திபெத், சீனாவின் ஒரு அங்கம் என குறிப்பிட்டு வருகிறது. ஆனால் திபெத் 1950களிற்கு முன்னர், தனி நாடாகவே இருந்ததாக திபெத்திய வரலாறு கூறுகிறது. பின்னர் 1950களில் திபெத், சீனா வசமானது. அன்றிலிருந்து இன்று வரை திபெத், சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

1950 ஆம் வருடம், திபெத் நாட்டை விட்டு வெளியேறிய தலாய் லாமா ஒரு அறிக்கையில் இவ்வாறுதெரிவித்தார்.

"புத்த மதம், மத நல்லிணக்கத்தையும், மனித நல்லிணக்கத்தையும் தான் வலியுறுத்துகிறது. இவை இந்திய பண்பாடு, அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகியவை, உலகிற்கு இந்தியா அளித்த பாடம்.திபெத்தில் ஜனநாயகம் மலர வேண்டும். திபெத் முன்னேறி, நவீன நகரமாக மாற வேண்டும். நாங்கள் விடுதலை கேட்கவில்லை. தன்னாட்சி தான் தேவை.

திபெத்தில் எப்போது தன்னாட்சி ஏற்படுகிறதோ, அப்போதே என் பதவி, இயக்கத்தை திருப்பித்தர தயாராக இருக்கிறேன்.திபெத் தன்னாட்சி போராட்டத்தில் அதிக பொறுப்பு, திபெத்தில் உள்ள மக்களுக்கே உள்ளது. அவர்கள் உள்ளே இருந்து பாடுபட வேண்டும். ராணுவத்தின் மூலம் திபெத் போராட்டத்தை அடக்க சீனா முயற்சிக்கிறது. ராணுவ பலத்தின் மூலம் இப்பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது.சீன அரசு உண்மை நிலையை உணர்ந்து, திபெத்திற்கு தன்னாட்சி வழங்க வேண்டும். இளைய தலைமுறையினரிடமும், சீன அறிஞர்களிடமும் திபெத் போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருவதால், திபெத்திற்கு விரைவில் தன்னாட்சி கிடைக்கும்".

அருணாசலப் பிரதேசம் குறித்து சீனா சர்ச்சையைக் கிளப்பிவரும் நிலையில் அவரது இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. 6 ஆண்டுகளுக்குப் பின்னர் அருணாசலப் பிரதேசத்தின் தவாங்குக்கு வந்த தலாய் லாமா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு.

1962 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நடந்த போரில் தவாங்கை சீனா கைப்பற்றியது.போர் நடந்து கொண்டிருக்கும்போதே தன்னிச்சையாக போர் நிறுத்தத்தை அறிவித்து அங்கிருந்து தனது துருப்புகளையும் சீனா வாபஸ் பெற்றது. இந்நிலையில் இந்தியாவின் தவாங்கை தனது பகுதி என்று சீனா உரிமை கொண்டாடுவது வியப்பளிக்கிறது. அருணாசலப் பிரதேசம் மீது சீனா எப்போதுமே ஒரே நிலைப்பாட்டைக் கொண்டதில்லை. அவ்வப்போது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறது. ஆனால் இந்த விவகாரத்தில் எனது நிலைப்பாடு என்ன என்பதை நீங்கள் (செய்தியாளர்கள்) அறிவீர்கள்.

தவாங்குக்கான எனது வருகையில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை. நான் எங்கு சென்றாலும் மனித நேயமாண் யும், சர்வதேச சகோதரத்துவத்தை மட்டுமே வலியுறுத்துகிறேன். இதை வலியுறுத்தவே தற்போது தவாங்குக்கும் வந்துள்ளேன். தவாங்கில் இன்று நான் இருப்பதை உணர்வு பூர்வமாக நினைக்கிறேன். 50 ஆண்டுகளுக்கு முன்பு திபெத்தை சீனா ஆக்கிரமித்தபோது நான் தவாங் வழியாக இந்தியாவில் தஞ்சமடைந்தது இன்றும் என்னுள் மலரும் நினைவுகளாய் மலர்கிறது" என்றார்.

பன்னாட்டு உறவுகளுக்கான சீன ஆய்வகத்தில் தெற்காசிய விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்துவரும் ஆய்வாளர் ஹூ சிஷேங் என்பவர் குளோபல் டைம்ஸ் என்ற நாளிதழிற்கு அளித்துள்ள பேட்டியில், "இந்திய அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே தற்போது நிலவிவரும் சிக்கலான சூழலில் தலாய் லாமா அருணாச்சல பிரதேசத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தால் இத்தனை ஆண்டுகளாக தனக்கு அடைக்கலம் தந்துள்ள நாட்டை தலாய் லாமா மகிழ்விக்கலாம். தலாய் லாமாவின் பயணமும் அவருடைய நடவடிக்கைகளும் சீனத்திற்கு எதிரான உணர்வை அப்பகுதி மக்களிடையே ஏற்படுத்தலாம்? என்று கூறியுள்ளார்.

"சீனத்தைத் தொடர்ந்து கோபமூட்டியதால் 1962இல் ஏற்பட்ட இராணுவ மோதலில் கற்றப் பாடத்தை இந்தியா மறந்திருக்கலாம், இந்தியா இப்போதும் அதே தவறான பாதையில்தான் சென்றுக் கொண்டிருக்கிறது" என்று பீபிள்ஸ் டெய்லி இணையத் தளம் கூறியுள்ளது.

பாகிஸ்தானில் கவுடார், வங்கதேசத்தில் சிட்டகாங், மியான்மரில் சிட்வி, இலங்கையில் ஹம்மன்தோட்டா ஆகிய இடங்களில் புதிய துறைமுகங்களை சீனா ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துறைமுகங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும், சீனா உருவாக்கி இருக்கும் "ஆபரேஷன் முத்துமாலை'த் திட்டம்", எப்போது வேண்டுமானாலும், இந்தியாவுக்கு எதிரான ராணுவத் துறைமுகங்களாக மாற்றப்படும் என்கிறது ஒரு செய்தி.

மும்பை ஹோட்டல்கள் தாக்கப்பட்டபோது, அங்கு நமது ராணுவம் வருவதற்கு தாமதமான போது, சொல்லப்பட்ட காரணம் விமானங்கள் தயார் நிலையில் இல்லை என்பதே.

ஒரு பக்கம் பாகிஸ்தான் மற்றும் அதன் ஆதரவு தீவிரவாதிகள், இன்னொரு பக்கம் நக்ஸல் விவகாரம் என்று ஏற்கனவே தடுமாறும் நமது ராணுவம் , பெரும் ராணுவ சக்தியான பெரும் ராணுவ சக்தியான சீனாவை எப்படி எதிர்கொள்ளும்??

இன்று வரையில் சீனா ஆக்கிரமித்துள்ள பகுதிகளை நம்மால் மீட்க முடியவில்லை. சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள இந்துக்களின் மிகப் புனித யாத்திரை தலமாகவும், சிவபெருமானின் உறைவிடமாகவும் கருதப்படும் கைலாச மலை மற்றும் புனித மானசரோவர் ஏரி ஆகியவற்றை காண சீனா அரசின் அனுமதி வாங்கவேண்டிய சூழ்நிலையில் நமது அரசு இருக்கிறது.

அருணாசலப் பிரதேசம் தொடர்பாக ஏற்கனவே இந்திய - சீன உறவில் விரிசல் இருப்பது தெரிந்தே அங்கு தலாய்லாமா பயணம், அதுவும் ஆறு வருடங்களுக்கு பின்னர் என்ன அவசியம் இப்போது என்று புரியவில்லை?
ஒரு மத, அரசியல் தலைவர் என்ற முறையில் அவருக்கு இது தெரியாமல் போனது ஏன்?

இந்திய , சீன வல்லரசுகளின் மோதலில், திபெத்தை மீட்டுவிடலாம் என்று கருதும் தலாய்லாமா, ஆசியாவின் அமைதிக்காக, இந்திய-சீன நாடுகளின் போர் பதட்டத்தை தவிர்க்க, தாமாகவே முன்வந்து இந்தியாவை விட்டு வெளியேறி, ஐ.நா சபையை அணுகவேண்டும். இதுவே மூன்று நாடுகளுக்கும் நல்லது.

கடைக்காரர் கமெண்ட்:
ஸ்ரீலங்காவுல தனி ஈழம் உருவாவறத்தை தடுத்த நம்ம மத்திய அரசு, சீனாவுல தனி திபெத் வர்றதை மட்டும் ஆதரிக்கறது ஏங்க?










பதிவு : இன்பா

1 comments:

R.Gopi said...

//"சீனா ஆக்கிரமித்துள்ளதாகச் சொல்லப்படும் பகுதி மனிதர்கள் வாழத் தகுந்த பூமி அல்ல என்றும், மண்ணும், கற்களும் நிறைந்த அப்பகுதியில் புல் பூண்டு கூட முளைக்காது என்றும், இதற்காக நாம் சீனாவுடன் சச்சரவுகள் எதுவும் செய்து கொள்ள வேண்டியதில்லை" என்று சீனா ஆக்கிரமிப்பு பற்றிய ஒரு கேள்விக்கு அன்றைய பிரதமர் நேரு அவர்கள் பதில் அளித்ததாக நாடாளுமன்ற குறிப்பில் பதிவாகி இருக்கிறது.//

அன்னிக்கே "ப‌ர‌ட்டை" ப‌த்த‌ வ‌ச்சுட்டாரா??

//சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து நேரு கருத்துக் கூறும்போது, "சீனா என்னை ஏமாற்றி விட்டது, என் முதுகில் குத்திவிட்டது' என்று விரக்தியை வெளிப்படுத்தினார். ஆனால்,எல்லாம் கண் கெட்ட பின் செய்யும் சூரிய நமஸ்க்காரம் என்று ஆகிவிட்டது. //

அப்போ, முன்ன‌ ஏண்டா இப்ப‌டி சொன்னேன்னு யாரும் கேக்க‌லியா??

//மும்பை ஹோட்டல்கள் தாக்கப்பட்டபோது, அங்கு நமது ராணுவம் வருவதற்கு தாமதமான போது, சொல்லப்பட்ட காரணம் விமானங்கள் தயார் நிலையில் இல்லை என்பதே. //

த‌ண்ணி இல்லே, த‌ண்ணி இல்லேன்னு சொல்லுவாங்க‌... ம‌ழை வந்தா, அதை சேமிக்க‌ ஒரு வ‌ழியும், புண்ணாக்கும் ப‌ண்ண‌ மாட்டாங்க‌.... என்ன‌வோ போங்க‌... பேசி பேசி வாய் வ‌லிக்குது... நென‌ச்சு பார்த்தா த‌லை சுத்தி, த‌லையும் வ‌லிக்குது...

//இன்று வரையில் சீனா ஆக்கிரமித்துள்ள பகுதிகளை நம்மால் மீட்க முடியவில்லை. சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள இந்துக்களின் மிகப் புனித யாத்திரை தலமாகவும், சிவபெருமானின் உறைவிடமாகவும் கருதப்படும் கைலாச மலை மற்றும் புனித மானசரோவர் ஏரி ஆகியவற்றை காண சீனா அரசின் அனுமதி வாங்கவேண்டிய சூழ்நிலையில் நமது அரசு இருக்கிறது. //

ஆமாம்... ந‌ம் பிர‌த‌ம‌ர் மூச்சு விட‌ கூட‌ "ஒபாமா" கிட்ட‌ பெர்மிஷ‌ன் வாங்கும்போது!!??

வ‌ழ‌க்க‌ம் போல‌, க‌டைக்கார‌ர் க‌ல‌க்க‌றார்....

 
Follow @kadaitheru