"தினமும் தயிர்சாதம் கட்டிக்கொண்டு, ஒரே வேலையை செய்யும் செக்குமாட்டுதனமான வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு ஒரே இடத்தில் இருப்பது பிடிக்காது. எப்போதும் மேகங்களை போல நகர்ந்து கொண்டே இருக்கவேண்டும்" - இப்படி தான் ஒரு எழுத்தாளராய் உருவானது குறித்து சொல்லிஇருந்தார் திரு.பாலகுமாரன் அவர்கள்.
அவரை போன்று ஒரு துறையில் மட்டுமல்லாது, பல துறைகளில் தனது தேடல்களால் முத்திரை பதித்துகொண்டு இருக்கிறார் நடிகர் அஜித்.
சினிமாவில் இத்தனை தூரம் வளர்ந்தும் முடிவுறாமல் வளர்கிறது அவரது 'அசல்' தேடல்கள்....
பைக் மெக்கானிக்: சென்னை அசன் மெமோரியல் பள்ளியில் படிக்கும்போதே, பைக்குகள் என்றால் தீராத காதல். பள்ளி வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு 'பகுதி நேர' பைக் மெக்கானிக் ஆக பணிபுரிந்தார் அஜித்.
பைக் ரேஸ்:1990 இல 110 சி.சி மோட்டார் பைக் பிரிவுக்கான "இந்தியன் நேஷனல் சாம்பியன் ஷிப்" போட்டியில் கலந்து கொண்டார் அஜித். அப்போது அவரது வயது 19.
கார்மெண்ட்ஸ் தொழில்: அதன் பின்னர், ஈரோட்டில் துணிகள் ஏற்றுமதி செய்தார் அஜித். இதற்க்காக தனியாக ஒரு ஏஜென்சி ஒன்றை நடத்திவந்தார்.
மாடலிங்: ஏற்றுமதி தொழிலில் இருந்த அஜித், தனது நண்பர்களின் ஆலோசனைபடி கூடுதல் வருமானத்திற்கு, மாடலிங் செய்ய தொடங்கினார்.
சினிமா: இத்தனையும் அவர் செய்தது அவரது 21 வயதுக்குள். மாடலிங் அவரது சினிமா பிரவேசத்திற்கு அடிக்கல் ஆனது. பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு படம்தான் அவரது முதல் சினிமா. இரண்டாவது படம்தான் தமிழில் வந்த அமராவதி. ஆசை, காதல் கோட்டை போன்ற பெரும் வெற்றி படங்கள் மூலமாக ஒரு காதல் நாயகனாக உருவான அஜித், வாலி மூலமாக தான் ஒரு மிக சிறந்த நடிகர் என்று நிரூபித்தார். 'தீனா' - அஜித்தை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத, ஒரு முன்னனி நடிகர் ஆக்கியது.
ஏற்ற,இறக்கங்கள் நிறைந்தது அஜித்தின் சினிமா பயணம். இடையே ஒரு
விபத்தில் பாதிக்கபட்டது காரணமாக அவரால் சினிமாவில் முழு கவனம் செலுத்த முடியாததும் ஒரு காரணம். அதன் பின்னர், ரஜினி அவர்களின் ஆசியோடு 'பில்லா'வில் மீண்டும் எழுச்சி பெற்ற அஜித்துக்கு அதன் பின் வந்த 'ஏகன்' ஒரு சிறு சறுக்கல்.

தனது 50 வது படத்தை நெருங்கும் அஜித் தற்சமயம் நடித்து வரும் 49 வது படமான 'அசல்' பற்றி பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கார் ரேஸ்: 2003 இல ஆசிய அளவிலான 'பி.எம்.டபிள்யு சாம்பியன்ஷிப்' என்ற கார் பந்தயத்தில் கலந்து கொண்டு, நான்காம் இடத்தை பிடித்தார் அஜித். 
2004 இல 'பிரிட்டிஷ் பார்முலா - 3 ' ரேசில் கலந்துகொண்டு, இரண்டு சுற்றுகளில் மூன்றாம் இடத்திற்கு வந்தார். இந்த ரேசில் முதல் இடம் வந்த நெல்சன் பிக்வெட், இன்றைய பார்முலா பந்தயங்களில் முதல் இடத்தில் இருக்கிறார்.
ஏரோநாட்டிக்ஸ் : நமது இந்திய சினிமா நடிகர்களில் விமானம் ஓட்டதெரிந்த ஒரு சில நடிகர்களில் அஜித்தும் ஒருவர்.
தற்சமயம் 'ரேடியோ கன்ட்ரோல் பைலட்ஸ் அசோசியஷன்' என்ற நிறுவனத்தை தொடங்கி, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்ட முறையில்
ஒரு 'ஹெலிகாப்டரை' உருவாக்கி கொண்டு இருக்கிறார்.
ஜேப்பியார் கல்லூரி மாணவர்களுக்கு ஏரோநாட்டிக்ஸ் சம்பந்தமாக செயல்விளக்கம் அளித்து இருக்கிறார் அஜித்.
சமையல் கலை: அஜித்துக்கு சகல சமையலும் அத்துப்படி. 'பில்லா' படபிடிப்பு மலேசியாவில் நடந்தபோது, யூனிட்க்காரர்களுக்கு ஒரு நாள் இவரே சமைத்து, பரிமாறியும் இருக்கிறார்.
ஆன்மிகம்: "இதுவே என் கடைசி பிறவியாக இருக்கவேண்டும்" என்று தத்துவார்த்தமாக கூறும் அஜித் தீவிர சாய்பாபா பக்தர். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நடைபயணம் செல்லும் வழக்கம் உடையவர். புனே போன்ற வட மாநிலங்களில் இருக்கும் ஆஷ்ரமங்களுக்கு செல்லும் வழக்கமும் உடையவர். அதேசமயம், திருவனந்தபுரத்தில் இருக்கும் ஒரு தர்காவுக்கும் செல்கிறார் அஜித்.
"பணக்கார,ஏழை விளையாட்டுன்னு தரம் பிரிக்காதிங்க. எந்த விளையாட்டுக்கும் பணம் மூலதனமா இருக்கமுடியாது. கடின உழைப்பு மட்டும்தான் இருக்கமுடியும். அது என்கிட்ட இருக்குன்னு பெருமையா சொல்லிக்கிறேன்" என்று பேசும் அஜித், தன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணமாய் சுட்டிகாட்ட வேண்டியவர்தானே?
"எல்லாரும் ஒரு வாழ்க்கை இருக்கு. அதில் முட்டி முன்னேறி வெற்றிபெறனும்.சாதிக்கணும். இதுதான் என் ஒவ்வொரு நாள் கனவா இருந்தது. இருந்துகிட்டு இருக்கு" என்று கூறும் அஜித் நிஜமாகவே ஒரு அல்டிமேட் ஸ்டார்தான்.

கடைக்காரர் கமெண்ட்:
'தல' மற்ற விஷயங்களை தெரிஞ்சு கிட்டு இருக்கறதுபோல சினிமாவுல நல்ல கதைகளையும் செலக்ட்டு பண்ண தெரிஞ்சுகிட்டார்னா
இன்னும் ரொம்ப நல்லா இருக்கும்ங்க.
பதிவு : இன்பா
2 comments:
கடைக்காரர் கமென்ட் சும்மா "நச்" னு இருக்கு.
தலைவரும் தலையும்.......
பதிவு சூப்பர் இன்பா...
கலக்குங்க......
Post a Comment