Monday, November 23, 2009

பண்பாடு இல்லாத பாரதம்?


அன்று

கி.பி 1835 ஆம் வருடம்.

இந்தியா முழுவதும் சுற்றுபயணம் மேற்கொண்டார் தாமஸ் பாபிங்ட்டான் மெக்காலெ பிரபு. இவர்தான் 1834 ஆம் வருடம் பிரிட்டிஷ் அரசு அமைத்த "பிரிட்டிஷ் கவுன்சில் ஆஃப் இந்தியா " அமைப்பின் முக்கிய உறுப்பினர். மிக சிறந்த எழுத்தாளர், கவிஞர் மற்றும் வரலாற்று ஆய்வாளர்.

அவரது பயணம் குறித்து கிடைத்த ஒரு வரலாற்று சான்று இங்கே.

"இந்தியர்கள் மேற்கத்திய கலாசாரமும், ஆங்கிலமும் முக்கியம் என்று நினைத்தால், அவர்களது உன்னதமான சொந்த கலாசாரத்தை இழந்து விடுவார்கள்" என்றார்.மெக்காலெ பிரபு.

அன்றைய இந்தியாவில் திருடர்கள் இல்லை. பிச்சை எடுப்போர் இல்லை. எங்கு பார்த்தாலும் மக்களிடையே உயர்ந்த கலாசாரமும், பிற நாட்டவர்கள் வியக்கும் பண்பாடும் இருந்தன என்று நம்மால் இந்த கடிதம் மூலம் உணர முடிகிறது.

இன்று.

கி.பி 2009 ஆம் வருடம்.
சமீபத்தில் நான் படித்த இரண்டு செய்திகள் அல்லது பத்திரிகைகளில் வந்த உண்மை சம்பவங்கள்.

சம்பவம் 1 : இடம் : தலைநகர் டெல்லி.

டெல்லி புறநகர் பகுதியில் உள்ள பாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சினேகா (12) (பெயர் மாற்றம்) இவளது தந்தை தனியார் நிறுவனத்தில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார். தாய் மகிபல்பூரில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார்.அதே பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் 2 பேர் அவளுக்கு அடிக்கடி ஐஸ்கிரீம், சாக்லேட் வாங்கி கொடுத்தனர். அபபோது அவளது தயார், சினேகா மீதுள்ள பாசத்தில் 2 பேரும் ஐஸ்கிரீம் வாங்கி தருகிறார்கள் என்று நினைத்துக் கொண்டார்.

இந்நிலையில் 2 புரோக்கர்களும் சினேகாவை காரில் டெல்லி விமான நிலைய பகுதிக்கு அழைத்துச் செல்வதாக கூறி ஏற்றிச் சென்றனர்.12 வயதே ஆன இந்த சிறுமியை,ஓடும் காரில் வைத்து கதற கதற பாலியல் பலாத்காரம் செய்தனர் அந்த இரண்டு பேரும்.

சம்பவம் 2 :

இடம் : இந்தியாவின் கலாச்சார(?) தலைநகர்.

சென்னை. பெசன்ட் நகர் கடற்கரை. இரவு 9 மணியில் இருந்து 10 மணி வரை, ஒரு பொது இடத்தில், மக்கள் முன்பாக 16 வயதான இளம் பெண் ஒருவர் கட்டிப்பிடித்து, முத்தம் தந்து, காதல் விளையாட்டு நடத்துகிறார். ஒன்று,இரண்டு இல்லை இந்த ஒரு மணிநேரத்தில் 5 வாலிபர்களோடு.
ஐந்து ஆண் நண்பர்களை பொது இடத்தில் மாற்றுகிறாள் ஒரு நவீன கண்ணகி.

கல்வி வளர,வளர நாகரிகமும், பண்புகளும் சேர்ந்து அல்லவா வளரவேண்டும்?

இன்றைய இந்தியாவில் அநாகரிகமும், தனி மனித ஒழுக்க குறைபாடுகளும் வளர்ந்து விட்டதற்கக்கு என்ன காரணங்கள்?

சிந்தனைக்கு இடம் இல்லாத நம்து கல்வி முறையில் குற்றமா?

மீடியா மீது குற்றம் சொல்லலாமா? நடிகையின் கவர்ச்சி படம் வராத 'பெரிய' பத்திரிக்கைகள் இன்று உண்டா? ஆபாசமும்,வன்முறையும் நிறைந்த திரைப்படங்கள், தணிக்கை இல்லாததால் நம் வீட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மனத்தை சீரழிக்கும் டிவி சேனல்கள்.. இன்னும் மீடியாக்களின் பொறுப்பிலாதனத்தை சொல்லி கொண்டே போகலாம்தானே?

தனி மனிதனின் குற்றங்களுக்கு, அவனை பெற்ற தாய் அல்லது தந்தையின் பொறுப்புஇன்மை மற்றும் அக்கறைஇன்மை ஆகியவை காரணமாக இருக்கலாம் அல்லவா?

"குழந்தைகள் ஒரு செடி மாதரி" என்பார் திரு.பாலகுமாரன். குழந்தைகளை ஒழுக்கமும், பொறுப்பும் உள்ள நல்ல மனிதர்களாக நம் சமூகத்திர்க்கு தரவேண்டிய பெரும் பொறுப்பு பெற்றோர்களுக்கே உள்ளது என்று நான் கருதுகிறேன்.

எந்தக் குழந்தையும் நல்ல
குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே - அவர்
நல்லவராவதும் தீயவராவதும்
பெற்றோர் வளர்ப்பதிலே...

கடைக்காரர் கமெண்ட்:
நல்ல மனுஷங்க சேர்ந்ததுதான் நல்ல சமூகம்.
நல்ல மனுசங்களை உருவாக்குற கடமை மத்தவங்களை விட பெத்தவங்களுக்குத்தான் இந்த காலத்துல அதிகமா இருக்குங்க.


பதிவு : இன்பா

5 comments:

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//தனி மனிதனின் குற்றங்களுக்கு, அவனை பெற்ற தாய் அல்லது தந்தையின் பொறுப்புஇன்மை மற்றும் அக்கறைஇன்மை ஆகியவை காரணமாக இருக்கலாம் அல்லவா?

"குழந்தைகள் ஒரு செடி மாதரி" என்பார் திரு.பாலகுமாரன். குழந்தைகளை ஒழுக்கமும், பொறுப்பும் உள்ள நல்ல மனிதர்களாக நம் சமூகத்திர்க்கு தரவேண்டிய பெரும் பொறுப்பு பெற்றோர்களுக்கே உள்ளது என்று நான் கருதுகிறேன்.

எந்தக் குழந்தையும் நல்ல
குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே - அவர்
நல்லவராவதும் தீயவராவதும்
பெற்றோர் வளர்ப்பதிலே...
//

வழிமொழிகிறேன்.

Suresh Ram said...

ஒரு ஆணாதிக்க , பெண் இரக்க, வயது முதிர்ந்த.பொறைமை படும் ஆணின் புலம்பலாக தான் உங்கள் வெளிப்பாடு பார்க்கபடுகிறது . நீங்கள் தற்கால சிறுவர்களின் மன நிலையை அறியவில்லை . மேலும் அறிய விரும்பினால்
http://tamil498a.blogspot.com/
www.498a.org
www.aimwa.in

ந.லோகநாதன் said...

கடுமையான சட்டங்கள் தேவை. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை தரப்பட வேண்டும்

ரோஸ்விக் said...

அருமை நண்பா...

இதைப் பற்றி தான் எனது கீழ் காணும் இடுகையில் ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளேன்...:-)

http://thisaikaati.blogspot.com/2009/11/thandanaigal-1.html

R.Gopi said...

//அன்றைய இந்தியாவில் திருடர்கள் இல்லை. பிச்சை எடுப்போர் இல்லை. எங்கு பார்த்தாலும் மக்களிடையே உயர்ந்த கலாசாரமும், பிற நாட்டவர்கள் வியக்கும் பண்பாடும் இருந்தன.//

இன்று மு.க.வும் அவர் குடும்பத்தாரும் இருக்கின்றனர்...

//ஒரு பொது இடத்தில், மக்கள் முன்பாக 16 வயதான இளம் பெண் ஒருவர் கட்டிப்பிடித்து, முத்தம் தந்து, காதல் விளையாட்டு நடத்துகிறார். ஒன்று,இரண்டு இல்லை இந்த ஒரு மணிநேரத்தில் 5 வாலிபர்களோடு.
ஐந்து ஆண் நண்பர்களை பொது இடத்தில் மாற்றுகிறாள் ஒரு நவீன கண்ணகி.//

நாடு வெளங்கிடும்டா மக்கா......

//நல்ல மனுஷங்க சேர்ந்ததுதான் நல்ல சமூகம்.
நல்ல மனுசங்களை உருவாக்குற கடமை மத்தவங்களை விட பெத்தவங்களுக்குத்தான் இந்த காலத்துல அதிகமா இருக்குங்க.//

எல்லா பெத்தவங்களும் கேட்டுக்கோங்க.... இல்லேன்னா “தலீவர்” கோச்சுக்க போறாரு......

 
Follow @kadaitheru