Saturday, April 23, 2011

Sex and Zen 2 - சுடச்சுட "சூடான" திரைவிமர்சனம்Sex and Zen 2 - இது "அவதார்" படத்தின் வசூல் சாதனைகளை முறியடித்து, தற்சமயம் உலகையே கலக்கி கொண்டிருக்கும் செக்ஸ் காமெடி திரைப்படம். சீனா மொழியில் உருவாகி இருக்கும் படம். இந்த படத்தின் விமர்சனம் இங்கே...

'ஐயோ..ஆபாசம்,விரசம்' என்னும் கருத்து உள்ள வாடிக்கையாளர்கள் இப்பதிவை படிக்க வேண்டாமே ....ப்ளீஸ்.

'யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' என்னும் சமுக சிந்தனையே(!) இப்பதிவின் நோக்கம்.

உலகின் முதல் 3D செக்ஸ் படம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க இப்படத்திற்கு, வலையுலகில் முதல் முறையாக திரைவிமர்சனத்தை நாங்கள் எழுதியிருப்பது...பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒரு சாதனை.

Sex and Zen என்பது இரண்டு பகுதிகளை கொண்ட திரைப்படம். தற்போது உலக நாடுகளில் வசூலை குவித்து கொண்டு இருக்கும் படம் இரண்டாம் பாகமாகும்.

Sex and Zen என்பது சீன அரசால் தடை செய்யப்பட்ட ஒரு புத்தகத்தின் பெயர். நம்மூர் காம சாஸ்திரம் போன்று காம கலைகளை பேசும் புத்தகம். ஆனால், காமசாஸ்திரம் போன்று இது கலவியின் கல்வி பற்றி பேசும் புத்தகம் அல்ல.

இந்த வார்த்தையின் அர்த்தம் "You get happy when raping other's wife, what if yours get rapped". அதாவது பிறன் மனை நோக்கா குறளுக்கு நேர் எதிர்மறையானது என்பதாகும்.


Sex and Zen 1 : இப்படத்தின் முதல் பாகம். இதன் கதாநாயகன் Mo Yang San மிக சிறிய ஆணுறுப்பை கொண்டவன். தனது இளம் மனைவியை திருப்தி செய்ய இயலாதவனாக இருப்பவன்.

ஒரு அறுவை சிகிச்சை மருத்துவனிடம் சென்று தீர்வு கேட்கிறான். அவனோ, நம் கதாநாயகனின் உறுப்பை நீக்கி விட்டு, அந்த இடத்தில ஒரு குதிரையின் உறுப்பை பொருத்துகிறான். இதை தொடர்ந்து, உற்சாகம் அடையும் Mo Yang San பல பெண்களுடன், குறிப்பாக பிறர் மனைவிகளை மயக்கி காம களியாட்டத்தில் ஈடுபடுகிறான். கடைசியில், நம் ரத்தகண்ணீர் எம்.ஆர்.ராதா போன்று உடல் தளர்வுற்று வரும் வேளையில், ஒரு விபச்சார விடுதியில் தனது மனைவியை காண்கிறான்.

அவளோ இவனை அடையாளம் கொண்டு, அந்த அதிர்ச்சியில் விபச்சார விடுதியில் தூக்கு போட்டுகொண்டு தற்கொலை செய்துகொள்கிறாள்.

இதனால், மனதளவிலும் கடும் வேதனை அடையும் Mo Yang San " எல்லாம் மாயா" என்று உணர்ந்து "பத்ரகிரியார்" போன்று ஒரு புத்த மடாலயத்தில் சென்று சேர்வதாக கதை முடிவடைகிறது.

இப்போது, Sex and Zen படத்தின் இரண்டாம் பாகமான Sex and Zen 2 : Extreme Estassy படம் பற்றி பார்ப்போம்.ஜாக்கிசான் மற்றும் ஜெட்லி படங்களை தயாரித்து உள்ள, நமது கிராமபுறங்களிலும் கூட அறிமுகம் ஆகி இருக்கும் Goldan Harvest நிறுவனம்தான் இந்த படத்தையும் தயாரித்து உள்ளது.

Loletta lee, shu qi,Ben ng போன்ற ஹாங்காங் நட்சத்திரங்கள் காண்பித்து இருக்கும்...ச்சே...நடித்து இருக்கும் இந்த படத்தை இயக்கி இருப்பவர்..Chin Man Kei.

(வாயில் நுழையாத பெயர்கள்...அட, அதுவாங்க முக்கியம்!?)

சின்முன் என்ற நகரத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் மாஸ்டர் சைமுன், முதல் பகுதியின் நாயகனான Mo Yang San ஐ தனது ரோல் மாடலாக(?) வைத்து இருக்கிறான். அவனைபோலவே, தனது ஆண்மையும் மிக பலமாக இருக்கவேண்டும் என்பதையே குறிக்கோளாக (என்ன ஒரு லட்சியம்) வைத்து பயிற்சிகள் செய்பவன். இவனுக்கு Lung என்று ஒரு மனமுதிர்ச்சி இல்லாத மகன் மற்றும் Yiau என்று ஒரு அழகான மகள்.

ஊரில் உள்ள பெண்களையெல்லாம் கபளீகரம் செய்யும் சைமுன், மற்ற ஆண்களுக்கு பயந்து தனது மகளை ஒரு ஆண்வேடம் இட்டு வளர்க்கிறான். பிற ஆண்களுடன் அவளை படிக்க அனுப்பும் சைமுன், எந்திரங்களால் ஆன ஒரு ஸ்பெஷல் உள்ளாடையை தயாரித்து அதை தனது மகளை அணிய சொல்கிறான். மேலும், அந்த 'உள்ளாடை எந்திரந்தின்' சாவியை தனது கைவசம் வைத்து கொள்கிறான்.அங்கு அவளுக்கு fatau என்ற சக மாணவனுடன் பழக்கம் ஏற்ப்பட்டு, பின் fatauவுக்கு வந்திருப்பது ஒரு பெண் என்று தெரிகிறது.

இதற்க்கு இடையில், ஊரில் பல இளம் பெண்கள் கற்பழித்து கொல்லபடுகிறார்கள். இதற்க்கு காரணம் Miraj என்ற ஒரு பெண். "secrests of verginity " என்ற ரகசிய புத்தகத்தை படித்துவிட்டு, அதன் படி, பெண்களுடன் உடலுறவு கொண்டு, அவர்களின் ஆற்றலை தனதாக்கி கொண்டு வருகிறாள் இந்த Miraj.

நினைத்த உருவை எடுக்கும் சக்தி பெரும் இவள், மாஸ்டர் சைமுனின் 'ஒன்றுக்கும் உதவாத' மகனை திருமணம் செய்து, பின்னர் சைமுனை மயக்குகிறார். சாமியின் "சிந்து சமவெளி"காட்சிகள் அநாகரீகமாக அரங்கேறுகின்றன.

Mirajக்கு கிடைத்த அதே ரகசிய புத்தகமான "secrets of verginity" நம் கதாநாயகி இயு சைமுன் கையில் கிடைக்கிறது. அதன்பின் fatau மற்றும் அந்த ஊரின் காவல் அதிகாரியான Ironman ஆகியோருடன் இணைந்து Mirajஐ எப்படி வீழ்த்துகிறாள் என்பதே படத்தின் மீதி "கதை (அ) சதை".

கூடவே, தனது தந்தை அணிவித்த "கற்பு கவசங்களை" எப்படி, எவ்வாறு உடைக்கிறாள் என்பது மற்றொரு கிளைக்கதை.
இப்படம் சீன அரச வம்சமான zen வம்சத்தை இழிவு படுத்துவதாக கூறி, சீன அரசு தடை செய்துவிட்டது.

zen வம்சம்தான், சிதறிக்கிடந்த சீன சாம்ராஜ்யத்தை ஒன்று திரட்டிய வம்சம். உலக அதிசயமாம் சீன பெருஞ்சுவரை கட்டிய வம்சம். இப்படம் அத்தைகைய zen வம்சத்தில் நடந்ததாக உலவி வரும் ஒரு நாட்டுபுற கதையை தழுவியது.

நமது கி.ரா என்னும் கி.ராஜநாராயணன் எழுதிய நாட்டுபுற கதைகளில் கூட, இதை போன்று செக்ஸ் சமாச்சாரங்கள் நிறைய இருக்கின்றன

"தட்ஸ்தமிழ்" புண்ணியத்தில்(!) நம்ம பசங்க மத்தியிலும், இந்தியாவிலும் எக்கச்சக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது இப்படம். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் பெரும் எதிர்ப்பர்ப்புகளோடு வெளிவர விருக்கிறது sex and zen 2.

ஆனால், படத்தில் "சொல்லிகொள்கிற" காட்சிகள் நீங்கள் நினைப்பது போல இல்லை. "ஷகீலா டைப்" காலைகாட்சி மலையாள படங்களை போன்று ஒரு "பி" கிரேட் செக்ஸ் திரைப்படம்தான் இது.

ஒரே வித்தியாசம், இப்படத்தில் சப்பைமூக்கு சீனத்து பைங்கிளிகளின் (நன்றி : கவிஞர் கண்ணதாசன்)நிர்வாண காட்சிகள் இருக்கின்றன, அவ்வளவே. சொல்லப்போனால், 'ஷக்கு'(சுருக்கம்)படங்களின் 'கிக்கு' இதில் துளி அளவும் இல்லை என்றே கூறலாம்.

எந்த சினிமா விமர்சனம் என்றாலும், ஒரு 'பன்ச்' வரி சொல்லி முடிப்பதுதானே வழக்கம். அதன்படி,

Sex and Zen - Sex and None(?).


(பி.கு : கடைக்காரர் இன்பா, நாட்டுல எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது, இப்படி ஒரு 'ஆபாச சரக்கு' தேவையா? என்பவர்களுக்கு, டைட்டானிக்கை மூழ்கடித்து வரும் படத்தின் இமாலய வசூல் சாதனையே பதில்)

3 comments:

நண்பன் said...

kalaththin kolam verenna?

R.Gopi said...

இன்பா....

ரொம்ப என்ஜாய் பண்ணி இருக்கீங்க போல இருக்கே (படத்தை!!?)

Anonymous said...

The real character of a man is found out by his amusements.

 
Follow @kadaitheru