
அய்யா,
 
இலவச அரிசி
இலவச டிவி 
இலவச பிரிட்ஜ் 
இலவச மிக்சி
இவையே பிரதானம் 
எங்களுக்கு...
 
"ராணா"வில் 
ரஜினியுடன் டுயட் 
ஆடும் கதாநாயகி யார்?
எந்திரன் 2 
வருமா? வராதா?
கமலின் அடுத்த படம்..
எந்த நடிகை 
இன்று நம்பர் ஒன்..
இவைகள்தான் 
எங்களுக்கு தெரிந்த 
ஆராய்ச்சி..
 
வடிவேலு 
விஜயகாந்தை பற்றி
இன்று என்ன பேசினார்??  
கிரிக்கெட்டில் 
யாருக்கு எத்தனை கோடி 
கிடைத்தது?
தேர்தலில் எந்த கட்சி
எவ்வளவு கொடுக்கும்?
ஐ.பி.எல்லில் யார் 
வெல்வார்கள்?
யுவராஜ் சிங்கின் 
தற்போதைய காதலி யார்?
இவைகள்தான் 
எங்களின் தேடல்கள்..
இலங்கையில் தமிழினம்
அழிந்தால் என்ன?
ஆயிரம்கோடி ஊழல் 
யார் செய்தால் என்ன?
எனக்கு வரவேண்டியது 
வருகிறதா என்று மட்டுமே 
பார்க்கும் இனம் எங்கள் இனம்...
யாரோ ஒருவன் 
கேட்பாரற்று சாலையில் 
அடிபட்டு கிடந்தாலும்,
'ஐயோ பாவம்' என்ற படி 
எங்கள் வழியில்
செல்வோம் நாங்கள்..
அய்யா,
எங்களுக்கெல்லாம் போய்...
எங்களின் 
நன்மைக்காக... 
சாகவும் துணிந்தீரே.
உங்களுக்கு 
ஆதரவு தெரிவிக்க கூட 
அருகதை இல்லாதவர்கள் நாங்கள்.
உங்கள் உடலும், நோக்கமும்
பூரண நலம் பெற..
குறைந்தபட்சம்
பிராத்தனை செய்கிறோம்.
இனி, 
இந்தியாவுக்கு 
இரண்டு சுதந்திர தினங்கள்.
ஒன்று
ஆகஸ்ட் 15. 
இன்னொன்றாக.. 
அன்னா ஹஸாரே முன்மொழியும் 
ஜன்லோக்பால் மசோதா 
நிறைவேறும் நாளாக இருக்கட்டும்.
-இன்பா
Friday, April 8, 2011
அய்யா ஹஸாரே அவர்களுக்கு,
Posted by கடை(த்)தெரு at 3:08 PM
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
//"ராணா"வில்
ரஜினியுடன் டுயட்
ஆடும் கதாநாயகி யார்?
எந்திரன் 2
வருமா? வராதா?
கமலின் அடுத்த படம்..
எந்த நடிகை
இன்று நம்பர் ஒன்..//
இதோட இதையும் சேர்த்துக்கோங்க இன்பா...
1) மங்காத்தா என்று வரும்?
2) அஜித் ஜோடி யார்?
3) யார் இசையமைப்பாளர்?
4) ஒளிப்பதிவு செய்தது யார்?
5) பில்லா-2 பத்தி இன்னும் 4-5 பதிவாவது எழுதணும்...
6) ஊருக்கு போனா அஜித்த பார்க்க முடியுமான்னு தெரியல...
Post a Comment