Friday, July 2, 2010

"சூன்" என்பது எந்த மொழிச்சொல்??

தமிழில் மட்டும் பெயர்பலகைகள் வைக்கவேண்டும் என்று அறிவித்து, சென்னை மற்றும் கோவை போன்ற நகரங்களில் நடவடிக்கை எடுத்துவருகிறார்கள்.


கலைஞரின் குடும்ப நிறுவன பெயர்களை முதலில் பாருங்கள். சன் டிவி, உதயநிதியின் திரைப்பட நிறுவனத்தின் பெயர் ரெட் ஜெயின்ட் மூவிஸ். அழகிரியின் மகன் துரை தயாநிதி நடத்தும் திரைப்பட நிறுவனத்தின் பெயர் கிளவுட் நைன் மூவிஸ்.
இவற்றையெல்லாம் யார் தமிழ்ப்படுத்துவது?.


இரண்டு அறிவிப்புகள் பற்றி சொல்கிறேன்.


தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் தமிழ் நாடு மட்டுமின்றிப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள் பலரின் கோரிக்கையை ஏற்று உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில் 2010 சூன் 23 முதல் 27 வரை நடைபெறும் என்று மாநாடு பற்றிய தனது முதல் அறிவிப்பை, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான அரசாணையை 23.10.2009 அன்று வெளியிட்டு இருந்தார்.

இதைபோலவே இன்னொரு அறிவிப்பு, ஆகத்து 17 இல் எழுச்சி தமிழர் திருமா அழைக்கிறார் என்று எதோ ஒரு விடுதலை சிறுத்தைகளின் மாநாட்டுக்கு ஒரு அழைப்பு விடுக்கபட்டு இருந்தது.

நடந்து முடிந்த உலக தமிழ் மாநாட்டில், அந்த மாநாடு தொடங்கும் முன்பாக வெளிவந்த அனைத்து அறிவிப்புகள்,விளம்பரங்கள், பேருந்து மற்றும் ரயிலில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் என அனைத்திலும் குறிப்பிட பட்டு இருந்த விஷயம்....சூன் 23 முதல் 27 வரை என மாநாட்டின் தேதி குறிப்பிடபட்டு இருந்தது.

JUNE என்ற ஆங்கில வார்த்தையை தமிழில் ஜூன் என்று எழுதுகிறார்கள். ஆனால், சூன் என்பது எந்த மொழிச்சொல்???

ஜூ என்ற வடமொழியை தவிர்த்து விட்டால் அது தூய தமிழ் ஆகிவிடுமா???

மு.க.ஸ்டாலின் என்ற மட்டும் ஏன் எழுதுகிறார்கள். ஸ்டாலின் என்ற பெயரில் வரும் 'ஸ்' என்பதற்கு எந்த தமிழ்ச்சொல்லை பயன்படுத்துவது?

ஜூன் மாதத்தினை ஏன் "ஆனி" என்று தமிழில் அழைக்கவில்லை??

மாநாட்டின் எந்தவொரு அறிவிப்பிலும்,அழைப்பிலும் "ஆனி" தமிழில் என்று குறிப்பிடபடவில்லை. சூன் என்றுதான் இருக்கிறது.ஆகத்து,சூன் என்பதல்லாம் எந்த மொழிச்சொற்கள்? தமிழ் மாநாடு நடத்தியவர்களே முறையாக தமிழை கடைபிடிக்கவில்லை.

"அரசியல்வாதிகளால் தமிழ் வளரவில்லை. தமிழால்தான் அரசியல்வாதிகள் வளர்ந்து இருக்கிறார்கள்.வளர்கிறார்கள்" என்று திரு.தமிழருவி மணியன் சொல்வது எவ்வளவு உண்மை.

-இன்பா

1 comments:

வழிப்போக்கன் said...

இது கிடக்கட்டும். இந்தக் கூத்தைக் கேளுங்கள்.
மக்கட்தொகைக் கணக்கெடுப்புக்காக அலுவலர் ஒருவர் எங்கள் இல்லத்துக்கு வந்திருந்தார். பெயர்களை ஒவ்வொருவராகச் சொல்ல எழுதிக்கொண்டார். “ராஜு” என்று பெயர் சொன்னதும், “ஜு” எப்படி எழுதுவது சார்? என்று கேட்டதும் தூக்கிவாரிப்போட்டது எங்களுக்கு.
அப்புறம் தெரிந்தது. ஜ,ஸ,ஷ,ஹ ஆகிய க்ரந்த எழுத்துக்கள் அறவே மறைக்கப்பட்டுவிட்டது என்பது. அறியாதவர்கள்தான் இந்த எழுத்துக்களை சமஸ்க்ருத எழுத்துக்கள் என்று நினைக்கின்றனர். தமிழை வளர்ப்பதாக நினைக்கும் மொழிவெறுப்பாளர்களின் தொண்டு இது.

 
Follow @kadaitheru