Sunday, June 12, 2011

மங்காத்தா vs வேலாயுதம்


திரை அரங்கே தெரியாத அளவுக்கு கட்டவுட்டுகள், பேனர்கள், முதல்நாள் காட்சிகள் அனைத்தையும் நிரப்பும் அளவுக்கு ரசிகர் மன்றங்கள் என்று சகலவிதத்திலும் சரிசமமானவர்கள் ...இன்றைக்கு விஜய் மற்றும் அஜித்.

எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி-கமல் வரிசைக்கு பின் நிற்கிறார்கள் அஜித்-விஜய் ஜோடி. இவர்களுக்கு பின் சூர்யா,சிம்பு,தனுஷ், ஆர்யா, ஜெயம் ரவி,விஷால்,கார்த்தி என மிகத்திறமையான இளைஞர் பட்டாளம் இருக்கிறது என்றாலும், விஜய்-அஜித் நடிக்கும் படங்களுக்கு கிடைக்கும் "ஓபனிங்" மற்றவர்களுக்கு இல்லை. இந்த ஜோடியை சூர்யா,சிம்பு போன்றோர்கள் "மாஸ்" விஷயத்தில் கொஞ்சம் நெருங்குகிறார்கள்.அவ்வளவே.

தொடர்ந்து தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரனால் ஆறு படங்களில் நடிக்கவைக்கபட்டு, குறிப்பாக விஜயகாந்துடன் செந்தூரபாண்டி போன்ற படங்கள் மூலம் கைதூக்கி விடப்பட்டார் விஜய். ஆனால், அவர்க்கு முதல் வெற்றி, அவரது தந்தையின் படங்களால் வரவில்லை. விக்ரமனின் பூவே உனக்காக மற்றும் பாசிலின் காதலுக்கு மரியாதை போன்றவையே விஜய்க்கு அடித்தளம். ப்ரியமுடன் படத்தில் நெகடிவ் ரோல் செய்ததோடு சரி. அதன் பின்னர் தனகென்று ஒரு பார்முலாவை வைத்துகொண்டு அதன் படியே இன்று வரை பயணிக்கிறார் விஜய்.

விஜய் உடன் 'ராஜாவின் பார்வையிலே' படத்தில் சிறிய வேடத்தில் நடித்த அஜித்குமார், அவருக்கு இணையாக, அவருக்கு போட்டியாக வளருவார் என்று யாரும் எதிபார்த்திருக்க மாட்டார்கள்.

ஒரே சமயத்தில் வெளியாகி, நல்ல வரவேற்ப்பை பெற்ற விஜய்யின் "பிரெண்ட்ஸ்" படத்தை ஓரங்கட்டி, விஜய்க்கு நிகரான "மாஸ் ஹீரோவாக" உருவெடுத்தார் அஜித்..."தீனா" படத்தின் மூலம்.

அதன் பிறகு, அஜித் - விஜய் படங்கள் தொடர்ந்து தீபாவளி,பொங்கல் போன்ற பண்டிகைகளில் பரமசிவன் - ஆதி, ஆழ்வார் - போக்கிரி என்று வெளியாகி களை கட்டின. "நீ என்ன பெரிய தலையா" என்று விஜய்யும், "முதுகுக்கு பின்னால பேசாதே" என்று அஜித்தும் தங்கள் படங்களின் 'பன்ச்' வசனங்களால் மோத, ரசிகர்களும் அவர்களின் படங்களின் ரீலிஸ் அன்று மோதிக்கொண்டார்கள்.

வாலி,சிட்டிசன்,வில்லன்,வரலாறு என்று பல பணிகளில் படம் செய்த அஜித், "பில்லா" வெற்றிக்கு பிறகு தென் இந்தியாவின் "ஸ்டைலிஷ்" ஹீரோ என்று உருவாகி, தற்சமயம் அதே பாணியில் படங்கள் செய்துவருகிறார்.

அஜித், விஜய் இவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்தது... அவர்களுக்கு வெற்றி-தோல்வி தந்த பக்குவம்.

தங்களது கருத்துக்களை வெளிப்படையாக சொல்வதிலும் சளைத்தவர்கள் இல்லை..விஜய்,அஜித் இருவரும்.

ஒரு விழாவில்,"பாராட்டு விழாவுக்கு வரச்சொல்லி மிரட்டுறாங்க" என்று அன்றைய முதல்வர் கருணாநிதி முன்னாலே அஜித் துணிச்சலாக அறிவிக்க, விஜய்யோ அவருக்கு ஒரு படிமேலே சென்று "ஆளும் கட்சியினர் எனது ரசிகர்களை தாக்குகிறார்கள்" என்று வெளிப்படையாக அறிவித்து, எதிர்கட்சியான அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தலில் செயல்பட்டார்.

ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு, அஜித் - விஜய் இருவரின் படங்களும் ஒரே மாதத்தில் வெளியாக போகின்றன.

மங்காத்தா vs வேலாயுதம் என்று களை கட்டப்போகிறது ஆகஸ்ட் மாதம். தியேட்டர்கள் கிடைக்கததால், இரண்டு வாரங்கள் இடைவேளையில் வெளிவரப்போகின்றன இந்த இரண்டு படங்களும்.

விஜய்யின் 50 படமான "சுறா" படுதோல்வி அடைந்து விட்டது. இந்நிலையில் மங்காத்தா -அஜித்தின் 50 வது படம்.வேலாயுதம் - விஜய்யிக்கு 52 வது படம்.

இயக்குனர்கள்:


ஜெயம்,உனக்கும் எனக்கும், எம்.குமரன்,சந்தோஷ் சுப்பிரமணியம் என்று வரிசையாக தெலுங்கு படங்களை தமிழ் எடுத்து தொடர் ஹிட் தந்த ஜெயம் ராஜா படத்தின் இயக்குனர். "ரீமேக் ராஜா" என்று அழைக்கப்படும் ராஜா முதல் முறையாக சொந்த கதையை, தனது சகோதரர் ஜெயம் ரவி இல்லாமால் வேறொரு ஹீரோவை, அதுவும் விஜய்யை வைத்து இயக்கும் படம் "வேலாயுதம்".

விஜய் ஆண்டனி இசை அமைத்து இருக்கிறார். குழந்தைகள் வரை சென்றடையும் விஜய்யின் அதிரடி ஆட்டத்தில் வழக்கமான குத்து பாடல்கள் களை கட்டும் என எதிர்பார்க்கலாம்.


சென்னை 28 , சரோஜா மற்றும் கோவா படங்களின் இயக்குனர் வெங்கட் பிரபுதான் அஜித்தின் மங்காத்தா இயக்குனர். மூன்றே படங்கள் மட்டுமே இயக்கி இருக்கிறார். ஒரே மாதரி ஜாலி கதைகள் செய்த வெங்கட், இதில் அஜித்,அர்ஜுன் என்று சீரியஸ் கதையை முதல் முறையாக செய்கிறார்.

இரண்டு இயக்குனர்களை ஒப்பிட்டால், ஜெயம் ராஜா அனுபவம் மிகுந்தவர். கமர்சியல் விஷயங்களில் தேர்ந்தவர் என்பது அவரது தொடர் வெற்றி படங்களின் மூலம் அறியலாம். அதே சமயம், அவரது வெற்றி படங்கள் எல்லாமே ரீமேக் படங்கள்.

வெங்கட் பிரபு, தனது முதல் படத்தில் ஜெயித்தாலும்,அடுத்த இரண்டு படங்களை பார்க்கும் போது, ஒரு அமெச்சூர் இயக்குனராகவே காட்சி தருகிறார்.

வேலாயுதம் பிளஸ் :

வழக்கம்போலவே விஜய்யின் டான்ஸ் மற்றும் ஆக்க்ஷன்,ஜெனிலியா, சந்தானம் காமெடி இத்துடன் ஜெயம் ராஜாவின் கமர்ஷியல் விறுவிறு திரைக்கதை திறமை.

வேலாயுதம் மைனஸ் :
கிராமத்தில் இருக்கும் விஜய் பெரும் மக்கள் சக்தியாக வருவதான பழைய கதை.முகமூடி அணிந்த விஜய்யின் கெட்டப்பை பார்க்கும்போது அந்நியன்,கந்தசாமி படங்களின் நினைவுக்கு வருவது, அதே பாணியிலான படம் என்று காட்டுகிறது.

மங்காத்தா பிளஸ்:

அஜித்தின் 50 படம் என்கிற எதிர்பார்ப்பு, தமிழின் நம்பர் ஒன் நாயகியான த்ரிஷா, ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் மற்றொரு பிளஸ்.

இதுவரை வந்த வெங்கட் பிரபு - யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் எல்லாமே ஹிட் என்பதாலும், படத்தில் ஏற்க்கனெவே வெளியாகி கலக்கிக்கொண்டு இருக்கும் விளையாடு மங்காத்தா பாடல் மேலும் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது.அடுத்த மாதம் பிரமாண்டமாய் நடைபெறப்போகிறது மற்ற பாடல்களின் இசை வெளியிடு.

ஹாலிவுட் பாணியில் இருக்கும் வெங்கட் பிரபுவின் திரைக்கதை பாணி மற்றும் கிரிக்கெட் மேட்ச் பிக்சிங் பற்றிய ஒரு புதிய கதை போன்றவை இப்படத்தின் பிளஸ்.கூடவே, இன்று ஒரு புதிய டிரெண்டை அமைத்து இருக்கும் அஜித்தின் நரைமுடி கெட்டப் மற்றும் அவர் ஏற்று இருக்கும் நெகடிவ் ரோல்.

மங்காத்தா மைனஸ்:
பில்லா படத்திற்கு பிறகு அதே பாணியில் நடை,உடை பாவனைகள் இதிலும் தெரிகின்றன. மேலும், பிரேம்ஜியின் காமெடி மற்றும் வெங்கட் பிரபுவின் ஜாலி ஸ்டைல் அஜித்துக்கு பொருந்துமா என்று தெரியவில்லை. படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள்.

வெங்கட் பிரபு மீது ஒரு சிறந்த இயக்குனர் என்ற நம்பிக்கை இதுவரை வரவில்லை.

சேனல்கள் ஆதரவு யாருக்கு?

வேட்டைக்காரன்,சுறா மற்றும் காவலன் படங்களின் கசப்பால், விஜய் திமுகவுக்கே எதிராக மாறிவிட்டார். "வேலாயுதம்" படத்தின் அனைத்து உரிமைகளையும் ஆளும் கட்சியின் சேனலான "ஜெயா டிவி" கைப்பற்றி இருக்கிறது.

அதிமுக அபிமானிகள் ஒட்டுமொத்தமாக விஜய்யை கொண்டாடபோவது உறுதி. (அதிமுக கொடி திரை அரங்குகளில் பறக்கும் என எதிர்பார்க்கலாம்).

மங்காத்தா படத்தின் தயாரிப்பாளர் துரை தயாநிதி, அழகிரியின் மகன் என்பதால், இப்படம் கலைஞர் டிவியின் கையில் இருக்கிறது. சன் டிவியின் ஆதரவும் இந்த படத்திற்கு மட்டுமே என்று சொல்லவேண்டியது இல்லை. சன் டிவி, தனுஷ் நடிக்கும் வேங்கை படத்தை வெளியிட உள்ளதால், அதன் மார்க்கெட்டிங் விவகாரத்தில்தான் இவர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள்.

பில்லா படத்தையும் கலைஞர் டிவி வாங்கினாலும், படம் வெற்றி பெற்றது. ஆனால், தற்சமயம் திமுக ஆட்சியில் இல்லை என்பது எந்த அளவுக்கு மங்காத்தாவை பாதிக்கும் என்று பார்க்கவேண்டும்.

மங்காத்தா vs வேலாயுதம் :

கோவா,தில்லாலங்கடி என வெங்கட் பிரபு,ஜெயம் ராஜா இருவரின் முந்தைய படங்களுமே தோல்வி என்பதால், தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் இருவருமே.

யாருக்கு வெற்றி என்பது,அஜித்,விஜய் என்ற முன்னணி நடிகர்களை விட, இந்த இயக்குனர்களின் திறமையை நம்பியே இருக்கிறது.

எது எப்படியோ, தல - தளபதி மோதலால்,சினிமா ரசிகர்கள் அனைவரும் வரும் ஆகஸ்ட் மாதம் ஒரு திருவிழா காண தயாராகி விட்டார்கள்.

-இன்பா

9 comments:

thiyaa said...

good post

கேரளாக்காரன் said...

How you are saying venkatprabhu is immature. Raja is better but venkatprabhu the best. Thala gonna rock

கேரளாக்காரன் said...

How you are saying venkatprabhu is immature. Raja is better but venkatprabhu the best. Thala gonna rock

N.H. Narasimma Prasad said...

சூப்பர் அலசல் நண்பா.

கவி அழகன் said...

நேர்மையான அலசல் நீங்கள் ஒரு சிறந்த பண்புள்ள எழுத்தாளன்

Mathuran said...

வணக்கம் நண்பா
நான் அண்மையில் இது போன்றதொரு பதிவை எழுதியிருந்தேன். ஆனால் நீங்கள் எனக்கு முன்பதாகவே இந்த விடயத்தை எழுதிவிட்டீர்கள். உண்மையில் நான் உங்களுடையதை காப்பி செய்யவில்லை. இதுவரை அப்படி யாருடையதையும் நான் காப்பி செய்ததுமில்லை. தவறு ஏற்பட்டுவிட்டது. அதற்காக உங்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்.தாங்கள் அதை விரும்பாத பட்சத்தில் அந்த பதிவை நீக்கிவிடவும் தயாராகவிருக்கிறேன். நான் எழுதியவை வேறுபட்டிருந்தாலும் சில விடயங்கள் தங்கள் பதிவுடன் ஒத்துப்போய்விட்டன. அதற்காக நண்பர் ஒருவர் அனோனியாக வந்து பின்னூட்டத்தில் கோபப்பட்டிருந்தார். என்னுடைய அடுத்த பதிவில் நிச்சயமாக இந்த விடயம் பற்றி குறிப்பிடுகின்றேன்

கடை(த்)தெரு said...

அன்புள்ள திரு. மதுரவன்,

நீங்கள் மன்னிப்பு கோரும் அளவுக்கு,விளக்கம் கூறும் அளவுக்கு
இது பெரிய விடயமல்ல.

தங்களின் அன்புக்கும்,பண்புக்கும் எனது நன்றிகள்.

அன்புடன்,
இன்பா
கடைத்தெருவில் இருந்து.

*¤தமிழன்¤* said...

நேர்மையான அலசல்

Anonymous said...

venkatesh vel said
awesome post

 
Follow @kadaitheru