Friday, June 17, 2011

இசைப்ரியா - சிதைக்கப்பட்ட தமிழ் தேவதைபதிவை படிக்கும் முன்பு, சில நிமிடங்களை ஒதுக்கி, இந்த காணொளியை பாருங்கள்."இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்" என்று சமிபத்தில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார் முதல்வர் ஜெயலலிதா.

போர் தாக்குதல் நடக்காத இடங்கள் என்று முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளை அன்று இலங்கை ராணுவம் அறிவித்தது. அதை நம்பி, அங்கு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் சென்று சேர்ந்தனர்.

ஆனால், அங்கு உள்ள மருத்துவமனைகளை கூட விட்டுவைக்காமல், இலங்கை ராணுவம் என்ற மிருக கூட்டம் அங்கு கடும் குண்டுவீச்சில் இறங்கியது. திட்டமிட்டு நடந்த, இப்படுகொலையில் ஒரு இனமே சத்தமில்லாமல் அழிக்கப்பட்டது.

இலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறல்களை சேனல் 4 செய்தி நிறுவனம் ஆதாரபூர்வமான வீடியோ ஆதாரங்களுடன் சமிபத்தில் வெளியிட,அதை பார்த்த உலக மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

புலிகள் இயக்கம், அப்பாவி மக்களை தங்களை பாதுகாக்கும் கேடயமாக பயன்படுத்தியது உண்மை என்கிற செய்தியும் நம்மை சுடுகிறது.

பெண்களை நிர்வாணமாக்கி, கைகளை பின்னால் கட்டி கற்பழித்து, லாரி லாரியாக இலங்கை வீரர்கள் ஏற்றும் ஒரு வீடியோ காட்சி நம்மை பதறவைக்கிறது.

கூடவே, ஆபாசமான வார்த்தைகள் பேசி சிரித்துக்கொண்டே, இளம் பெண்களின் நிர்வாண சடலங்களை அவர்கள் வண்டியில் எறியும் காட்சி.....

ராணுவம் மற்றும் காவல்துறையினரின் கற்பழிப்பு கொடுமைகள் நமக்கு புதியது இல்லை.

காஷ்மீரில், தீவிரவாதிகள் தேடல் என்ற பெயரில் அங்கு உள்ள பெண்களிடம் நமது இந்திய ராணுவம் தகாத முறையில் நடந்து கொண்டதாக,காஷ்மீர் மாநில பெண்கள் அவ்வப்போது போராட்டங்களில் இறங்குவது இன்றும் வாடிக்கை.

இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப்படையும், தமிழ் பெண்களை கற்பழித்தது என்கிறார் மட்டகளப்பை சேர்ந்த என் நண்பர் ஒருவர்.

அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு ஆதிவாசி பெண்ணை, இந்திய ராணுவ வீரர்கள் கற்பழித்துவிட, ராணுவ தலைமை அலுவலகம் முன்பு 'நிர்வாண போராட்டத்தில்' ஈடுபட்டார்கள் ஆதிவாசி பெண்கள்.

இவ்வளவு ஏன்?

வீரப்பனை தேடுகிறோம் என்று சென்ற நம் தமிழக காவல் படைகள், வாசாத்தி இன பழங்குடி இன பெண்களை சூறையாடியது நம் நினைவுக்கு வருகிறது.

இன்றும் அந்த வழக்கு நடந்து கொண்டே...இருக்கிறது.

இந்த பழங்குடி இன பெண்களை கற்பழித்த தமிழக காவலர்களை சட்டம் தூக்கில் போட்டதா?

அன்று ஆட்சியில் இருந்தவர்களை போர்குற்றவாளியாக அறிவித்தா?

அதைப்போலவே, இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே அவர்களை 'போர்க்குற்றவாளி' என்று அறிவித்து, சர்வதேச சமுகத்தின் முன் அவரை நிறுத்துவது என்பதெல்லாம். சாத்தியமே இல்லாத விஷயம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

இராக் பெண்களை, ஆப்கானிஸ்தான் நாட்டு பெண்களை பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்திய அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளிடம் இதற்க்கு எப்படி தீர்வு கேட்க முடியும்??

மனிதர்கள், மிருக இனத்தைவிட மிகவும் கொடூரமானவர்கள் என்பது மட்டும் இந்த சேனல் 4 வெளியிட்டு இருக்கும் இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்கள் வீடியோ ஆதாரத்தின் மூலம் உறுதிபடுத்தபட்டுள்ளது.

அப்போது,அந்த வீடியோவில் வெளியான ஒரு செய்தி....இசைப்ரியாவின் கோர மரணம்.

ஷோபா - ஒரு அழகான,எதையாவது சாதிக்கவேண்டும் என்கிற பெண். இலங்கையில் உள்ள யாழ்ப்பணத்தில் 1982 ஆம் வருடம் பிறந்தவர். பின், அவரது குடும்பம் வன்னிக்கு குடிபெயர்ந்தது.

அங்கேயே தனது படிப்பை முடித்த அவர், இலங்கையின் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் செய்தி நிறுவனமான tamilnet என்ற நிறுவனத்தில் நிருபராகவும், செய்தி அறிவிப்பலாளாராகவும் பணியில் சேர்ந்தார்.அழகிய பெயரில், இசைப்ரியா என்று தன்னை அழைத்துகொண்டார்.

பதிவின் தொடக்கத்தில் இருக்கும் வீடியோவில் இருப்பவர்தான்...இசைப்ரியா.

2007 - ஆம் வருடம், புலிகள் இயக்கத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் முடித்து, ஒரு குழந்தைக்கு தாயாகவும் ஆனார்.

அப்போதுதான், அவர் வாழ்வில் முதல் புயல் தாக்கியது. பிறந்து ஆறே மாதங்கள் ஆன அவர் குழந்தை குண்டு வீச்சில் பலியானது.

ஆனாலும், மனம் தளராத இசைப்ரியா, செய்தி வாசிப்பாளாராக, ஈழ தமிழ் மக்களின் மனசாட்சியாக ஒலித்தார்.

சேனல் 4 வீடியோவின் உச்ச கட்ட கொடுரம் இதுதான்...

கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில், நிர்வாணமாக கற்பழிக்கபட்டு, பிணமாக கிடந்தார் இசைப்ரியா.இன்னமும் நம் காதுகளில் ஒலிக்கிறதே...இசைப்ரியாவின் அழகு யாழ்ப்பாண தமிழ். இனி, அந்த நாம் தமிழை கேட்க முடியுமா??

நம்மை, நம் மனதை மிகவும் பாதிக்கும் ஒரு விஷயத்தை, ஒரு துயரத்தை யாரிடமாவது பகிர்ந்துவிட்டால், மனம் அமைதி அடையும் என்கிறது மனோதத்துவம்.

இந்த பதிவின் மூலம் என்னுடைய துயரத்தை உங்களிடம் பகிர்ந்துவிட்டேன். ஆனால்,என் மனம் இன்னமும் கனத்துவிட்டதே,ஏன்?இன்னமும் நமக்கும், வெளிஉலகுக்கும் தெரியாமல், இப்படி இலங்கை ராணுவ மிருகங்களால் சிதைந்துபோன இசைப்ரியாக்கள் எத்தனை..எத்தனையோ???


-இன்பா

9 comments:

Anonymous said...

shoot Rajapakshe and tamil politicians.

Anonymous said...

isai piriyavin maarpai [breast] hide panni intha photovai neenka podu irukanum. thats better

Kalai said...

தெரு நாய் கூட பண்ண துணியாத செயலை செய்த இலங்கை ராணுவம் .... ஏண்டா பரதேசிகளே.... பொம்பளைங்க கிட்ட தான் உங்க வீரமா .... பண்ணாடைகளா .... புலிகள் கிட்ட காட்ட வேண்டியதுதான .... அதுவும் மற்ற நாடுகளில் இருந்து பிச்சை எடுத்த ஆயுதத்தை வைத்துக் கொண்டு..... சீ .... தூ....

Jeeva said...

pls blur the sensitive area.. true tamilan would do that...

sasikumar said...

please remove or blur that photo. please please . do it immediately.

advance thanks

sasikumar said...

please remove or blur her photo.

Anonymous said...

இனவெறிக் கொலைவெறியனும் அவனது கொலைவெறி இராணுவமும் செய்த கொலை கற்பழிப்பு மனித குலத்திற்கே ஒரு அவமானம். இவனையும் இவனது சகாக்களையும் நீதியின் முன் நிறுத்தி குறைந்தபட்ச தண்டனையாக வாழ்நாள் முழுவதும் கொடும் சிறையில் வாட தண்டனை வழங்கப்பட வேண்டும். அன்று தான் தமிழர் மனம் சிறிதாவது ஆறுதலடையும்.

Anonymous said...

இனவெறிக் கொலைவெறியனும் அவனது கொலைவெறி இராணுவமும் செய்த கொலை கற்பழிப்பு மனித குலத்திற்கே ஒரு அவமானம். இவனையும் இவனது சகாக்களையும் நீதியின் முன் நிறுத்தி குறைந்தபட்ச தண்டனையாக வாழ்நாள் முழுவதும் கொடும் சிறையில் வாட தண்டனை வழங்கப்பட வேண்டும். அன்று தான் தமிழர் மனம் சிறிதாவது ஆறுதலடையும்.

உங்கள் செல்வநாயகம் said...

nanpa nichayam itharkku oru mudivu undu.. soon....

 
Follow @kadaitheru