Saturday, June 4, 2011

கருணாநிதி,ஹாசாரே,ராம்தேவ் - உண்ணாவிரதங்கள்

என்னையும், நமது மீடியாவையும் கவர்ந்த அல்லது பாதித்த மூன்று உண்ணாவிரத போராட்டங்கள் பற்றி எழுதுகிறேன்.


இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது,அப்போது ஒரு நாள் மட்டும் அடையாளவிரதம் இருந்தார் கருணாநிதி.

அந்த சமயத்தில், அவர் தமிழக முதலமைச்சர்.நாற்பது எம்.பி.க்களை உடைய மத்திய அரசில்,காங்கிரசுக்கு அடுத்த பெரிய கட்சி அபோது திமுக.சுமார் பத்து மத்திய அமைச்சர்கள் இருந்தார்கள் கருணாநிதிவசம்.

இரண்டு பக்கமும் இரண்டு மனைவியர், பேரன்கள்,பேத்திகள், நான்கு ஏசி எந்திரங்கள் சூழ,ஈழத்தமிழர்களின் படுகொலைகளுக்காக உண்ணாவிரதம் இருந்தார் கருணாநிதி.

அவரது உண்ணாவிரதம் எப்படியோ ஒரு "ஆரஞ்சு ஜூஸ்" அல்லது ஒரு "நீர் மோர்" மூலம் அன்று முடிவுக்கு வந்துவிட்டது.

ஆனால், இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன...இலங்கையில் இனப்படுகொலைகள்.


அன்னா ஹசாரே அவர்கள் ஊழலை எதிர்த்து ஒரு உண்ணாவிரதம் இருந்தார். அவரது நோக்கம் நிறைவேறியதா? இல்லையா? ஒன்றும் புரியவில்லை.

ஊழலுக்கு நிரந்திர தீர்வு என்று கூறி ஜன்லோக் பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டுமாய் ஒரு போராட்டத்தில் திரு.அன்னா ஹசாரே இறங்க, அவருக்கு பின்னால் இந்தியாவே திரண்டது. பின்னர் மத்திய அரசு வரும் குளிர்கால கூட்டத்தொடரில் இம்மசோதாவை நிறைவேற்றுவதாக வாக்களித்ததாக கூறி, தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்தார் ஹசாரே.

இம்மசோதாவின் படி, ஹாசாரே அவர்களால் தேர்வு செய்யப்பட்ட அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் கொண்ட ஒரு வரைவு குழு அமைக்கப்பட்டது.

இந்த ஒரு அம்சத்தை சுட்டிக்காட்டி, இந்த மசோதாவை நிறைவேற்ற அனுமதிக்ககூடாது என்று நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த வரைவு திட்டத்தில் ஹசாரேவுக்கு அடுத்தபடியாக முக்கிய பொறுப்பில் இருக்கும் முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷன் மற்றும் இதே குழுவில் இடம் பெற்று இருக்கும் அவரது வாரிசு(??) பிரசாந்த் பூஷன் ஆகியோர் சம்பந்தப்பட்ட சிடி ஒன்று அந்த சமயத்தில்
வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

"எனது மகன் பிரசாந்த் பூஷண் நினைத்தால் ரூ.4 கோடி வரை கொடுத்து நீதிபதிகளை விலைக்கு வாங்கிவிடுவார் " என்று சாந்தி பூஷன் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் அவர்களுடன் உரையாடி இருப்பது தெரியவந்தது.

இந்த சிடியை ஆராய்ந்த சில தடயவியல் நிபுணர்கள், இது உண்மையான சிடி தான் என்று கூறியுள்ளனர்.

லோக்பால் வரைவு மசோதா கமிட்டிக்கு சாந்திபூஷனை பொறுப்பில் அமர்த்த வேண்டும் என அன்னா ஹசாரே அவர்களால் முன்மொழியப்பட்ட சாந்திபூஷனுக்கே, ஹசாரேவால் உத்திரவாதம் தரமுடியாத போது, அந்த வரைவு கமிட்டியில் உள்ள மற்றவர்களுக்கும், ஊழல் ஒழிப்பிற்கும் அவரால் எப்படி உத்திரவாதம் தர முடியும்??

"என்னை பொறுத்தவரை, பார்லிமென்ட் தான், மிக உயர்ந்த ஜனநாயக அமைப்பு. லோக்பால் மசோதாவை, பார்லிமென்ட் புறக்கணித்து விட்டால், பார்லிமென்டின் அந்த முடிவை ஏற்றுக் கொள்வேன்" என்று வேறு அறிவித்து இருக்கிறார் ஹசாரே.

எல்லா அரசியவாதிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது ஹசாரேவுக்கு தெரியாதா? ஊழல் செய்யாத அரசியவாதிகள் யாரும் இல்லை என்பது அவருக்கு புரியாதா? இதற்குத்தானே அவர் போராட தொடங்கி, மக்களை திரட்டினார்??

பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா போன்று வெறும் வாய் வார்த்தையில் மட்டுமே வேலைக்காகும் ஜன்லோக் பால் மசோதா.இது,வெறும் கண்துடைப்பு அல்லது நாடகம் என்ற உணர்வையே தருகிறது.


"ஊழல் குற்றச்சாட்டு நிரூபணம் ஆகிவிட்டால், அந்த ஊழல் ஆசாமிக்கு மரணதண்டனை விதிக்கபடவேண்டும்" உட்பட பத்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தில் தற்சமயம் இறங்கி இருக்கிறார் பாபா ராம்தேவ்.

கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்ட பந்தல் போட்டு,5000 மின்விசிறிகள் , போர்வெல் போட்டு 650 குழாய்கள், கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட் பாத்ரூம், டாய்லெட்கள், கண்காணிப்பு குழுவாக சுமார் 60 டாக்டர்கள் என "உண்ணாவிரத செட்டிங்" போடப்பட்டு இருக்கிறது.

"பாபா ராம்தேவ் ஜெட் விமானத்தில் பறக்கிறார். ஐந்து நட்சத்திர வசதிகளுடன் அவருக்கு உண்ணாவிரத அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, பாபா ராம்தேவ் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் எந்தவகையான சத்தியாகிரகம் என்று எனக்கு தெரியவில்லை" என்று தெரிவித்து இருக்கிறார் அமைச்சர் திக்விஜய் சிங்.

ஆனால், பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் அறிவித்தபோது, பிரதமர் முதல் காங்கிரஸ் அமைச்சர்கள் அவரை தொடர்பு கொண்டு, உண்ணாவிரதத்தை கைவிடும்படி கேட்டுகொண்டது ஏன்???

"ஊழலை ஒழிப்பதாக கூறும் பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருக்க, ரூ. 18 கோடி செலவில் தில்லி ராம்லீலா மைதானத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்பாவி மக்களை கவருவதற்காக கறுப்புப் பணத்துக்கு எதிராக போராட்டம் என்ற பெயரில் மத்திய அரசை பயமுறுத்த அவர் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். ராம்தேவின் மிரட்டலுக்கு அரசு பணிந்து செல்வதா?"

- இவ்வாறு அறிக்கை விடுத்து இருக்கிறார் திராவிட கழக தலைவர் என்று தன்னைதானே சொல்லிக்கொண்டு,பெரியாரின் சொத்துக்களை நிர்வகித்து(?)கொண்டுவரும் கி.வீரமணி.

பாபா ராம்தேவ் ஒரு யோகா மாஸ்டர்.எந்த ஒரு பதவி மற்றும் அதிகாரத்தில் இல்லாதவர்.

அரசியலில் இருந்து ஊழலை ஒழிக்க அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்துவருகிறார்.

தனது அறக்கட்டளையின் சொத்துக்கள், பணம் வந்த வழி, வரும் வழி ஆகிய அனைத்து விவரங்களையும் மக்கள் முன் சமர்பிக்க ராம்தேவ் முன்வந்து இருக்கிறார்.

மேலே சொன்ன,இந்த மூன்று உண்ணாவிரதங்களும் நம்மை "மண்டை காய" வைத்ததோடு, மீடியாவுக்கும் 'சரியான தீனி' போட்டவை.

சொல்லுங்கள், இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் கவனம் பெற்ற,இந்த மூன்று உண்ணாவிரதங்களில் எது நிஜம்?? எது பொய்??

-இன்பா

6 comments:

ப.கந்தசாமி said...

சாதாரண இந்தியர்கள் இளிச்சவாயர்கள். ஆகவே கடைசி இந்தியன் இருக்கும் வரை இத்தகைய பன்னாடைகள் கல்லா கட்டிக்கொண்டுதான் இருப்பார்கள்.

Anonymous said...

அன்புடன் வணக்கம் நண்பரே.
மூன்று உண்ண விரதங்களில் ஏது நிஜம் ஏது பொய் என கேட்டுள்ளீர்கள். இது ஒரு பக்கம் இருக்கட்டும் இலங்கைல் சகோதர சகோதரிகள் சித்ரவதை கற்பழிப்பு என்று உள்ளங்கை நெல்லி கனியாக தெரிந்து இருந்தும் கடிதம் எழுதி தனது பதவி ,தனது குடுமப்பதது சொத்துக்களை பாதுகாக்க தான் உண்ண விரதம்..!! ஹாசாரே ..அவரு நினைத்தது ஒண்ணு இப்பிடி ஒரு பப்ளிசிட்டி கிடைக்கும்னு எதிர்பார்கலை!! கட்டு சோத்துக்குள்ள பெருச்சாளியை வைத்து கொண்டு அந்தாள் நடாததியாது !!!!
இப்போ ராம்தேவ்... கருப்பு பணத்தை வெளி நாட்டிலிருந்து கொண்டு வா.. யாரு யாரு போட்டிருக்காங்கன்னு நல்லா தெரியும்.. ?? ஆனா நாங்க செய மாட்டோம் என அரசு சொன்னால் ??அவங்களுக்கும் அந்த பணத்தில் பங்கு இருக்கு>>
அய்யா???ஒருத்தன் கொலை செய்து பொருளை களவாண்டு ஒரு இடத்தில பதுக்கி வைத்திருக்கான் அவன் யாருன்னு..(விக்கி லீக்ஸ்) சொல்லிட்டாங்க ?? ஆனா அவனை புடிக்க முடியாது ??. சட்டத்தில் இடமில்லை. ?? சாதாரண ஒரு பாமரன் கூட என்ன செயணும்னு தெரியும் .??? ( என்ன போட்டு தள்ளிட்டு பொருளை கொண்டு வந்தது விடுவான்) ..உண்ண விரதத்தை கைவிடு...என பேச்சு வார்த்தை நடத்தும் அரசியல் வியாதிகள்????... உடன் ஏற்பாடு செய்து அந்த ஊழல் பெரூசாளிகளை பிடிப்போம் பணத்தை கொண்டு வருவோம் என சொல்ல துப்பில்லை???? ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்?????








parental guidance helps achieving the target
life is pre written-no body can rewritten-leave the rest to god.

Anonymous said...

அன்புடன் வணக்கம் நண்பரே.
மூன்று உண்ண விரதங்களில் ஏது நிஜம் ஏது பொய் என கேட்டுள்ளீர்கள். இது ஒரு பக்கம் இருக்கட்டும் இலங்கைல் சகோதர சகோதரிகள் சித்ரவதை கற்பழிப்பு என்று உள்ளங்கை நெல்லி கனியாக தெரிந்து இருந்தும் கடிதம் எழுதி தனது பதவி ,தனது குடுமப்பதது சொத்துக்களை பாதுகாக்க தான் உண்ண விரதம்..!! ஹாசாரே ..அவரு நினைத்தது ஒண்ணு இப்பிடி ஒரு பப்ளிசிட்டி கிடைக்கும்னு எதிர்பார்கலை!! கட்டு சோத்துக்குள்ள பெருச்சாளியை வைத்து கொண்டு அந்தாள் நடாததியாது !!!!
இப்போ ராம்தேவ்... கருப்பு பணத்தை வெளி நாட்டிலிருந்து கொண்டு வா.. யாரு யாரு போட்டிருக்காங்கன்னு நல்லா தெரியும்.. ?? ஆனா நாங்க செய மாட்டோம் என அரசு சொன்னால் ??அவங்களுக்கும் அந்த பணத்தில் பங்கு இருக்கு>>
அய்யா???ஒருத்தன் கொலை செய்து பொருளை களவாண்டு ஒரு இடத்தில பதுக்கி வைத்திருக்கான் அவன் யாருன்னு..(விக்கி லீக்ஸ்) சொல்லிட்டாங்க ?? ஆனா அவனை புடிக்க முடியாது ??. சட்டத்தில் இடமில்லை. ?? சாதாரண ஒரு பாமரன் கூட என்ன செயணும்னு தெரியும் .??? ( என்ன போட்டு தள்ளிட்டு பொருளை கொண்டு வந்தது விடுவான்) ..உண்ண விரதத்தை கைவிடு...என பேச்சு வார்த்தை நடத்தும் அரசியல் வியாதிகள்????... உடன் ஏற்பாடு செய்து அந்த ஊழல் பெரூசாளிகளை பிடிப்போம் பணத்தை கொண்டு வருவோம் என சொல்ல துப்பில்லை???? ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்?????

என் நடை பாதையில்(ராம்) said...

/*இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது,அப்போது ஒரு நாள் மட்டும் அடையாளவிரதம் இருந்தார் கருணாநிதி.*/

one day has 24hrs sir. his demonstration was only 2hours.

Jayadev Das said...

கருணாநிதி: இவர் எங்கே ஒரு நாள் உண்ணா விரதம் இருந்தார்? நாலே மணி நேரம் தான். ஏகாதசி விரதம் இருப்பவனை விடக் குறைவான நேரம். காலை டிபன் தின்று விட்டு மதியம் சாப்பாட்டுக்கு முன் ஜூஸ் குடிப்பதற்குப் பெயர் உண்ணா விரதமா? மற்ற இரண்டு பேர் உண்ணா விரதத்தால் பயன் உள்ளதோ இல்லையோ, மக்களிடையே சுவிஸ் கொல்லைப் பணம் பற்றிய விவரம் போய்ச் சேர்ந்துள்ளது. நிச்சயம் ஒரு நாள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கேள்வி கேட்பார்கள், அன்று அந்தப் பணம் இந்தியாவிற்கு வருவதைத் தவிர வேறு வழியில்லை.

Anonymous said...

கலைஞரை குறை சொல்லும்முன் ...
இந்த மூன்றுபேரின் நோக்கம் நிறைவேறியதா ? இல்லை.
இதை முன்னரே தெரிதுகொண்டதால் கலைஞர் நிரித்திகொண்டர்.
இதில் தவறு ஏதும் இல்லை.

 
Follow @kadaitheru