"Searching...Never Ends" என்கிற இந்த
புகைப்படம் CANDID CAMERA முறையில் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பெருமாள்
கோவிலில்
எடுக்கப்பட்டது.
புகைப்படம் எடுக்கப்பட்டதேதி : 28-5-12 நேரம்: காலை11:30 மணி அளவில்.
புகைப்பட கலைஞர் : பத்மநாபன்
http://www.facebook.com/ padmanaban.mohan
இங்கே
தேடல்...
தொடங்குகிறதா? இல்லை
முடிகிறதா?
இருபதுகளில்
காதல்
அறுபதுகளில்
ஆன்மிகம்
இப்படி
எந்த வயதில்
எதை தேடவேண்டும் என்பதை
எது
தீர்மானிக்கிறது?
ஆழமான வாசிப்பும்
ஒரு
தவம் அல்லவா?
இப்படியொரு
வாசிப்பு
ஒரு வரம் அல்லவா?
இங்கே
உள்மனமே வழித்துணை.
ஒரு பக்கத்திற்கும்
மறு பக்கத்திற்கும்
உள்ள இடைவெளியே..
ஓய்வு.
இது..
உயிரில்லா புத்தகங்களுக்குள்
ஒரு உயிர் தேடும்
முடிவில்லா பயணம்.
திருநாமத்தையும் தாண்டித் தெரியும்
நெற்றிச் சுருக்கங்கள்..
தேடும்போதே
இவருக்கு தெரிந்துவிட்டதா?
தேடுவதை
தேடிக்கொண்டே இருக்கவேண்டும்
என்பது.
இத்தனை வருடங்களாய்..
தொடர்ந்து கொண்டிருக்கும்
இவரின் தேடல்களை..
எங்கே சென்று நாம் தேடுவது?
அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு
ஒரு
அடையாளம் இவர்.
கண்ணாடிக்குள் இருக்கும்
இவர்
கண்களின் வெளிச்சத்தில்...
தெளிவாக தெரிகிறது
நான்
எதையோ தொலைத்துவிட்டதும்...
இதுவரைக்கும்
'அதை'
தேடவேயில்லை என்பதும் .
கவிதை - இன்பா
புகைப்படம் எடுக்கப்பட்டதேதி : 28-5-12 நேரம்: காலை11:30 மணி அளவில்.
புகைப்பட கலைஞர் : பத்மநாபன்
http://www.facebook.com/
இங்கே
தேடல்...
தொடங்குகிறதா? இல்லை
முடிகிறதா?
இருபதுகளில்
காதல்
அறுபதுகளில்
ஆன்மிகம்
இப்படி
எந்த வயதில்
எதை தேடவேண்டும் என்பதை
எது
தீர்மானிக்கிறது?
ஆழமான வாசிப்பும்
ஒரு
தவம் அல்லவா?
இப்படியொரு
வாசிப்பு
ஒரு வரம் அல்லவா?
இங்கே
உள்மனமே வழித்துணை.
ஒரு பக்கத்திற்கும்
மறு பக்கத்திற்கும்
உள்ள இடைவெளியே..
ஓய்வு.
இது..
உயிரில்லா புத்தகங்களுக்குள்
ஒரு உயிர் தேடும்
முடிவில்லா பயணம்.
திருநாமத்தையும் தாண்டித் தெரியும்
நெற்றிச் சுருக்கங்கள்..
தேடும்போதே
இவருக்கு தெரிந்துவிட்டதா?
தேடுவதை
தேடிக்கொண்டே இருக்கவேண்டும்
என்பது.
இத்தனை வருடங்களாய்..
தொடர்ந்து கொண்டிருக்கும்
இவரின் தேடல்களை..
எங்கே சென்று நாம் தேடுவது?
அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு
ஒரு
அடையாளம் இவர்.
கண்ணாடிக்குள் இருக்கும்
இவர்
கண்களின் வெளிச்சத்தில்...
தெளிவாக தெரிகிறது
நான்
எதையோ தொலைத்துவிட்டதும்...
இதுவரைக்கும்
'அதை'
தேடவேயில்லை என்பதும் .
கவிதை - இன்பா
1 comments:
நண்பா இன்பா,
நீண்ட நாட்களுக்கு பின் நல்ல ஒரு கவிதை வாசித்தேன்... நன்றிகள்...
உயிருள்ள வார்த்தைகள்... உணர்வுகளின் வார்ப்புக்கள் என கவிதை மின்னுகிறது....
ஆம்.... ஒரு நல்ல கவிதை வாசிக்கும் போது அது விட்டுச் செல்லும் மனதின் தாக்கத்தை அணு அணுவாக ரசிப்பவன் நான்.
கவிதை மட்டுமே... மனித மனத்தின் மென்மையையும் மேன்மையையும் உரசி அல்லது உயர்த்தி பார்க்கிறது.
தேடல்....
தேடல்... இந்த ஒற்றை வார்த்தைதான் வாழ்க்கையோ.... என யோசித்திருக்கிறேன்.
முன்னால் வாழ்ந்தோர் மறைந்தோர் காணாத ஒன்றை தேடுகிறேனே....
அவர்கள் காணாததை நான் காண விழைகிறேனே எனத்தான் எப்போதும் எனக்குள் அலுப்பு வரும்....
என்றாலும்... தேடல் தொடருகிறது....
தங்களுக்குள்ளும் அந்த தேடல் கொழுந்து விட்டு எறிவது தெரிகிறது. தேடுவது கிடைக்கட்டும்....
சில சமயம் கிடைத்தது... தேடியது போல் அமைந்து விடுவதால்... தேடல் நின்று விடுகிறது...
நில்லாத தேடல் தொடரட்டும்...
இனிய இலக்கை அடைய வாழ்த்துக்கள்...
கலக்குங்க இன்பா...
Post a Comment