"இந்திய ராணுவத்திற்கும் , பாகிஸ்தான் ராணுவத்திற்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான் இருக்கிறது. அது என்ன
தெரியுமா?"
-இப்படி என்னிடம் கேட்டவர் நமது எல்லைப்படையில் பணிபுரியும் எனது நண்பர்.
நான் எதோ அது அணு ஆயுதம் அல்லது ஏவுகணை சம்பந்தப்பட்டது என நினைக்க, அவரே சொன்ன விளக்கம் அதிர வைத்தது.
"நம் இந்திய ராணுவத்தில் வீரர்கள் நல்லவர்கள். ஆனால், அதிகாரிகள் மிகவும் மோசமானவர்கள். பாகிஸ்தான் ராணுவத்தில் வீரர்கள் மோசமானவர்கள். அங்குள்ள ராணுவ அதிகார வட்டத்தில் இருப்பவர்கள் நேர்மையானவர்கள்."
ராணுவம் என்பது நமக்கு தெரிந்தவரை அர்ஜுன் அல்லது விஜயகாந்த் படங்களில் பார்த்ததுதான். ஆனால், யதார்த்தம் அதுவல்ல என்கிறார் என் ராணுவ நண்பர்.
"தனக்கு கிழே உள்ள அதிகாரிக்கு அழகான மனைவி அமைந்துவிட்டால், அவரது மேல் அதிகாரிகள் அவரது மனைவியை அடைய எதுவேண்டுமானாலும் செய்வார்கள் " என்றும் மேலும் நமக்கு அதிர்ச்சி அளிக்கிறார்.
"கார்கில் யுத்தத்தின் போது, வீரர்களின் இறப்பு எண்ணிக்கையை அதிகமாக்க, அனுபவமே இல்லாத ஒரு வீரர்களின் அணியை முன்னால் போர்களத்திற்கு வேண்டுமென்ற அனுப்பினார்கள்.அந்த அளவுக்கு அரசியலின் பிடியில் இருக்கிறது நமது ராணுவ அதிகார வர்க்கம்" என்று வேதனையோடு சொன்னார் நண்பர்.
நமது ராணுவம் குறித்து என் நண்பருடன் நான் மேலும் விவாதித்த , காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் அங்குள்ள பெண்கள் மீது ராணுவம் நடத்திய/ நடத்தி கொண்டிருக்கும் பாலியல் வன்முறைகளை, அப்பாவி மக்கள் மீதான வன்முறைகளை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை.
தேச பக்தியோடு, நாட்டுக்காக விரும்பி ராணுவத்தில் சேருபவர்கள் வெகு குறைவே. வேலை இல்லாதிண்டாட்டமே , ராணுவத்தில் இளைஞ்சர்கள் சேர காரணமாக அமைந்து இருக்கிறது.
அரசியல் சாக்கடை பெருக்கெடுத்து, ஊழலில் திளைத்து கொண்டிருக்கும் ராணுவ அதிகாரிகளின் போலித்திரைகளை முதல் முறையாக கிழித்து இருக்கிறார் ராணுவ தளபதி வி.கே.சிங்.
"நாட்டில் பிற துறைகளில் காணப்படுவதுபோல், ராணுவத்திலும் ஊழல் நடக்கிறது" என்று வெளிப்படையாக தெரிவித்தார் சிங்.
"நாட்டில் பிற துறைகளில் காணப்படும் முறைகேடுகள், ஊழல்களைப்போல் ராணுவத்திலும் நடக்கிறது.
இதை தவிர்க்க, இடைத்தரகர்கள், கமிஷன் ஏஜன்டுகளின் உதவி இல்லாமல், முறைகேடுகளின்றி, ராணுவத்திற்கான ஆயுதங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இடைத்தரகர்கள், கமிஷன் ஏஜன்டுகள் போன்றோர் அகற்றப்படுவர். ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் தரமற்றவை என்ற குற்றச்சாட்டுகளை களையவேண்டும். தரமற்ற ஆயுதங்களை ராணுவத்தினர் பயன்படுத்துவதில்லை என்ற உறுதியை ஏற்படுத்தவேண்டும். இதற்கான நடவடிக்கைகளில் மாற்றங்கள் வரவேண்டும்.
- இவ்வாறு ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் ராணுவ தளபதி வி.கே.சிங்
ஊழல் நமது தேசிய வியாதி என்று சொன்னார் சுஜாதா.
"ஆமை புகுந்த வீடு உருப்படாது" என்பது பழைய காலத்து மூட நம்பிக்கை. "அரசியல் புகுந்த துறை உருப்படாது" என்பது இந்த காலத்து நிதர்சனம்.
( உ தா . நமது இந்திய ராணுவம்).
-இன்பா

0 comments:
Post a Comment