\
தமிழரின் வீர விளையாட்டான, 'ஜல்லிகட்டு' க்கு நீதிமன்றம் தடை விதித்துவிட்டது.
ஆனால், உலக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, ஒரு பெரும் ஜல்லிக்கட்டு காத்திருக்கிறது.
ஜில்லாவோடு போன பொங்கலில் மோதி, வெற்றி பெற்றது வீரம். இந்த பொங்கலுக்கும் அதைபோன்ற ஒரு கடுமையான போட்டி 'தல'யின்
என்னை அறிந்தால் படத்திற்க்கு காத்திருக்கிறது.
அது, இயக்குனர் ஷங்கரின் "ஐ".
"ஐ" - பெரும் பிரம்மாண்டமான படம் என்றாலும், படத்தின் பாடல்கள், டிரைலர் போன்றவை வெளிவந்து சுமார் இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.
தீபாவளிக்கு வெளிவருவதாக திட்டமிடபட்டு, அப்பொதே படம் வெளிவந்து இருந்தால், எதிர்பார்ப்பு நிலைத்து இருக்கும், ஆனால், இந்த தாமதம், படத்தின் சூட்டை குறைத்துவிட்டது.
படத்தின் பாடல்களும் ஆகாவென்று இல்லை. அதே சமயம் பாடல்களை படமாக்குவதில் ஷங்கருக்கு இணை இந்திய சினிமாவில் இல்லை என்பதே நிதர்சனம். எவ்வளவுதான் பிரம்மாண்டம் என்றாலும், படத்தின் மூலம் காதல் கதை.
ஸ்லிம் விக்ரம், ஒநாய் மனிதனாவது, காதலியை கடத்திக்கொண்டுபோய் வைப்பது என்பதெல்லாம் ஆங்கில படங்களில் பார்த்த விஷயங்கள்தான். எதிர்ப்பார்ப்பை எந்த அளவு நிறைவேற்றும் என்பது தெரியவில்லை.
"என்னை அறிந்தால்" - ஷங்கர்-விக்ரம்-ரகுமான் கூட்டணிக்கு சற்றும் குறைந்தல்ல அஜித்-கவுதம்-ஹாரிஸ் கூட்டணி. குறிப்பாக, படத்தின் பாடல்கள் "ஐ"யை விட சிறப்பாக இருக்கும் என நம்பலாம். காரணம், கவுதம்-ஹாரிஸ் என்றாலே, அது மிகப்பெரிய மியுஸிக்கல் ஹிட்தான்.
கூடுதலாக, 'தல'.
கவுதமுக்கு மிகப்பிடித்த போலிஸ் அதிகாரியின் பயணம். அவருக்கே உரித்தான சென்டிமெண்ட் ஆக்ஷனின் அஜித் அழகாக பொருந்துவார்.
பெண்கள் மத்தியில் இப்படம் அதிகம் ரீச் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது
"என்னை அறிந்தால்" படத்தைவிட, "ஐ" படத்துக்கு கூடுதல் திரைஅரங்குகள் ஒதுக்கப்பட்டு விட்டது.
இரண்டு படங்களும் போட்டியில் சளைத்தவை இல்லை என்றாலும், படம் ரிலிஸான முதல் வாரத்தில் "ஐ" வசூலில் முந்ததும்
அடுத்தடுத்த வாரங்களில் " என்னை அறிந்தால்" முதலிடம் வரும் என்பதே எங்களின் கணிப்பு. பார்ப்போம்.
ரசிகர்களுக்கு 'தல' பொங்கலோடு, "ஐ" விஷுவல் விருந்து காத்திருக்கிறது.
2 comments:
அடேய் அஜித் ரசிகனே தல வாழ்க னு ஒரே வார்த்தைல சொல்ல வேண்டியதுதானே ?
Sir super poi I will win in the race
Post a Comment