Thursday, December 16, 2010

அஜித்துடன் மோதவேண்டும் - சரத்குமார்


சரத்குமார் - 18 வயது இளைஞர். அஞ்சல் வழியில் BBA மார்க்கெட்டிங் படிகின்றார். இத்தாலி மொழியை ஆர்வமுடன் கற்று கொண்டு வருகிறார்.சென்னை தெருக்களில் பைக்கில் வலம் வருகிறார்.

இவர் ஒரு சாதாரண இளைஞர் என நீங்கள் நினைத்தால் அது தவறு. இவர்தான் நமது இந்திய நாட்டின் சார்பாக, வரும் 2011 ஆம் ஆண்டு
மார்ச் மாதம் நடைபெற உள்ள 125 cc பைக் ரேஸ் பந்தயத்தில் கலந்துகொள்ளப்போகும் முதல் இந்தியர்.

இவர் ஏற்கனவே 2008 ஆம் ஆண்டு இந்தியா அளவில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் பைக் ரேசில் கலந்துகொண்டு இருந்தாலும், சர்வதேச அளவிலான போட்டியில் இவர் பங்குபெறப்போவது இதுவே முதல் முறை.

2011 சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொள்ளபோவது ""ஸ்ரீபெரும்புதூர் ரேஸ் மைதானத்தில் பகல் முழுவதும் கடுமையான பயிற்சி செய்துவருகிறேன். சிறப்பாக பணியாற்றுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும், சர்வேதேச போட்டி என்பதால், மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும்.அந்த போட்டியில் என்னுடைய பார்ட்னர் ஒரு இத்தாலி நாட்டுக்காரர். நன்கு புரிதல் வேண்டும் என்பதற்காக இத்தாலி மொழியை கற்றுவருகிறேன்".என்கிறார் சரத்குமார்.

கிரிக்கெட்டை மட்டுமே கொண்டாடும் சென்னையில், பைக் ரேஸை எப்படி மக்களிடம் கொண்டு செல்லப்போகிறார் இவர்.

"FI எனப்படும் பைக் ரேஸ் போட்டி இங்கு சென்னையில்தான் நடைபெறப்போகிறது. இந்தியாவின் சார்பாக நாங்கள் கலந்துகொள்ளபோவதால், இந்த போட்டியை காண மக்கள் வருவார்கள்" என்று சொல்கிறார் சரத்.

இன்னொரு ஆச்சரியம்..இதுவரை பைக்கில் விழுந்து இவருக்கு காயம் எதுவும் ஏற்ப்பட்டதில்லை. "ஒரே ஒரு முறை மட்டும் நான் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்தபோது தவறி விட்டேன். பைக் மட்டும் முழுவதும் சேதமாகிவிட்டது. ஆனால், எனக்கு சிறு காயம் கூட ஏற்ப்படவில்லை" என்று கூறும் சரத்துக்கு பயிற்சி தந்து குருவாக இருப்பவர் பெயர்..ரஜினி கிருஷ்ணன். சென்னைக்கரர்தான்.

விளையாட்டு வீரருக்கு உடல் ஆரோக்கியம் மிகவும் அவசியம் என்று கூறும் சரத் அதற்காக தினமும் ஜிம் செல்வதாகவும், சைக்கிள் ஓட்டுவதும், நீச்சலும் தனது பிட்னெஸ் ரகசியங்கள் என்கிறார்.

"மைதானத்தில்தான் நான் வேகமாக ஓட்டுவேன். சென்னை சாலைகளில் பைக் ஓட்ட நிறைய பொறுமை வேண்டும்" என்னும் சரத், HONDA DEO பைக்கை சென்னை சாலைகளில் பயன்படுத்துகிறார்.

இவருடைய ரோல் மாடல்..வேறுயாருமல்ல அது 'தல' அஜித்குமார்தான். இது பற்றி ரேசர் சரத்குமார் தெரிவித்து இருப்பது.

"ஒரு பைக் போட்டியிலாவது அஜித் சாருடன் மோதவேண்டும் என்பதே எனது விருப்பம்" .

நமது நாட்டில் கிரிக்கெட் வீர்கள் மட்டுமே கொண்டாடப்படுவது நின்றால்தான், பைக் ரேஸ் போன்ற மற்ற போட்டிகள் வளரும்.

2011 ஆம் வருடம் நடைபெறப்போகும் பைக் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற சரத்குமாருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

-இன்பா

4 comments:

R.Gopi said...

//அஜித்துடன் மோதவேண்டும் - சரத்குமார்//

******

இன்பா... டைட்டில் பார்த்தவுடன் “தல”யும் “சுப்ரீம் ஸ்டார்” (இவருக்கு இந்த பட்டம் யார் தந்தார்கள்?) மோதலுக்கு தயாரோ என்று நினைத்தேன்... தலைப்பு மட்டும் தான் வில்லங்கம்.... இருந்தாலும், என்னா வில்லங்கம் தலைவா?

Philosophy Prabhakaran said...

இவருடைய பெயர் சரத்கமல் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்...

Philosophy Prabhakaran said...

தலைக்கே போட்டியா...?

tamil cinema said...

super.. new sports champ from chennai, tamil nadu :D

 
Follow @kadaitheru