Thursday, December 9, 2010

பெண் பார்த்தல்.....

கவிதைக்கு முன், ஒரு கட்டுக்கதை: இக்கவிதையில் வரும் பெயர்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே. அவை, யாரையும் குறிப்பிடுவன அல்ல.


'மான்' வேட்டையென நினைத்து
புறப்பட்ட எனக்கு
'புலி' வேட்டையாய் இருக்கிறது
பெண் பார்த்தல்.

வரன் தேடும் க(கா)ண்டத்தில்..
பெற்றோர்கள் விலகி நிற்க
கேள்விகளாலே
வேள்வி செய்கிறார்கள்
இன்றைய
நாகரிக பெண்கள்.

பேசும் முன்பே
'சிஸ்டர்ஸ்' இருக்காங்களா? என
சுதாரித்து கொண்டவள்
பெயர் பவித்ரா.

பேமலிக்கு நீங்க வாங்கற
'பே' பத்தாதே என்று
பின்வாங்கிய
ப்ரியா ஒரு
ப்ரோஜக்ட் லீடர்.
நான்
முதன் முதலாக
பேசியவள்.

'உங்க பேருல
வீடு ஏதும் இருக்காவென'
வினவினாள்
வேலை தேடும்
விலாசினி.

மூன்று நாட்கள்
முழுதாய் பேசியபின்
மேலோட்டமாக சொன்னாள் தன்
'முன்னாள் கணவனை' பற்றி.
ஐ.டி. திவ்யா.

பேச்சுவாக்கில் என்
'ப்ராபர்டிஸ்' பட்டியல்
கேட்டுக்கொண்ட
பத்மாவதிக்கு
பேங்க்கில் வேலை.

'நம்ம மேரேஜுக்கு அப்புறமும்
அவனோட ப்ரண்ட்ஷிப் வச்சுப்பேன்'
-இப்படி
கூலாக சொன்னவள்
'கால்சென்டர்' லக்ஷ்மி.

இனி
ஆண்களுக்குதான்
கேட்கவேண்டுமோ?
இட ஒதுக்கீடு.

'ஏதாவது குறை
இருக்கா?' என்று
விசாரிக்கிறார்கள்
சரியென்று
என்னை விட
ஏழை குடும்பத்தில்
பெண் பார்த்தால்.

கல்யாண மார்கெட்டில்
காணுமிடமெல்லாம்
இன்றைக்கு
'முதிர்' கண்ணன்கள்.

கிராமங்களில்
கள்ளிப்பால்.
நகரங்களில்
கருத்தடை.

'தன்வினை தன்னைச் சுடும்'
என்பது இதுதானா?

நான் பார்த்த
எல்லா பெண்களுமே
என்னிடம் பார்த்தது...

"வீடு இருக்கா இல்லை
'கேஷ்' இருக்கா?"


வரன் தேடும்
எந்த பெண்ணும்
இதுவரைக்கும் பார்க்காதது....

"கேரக்டர்" இருக்கா?.


கவிதை : இன்பா

கடைக்காரர் கமெண்ட்:
இப்படி புலம்பறதை விட்டுட்டு காசு சம்பாதிக்க வழி தேடறதுதான் புத்திசாலித்தனம்.
என்னங்க செய்யறது? கல்யாணத்தை விடுங்க. பணம்தான் இன்னைக்கு மனுஷன் வாழறதுக்கே தகுதின்னு ஆகிப்போச்சு இல்லீங்களா?.

அப்புறம் நண்பர்களே.
இது எங்க கடைத்தெருவோட 100 வது ஸ்பெஷல் சரக்கு.
இந்த வலைப்பதிவுல இருக்கிற வாடிக்கையாள அன்பர்களுக்கும், படிக்கின்ற உங்களுக்கும் ரொம்ப..ரொம்ப நன்றிங்க.

6 comments:

roshaniee said...

பெண் பார்த்தல் படலம் சூப்பர்
அருமையான பகிர்வு

R.Gopi said...

யப்பா....

இன்பா.... நண்பா... கமான் லெட்ஸ் கோ....

பெண் பார்க்கும் படலத்தில் இம்புட்டு இருக்கா!!

படிச்சாலே நுரை தள்ளுதே!! இன்னும் போய் பொண்ணு பார்த்துட்டு வந்தா என்ன ஆகுமோ??

அதான், எல்லாம் ஒரு மார்க்கமா திரியறாய்ங்களா??

R.Gopi said...

ஆஹா...

ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன்...

100வது பதிவிற்கு வாழ்த்துக்கள்....

தாங்கள் இது போல் மென்மேலும் சதங்கள் அடிக்க வாழ்த்துகிறேன் இன்பா..

R.Gopi said...

//நான் பார்த்த
எல்லா பெண்களுமே
என்னிடம் பார்த்தது...

"வீடு இருக்கா இல்லை
'கேஷ்' இருக்கா?"


வரன் தேடும்
எந்த பெண்ணும்
இதுவரைக்கும் பார்க்காதது....

"கேரக்டர்" இருக்கா?.//

********

அருமை........

அசத்தல் வரிகள்ள்ள்ள்ள்ள்ள்.......

வீரராகவன் said...

முதலில் 100வது பதிவுக்கு
பாராட்டுக்கள்.
இனி கவிதைக்கு
கவிதை நடையில்(?)
பதில்.

இன்பா
என் நண்பா
இன்பம் தருவது
பெண்பா
என எண்ணி
பெண்பார்க்கும் படலம்
தொடங்கினாயே
கண் பார்த்து
காதலித்த பெண்கூட
எண்ணி பார்ப்பது
தத்தம் பாதுகாப்பை.
பணம் படுத்தும்பாடு
பண்பாடு தொலைந்தது
என பண் பாடு.
முதிர் கண்ணனோ
முதிர் கண்ணியோ
அவரவர் பாதுகாப்பிற்கு
வள்ளுவன் தந்தான்
பதில்.
சிறை காப்பு எவன் செய்யும்?
நரை பெற்று கிழப் பருவம்
எய்திய சமயமே
செய்தியை தரும்
பணம் தரும் சுகம் விட
குணம் தரும் இதம் மேல் என்று.
கருத்து ஒருமித்து ஆதரவுதரும் இணை விரைவில் அமைய
வாழ்த்துக்கள்.
விரைவில்

Manikantan said...

இன்பா என் நண்பா, உன் கவிதையை காணும்போது எனக்கு இரு வருடங்களுக்கு முன் நடந்த கதை அப்படியே கண்முன் தோன்றுகிறது. இதன்மூலம் நம்மை போல் பலரும் பதிப்புக்கு உள்ளாகி இருப்பார்கள் என்று என்னால் யூகிக்க முடிகிறது, அதனால் ஆண்களுக்கு என்று ஒரு அமைப்பு இருந்தால் தான் நல்லது என்பது என் கருத்து, அதற்கு என் முழு ஆதரவு.

 
Follow @kadaitheru