Thursday, December 2, 2010

மன்மதன் அம்பு - கமல் சார், தேவையா இது?.


மன்மதன் அம்பு படத்தின் பாடல்கள் அனைத்தையுமே கமலே எழுதி இருக்கிறார். ஒரு பாடலை மட்டும் போனால் போகிறது என்று கவிஞர் விவேகாவுக்கு விட்டுகொடுத்து இருக்கிறார்("கந்தசாமி" செண்டிமெண்ட் போலும்!).

இந்த படத்தின் பாடல்களை எழுதிவிட்டு இரண்டு முக்கிய ந(ண்)பர்களிடம் காண்பித்து, விவாதித்து இருக்கிறார் கமல்ஹாசன்.

முதலாமவர், கவிஞர் வாலி.

"நான் எழுதிய மன்மதன் அம்பு பாடல்களை வாலியிடம் படித்து காட்டினேன். திருத்தங்கள் எதாவது தேவை என்றால் செய்துவிடலாம் என்று நினைத்தேன்.ஆனால்,அவர் பாடல்கள் நன்றாக இருப்பதாக கூறிவிட்டார் " என்றார் கமல்.

இரண்டாமவர், கலைஞர் கருணாநிதி. கமலுடன் கலைஞர் என்ன விவாத்தார் என்று பதிவின் கடைசியில் சொல்கிறேன்.

முதலில், படத்தின் பாடல்களை பற்றி பார்ப்போம். ஏற்கனேவே ஹே ராம் படத்தில் "நீ பார்த்த பார்வைக்கு நன்றி" மற்றும் விருமாண்டியில் "உன்னை விட" என்று படல்களை கமல் எழுதி இருந்தாலும், ஒரு முழுமையான பாடலாசிரியராய் அவர் அவதாரம் எடுப்பது இதுவே முதல் முறை.

பாடல்களை கேட்டபின், இது இந்த அவதாரத்துக்கு கடைசி முறையாக இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

படத்துக்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத்.

1."தகிடு தத்தம்" - பாடலை பாடி இருப்பவரும் கமல்ஹாசனே. "போனால் போகுதுன்னு விட்டினா, கேணைன்னு ஆப்பு வைப்பாண்டா" என்று கமல் எழுதி இருக்கிறார். சுமார் ரகம்.

பேசாமல், இந்த பாடலை பேரரசுவிடம் கொடுத்து இருக்கலாம்.

2.who's the hero - என்று ஆங்கில வரிகளில் தொடங்கும் பாடல். பாடலை பாடி இருப்பவர் "செல்வராகவன்" புகழ் ஆண்ட்ரியா. அவரை போலவே செக்சியான குரல். படத்தோடு ஒன்றி வரும் பாடல் என்று தோன்றுகிறது.

பாதி பாடல் ஆங்கிலத்தில் இருக்கிறது. படத்தோடு சேர்ந்து பார்க்க வேண்டும்.
3."நீல வானம், நீயும் நானும் " என்று தொடங்கும் பாடல்.

இதை பாடி இருப்பவரும் கமலே.

"வையமே கோவிலாய், வானமே வாயிலாய், பாயிலே சேர்ந்து நாம் கூடுவோம்" என்று த்ரிஷாவை அழைக்கிறார் கமல்.

படத்தில் எனக்கு பிடித்த பாடல். நல்ல மெலடி. கமலுக்கு பதில் கார்த்தி பாடி இருந்தால், இன்னும் நன்றாக வந்து இருக்கும்.

4."உய்யாலே" என்று தொடங்கும் பாடல். சுசித்ரா மற்றும் கார்த்திக் குமார் பாடி இருக்கிறார்கள்.

இந்த பாடலை மட்டும் விவேகா எழுதி இருக்கிறார். சுமார் ரகம். "அண்டங்கக்காய் கொண்டைக்காரி" நினைவு வருகிறது பாடலை கேட்கும்போது.

5.ஒரு கவிதையாய் எழுதி, அதை த்ரிஷாவுடன் சேர்ந்து ப(டுத்தி)டித்து இருக்கிறார் கமல்ஹாசன். கவிதையின் சில வரிகளை பாருங்கள்.

கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கைகோர்த்தாளா?
ஒழுக்கம் கெட்டவள் எச்சரிக்கை

ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை
கலவி முடிந்தபின் கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை

இந்த கவிதையுடனே, தனக்கு எந்த மாதரி கணவன் வேண்டும் என்று
ஸ்ரீ வரலட்சுமிக்கு ஒரு பெண் வரம் கேட்பதாகவும் கூடுதலாக ஒரு கவிதையை எழுதி, அதை படித்துஇருக்கிறார் கமல்ஹாசன்.

காம கழிவுகளை கழுவவும், சமையலறையில் உதவும் கணவன் வேண்டும் என்று வரிகள். "முற்றும் துறந்த பெண்களோடு, அம்மண துறவிகள் கூடிட கண்டேன்". என்றும், ரங்கநாதரையே வம்புக்கு இழுக்கும் வரிகளும் இருக்கின்றன.

இலக்கியத்தில், இசம் இசம் என்று சொல்வார்களே. அது போல இருக்கிறது கவிதை.

கவிதை நடையும், வரிகளிலும் அரத பழசான "மாலன்,பாலகுமாரன்" காலத்து பாணி.

6.மன்மதன் அம்பு - தேவி ஸ்ரீபிரசாத் பாடி இருக்கும் பாடல்.

வழக்கும்போலேவே, DSP என்று தன்னை அறிமுகபடுத்தி கொண்டு பாடி இருக்கிறார். வழக்கமான அவர் ஸ்டைல் பாடல்.

படம் முடிந்து, எல்லாரும் எழுந்து வீட்டுக்கு கிளம்பும்போது திரையில், தொழில்நுட்ப கலைஞ்சர்களின் பெயர்கள் வரும்போது ஒலிக்கும் பாடல் என்று நினைக்கிறேன்.

இது தவிர, தீம் இசையும் இருக்கிறது. கமலுக்கு பதில், கவிஞர் வாலியே எழுதி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.

கமல் எழுதிய இந்த படத்தின் பாடல்களை கேட்டுவிட்டு கலைஞர் " என்ன கமல். நீங்களே பாட்டெல்லாம் எழுதிடீங்களே " என்றார்.

அதற்க்கு, கமல் சொன்ன பதில் " எழுத தெரிஞ்சவங்க கம்மி ஆய்ட்டாங்க" .

"உன்னை போல் ஒருவனில்" கவிஞர் மனுஷிய புத்திரன் கிடைக்கவில்லையா? இன்னும் எவ்வளவோ திறமையான கவிஞ்சர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்?

குடும்ப டிவிக்கள் இருக்கையில்,இந்த படத்தின் பாடல் வெளியிட்டு உரிமையை விஜய் டிவிக்கு தந்துவிட்டார் படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின். பாடல்களை கேட்டுவிட்டுதான் இந்த முடிவை எடுத்திருப்பார் என்று தோன்றுகிறது.

மொத்தத்தில்,நம் எதிர்பார்ப்புக்கும் குறைவான தேவியின் இசைக்கு கரடு முரடாக பொருத்தமே இல்லாமல் இருக்கறது கமலின் வரிகள்.

படத்தின் ஸ்டில்லில், கமலுக்கு அடங்காத காளை போலவே, இன்னும் கமலின் கைகளில் சிக்காமல் திமிறுகிறது கவிதைகளும், பாடல்களும்.
கமல் சார், தேவையா இது??.

-இன்பா

3 comments:

Madurai pandi said...

நானும் பாடல்கள் கேட்டேன்.. கொஞ்சமா கரடு முரடான வரிகள் தான்.. ஐந்தாம் பாடல் என்னவோ, கமலும் , சங்கீதாவும் பேசுவது போல வருகிறது.. திரிஷா இல்ல..

R.Gopi said...

இன்பா...

மன்மதன் அம்பு பாடல்கள் என்று சொல்லி இருக்கிறீர்களே, எங்கே சார்.. தேடிக்கொண்டு இருக்கிறேன்...

பதிவின் பின் வரும் வரிகளை ரசித்தேன்... ரசித்து சிரித்தேன்...

//பாடல்களை கேட்டபின், இது இந்த அவதாரத்துக்கு கடைசி முறையாக இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.//

//பேசாமல், இந்த பாடலை பேரரசுவிடம் கொடுத்து இருக்கலாம்.//

//குடும்ப டிவிக்கள் இருக்கையில்,இந்த படத்தின் பாடல் வெளியிட்டு உரிமையை விஜய் டிவிக்கு தந்துவிட்டார் படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின். பாடல்களை கேட்டுவிட்டுதான் இந்த முடிவை எடுத்திருப்பார் என்று தோன்றுகிறது//

ஹா...ஹா...ஹா... யப்பா... சான்ஸே இல்ல தலைவா....

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

R.Gopi said...

மேல இருக்கற ஃபோட்டோவில் பாடல்கள் சூப்பர் ஹிட்னு போட்டிருக்கே. இது முரண்பாடான பொய் இல்லையா?

 
Follow @kadaitheru