Tuesday, December 31, 2013

நம்மாழ்வார் - மண்ணுக்கு அஜீரணம்.

இதுவரை
இயற்கை
பல பேரழிவுகளை
நிகழ்த்தி இருக்கிறது.
இப்போது
இயற்கை ஒரு பேரழிவை
சந்தித்து  இருக்கிறது.

இனி,
வயல்வெளிகளுக்கு
வழிமொழிய
வாயில்லை.

ஐயோ!.
இருக்கும்
கொஞ்சநஞ்ச
மரங்களும்
தற்கொலைக்கு
தயாராகுமே.

தமிழ்நாட்டில்
மிச்சமிருக்கும்
விவசாயமும்
'கான்கிரிட் பயிரு'க்கு
மாறிவிடுமே.

ஐயாவின் மரணம்
மண்ணுக்கு அஜீரணம்.

இனிவரும்
சமூகம்
இயற்கை வேளாண்மைக்கு
மாறும்வரை..

சாந்தி அடையாது
(நம்)ஆழ்வாரின் ஆன்மா.


இரங்கல் - இன்பா

Tuesday, December 24, 2013

இது எப்படி இருக்கு????


Monday, December 23, 2013

செந்தமிழனின் தமிழ் உணர்வு(?) - சிங்கள பூஜா,மலையாள விஜயலெட்சுமி, இப்போ மலேசிய மங்கை


"தம்பி" படத்தில் சிங்கள நடிகை பூஜாவை கதாநாயகியாக நடிக்கவைத்தவர் சீமான். 
இன்று ஈழ்த்தமிழர்களை பற்றி, பிரபாகரன் படத்தை போட்டுக்கொண்டு கட்சி மற்றும் வயிறு வளர்ப்பவர். முஷ்டியை உயர்த்திகொண்டு, தன்னை தானே "செந்தமிழன்" என்று கூறிக் கொள்பவர். ஏற்கனவே மலையாள நடிகையான விஜயலட்சுமி, இவரை பற்றி பகிரங்கமாக புகார் தெரிவித்து இருந்தார்.

தற்சமயம் இவரை பற்றி, ஆதாரத்துடன் இணையத்தில் வெளியிட்டப்பட்ட செய்தி இங்கே...



திறந்து காட்டும் பெண்ணுடன் சீமான் தொடர்பு என்கிற தலைப்பில் புகைப்பட ஆதாரங்களுடன் அன்பர் ஒருவரால் அனுப்பி வைக்கப்பட்டு உள்ள பதிவு இது.

மலேசியாவில் அவர் சட்டிங் செய்யும் நபர்களுக்கு ஆபாசமாக தன் உடலை காட்டும் பெண்ணுடன் நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான்க்கு என்ன தொடர்பு ? இப்படியான பெண்களுடன் தொடர்பில் இருந்த உனக்கு இந்து மதத்தை பற்றி தவறாக பேச என்ன உரிமை இருக்கு ?

அஜித் ரஜனி ரசிகர்கள் கேவலமானவங்க என்று சொல்லிய நீ எப்படி பட்டவன் என்று இதில் இருந்து எலோருக்கும் புரியட்டும் .இதில் கொடுமை என்னன்னா அந்த பெண் ஆபாசமாக தன் உடலை காட்டிடும் போது அவ அறை சுவரில் விடுதலை புலிகளின் இலட்சனை(கொடி) ஒட்டபட்டுள்ளது .அந்த கொடியை அங்க ஒட்ட உனக்கு என்ன தைரியம் ? எதற்கு ஈழ மானத்தையும் சேர்த்து வாங்குற ?

இப்படியான பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ள சீமானை தலைவன் என்று சொல்பவர்கள் இதற்கு பதில் சொல்லுங்க. “ இரவினில் ஆட்டம், பகலினில் கூட்டம் என்று ஒரு பாட்டு இருக்கே ... தெரியுமா ? தமிழ கவிஞன் சும்மாவா சொன்னான் ! அது நம்ம சீமான் அண்ணைக்கு நன்றாகப் பொருந்தும் போல இருக்கே ! மலேசியாவில் இருக்கும் ஒரு தமிழ் பெண்ணோடு சீமான் சார் மிக நெருக்கமா பழகுவாராம்.

அந்தப் பெண் தமிழகம் சென்று சீமானுடன் ஒட்டி உறவாடுவாராம். சேர்ந்து நின்று ஸ்டில் படம் எடுத்து கொள்ளுவாங்களாம் .... ஆனால் ஒண்ணுமே இல்லை எண்டு சொல்லுவாங்களாம்... இது எப்படி இருக்கு மவணே ? இங்க உள்ள புகைப்படங்களை பாருங்க. சீமானுடன் ஒட்டிக்கொண்டு படம் எடுத்த பிள்ளை. மலேசியாவில் அவர் சட்டிங் செய்யும் நபர்களுக்கு திறந்தும் காட்டுவார்.

ஆபாசமாக மலேசியாவில் பணம் பறிக்கும் இந்தப் பெண்ணுக்கு மலேசிய நாம் தமிழர் இயக்கம் முக்கிய இடம் ஒன்று கொடுத்துள்ளதாம். தலைவியோ இல்லை மகளீர் அமைப்பின் தலைவியோ தெரியவில்லை. ஆனால் ராத்திரியான போதும் இவர் சிலுக்கு சிமிதாவாக மாறிவிடுவார். இந்தப் பெண் தமிழகம் சென்றவேளை எங்கே தங்கினார். சீமான் வீடிலா ? இல்லை விடுதியிலா ?

சீமான் எப்ப எப்ப போய் இப் பெண்ணை சந்தித்தர் ? சுவாமி நித்தியானந்தாவின் காம லீலைகள் போல பல விடையங்கள் விரைவில் வெளியாக உள்ளது. சீமான் இப் பெண்ணுடன் இருக்கும் பலான பலான காட்சிகள் அடங்கிய வீடியோவும் வெளியாகவுள்ளது. விரைவில் எதிர்பாருங்கள் மக்களே.... தமிழிழ உணர்வாளர்கள் என்று நாம் சிலரை தலையில் தூக்கிவைத்து ஆட அவர்கள் இரவில் போடும் ஆட்டம் இதுதான் ! இதுக்கு கனடாவில் இருந்து லண்டனில் இருந்து சுவிசில் இருந்து ஈழத் தமிழர்கள் காசு வேற அனுப்புகிறார்கள். இந்தப் படத்தை பார்த்ததும் சீமான் என்ன சொல்வார் தெரியுமா ? ஆமா இந்தப் பொண்ணை எனக்கு தெரியும். அவர் துணிக்கடையில் உடுப்பு வாங்கச் சென்றபோது சரவணா ஸ்டோர்சில் இப்படி எடுத்துட்டாங்க ...... என்பார் இல... ஆனா அந்தப் பொண்ணு, நல்லா போஸ் கொடுக்குது பாருங்க .... உத்துப் பாருங்க தெரியும்..... இதுவா களவா எடுக்கப்பட்ட போட்டோ ? உங்களுக்கு தெரியாதா என்ன ?

மக்கள் தான் நீதி கூறவேண்டும் ...... இந்தச் சீமானுக்கு யாரையும் தாக்கி கதைக்க அறுகதையே கிடையாதே.... மக்களே.... அது எப்படி உணர்ச்சியா பேசக்கூடிய யாரைப் பார்த்தாலும் ஈழத் தமிழர்கள் அப்படியே கவுண்டு போகிறார்கள் ? ” நன்றி தாய் நாடு

மன்னிக்கவும் நண்பர்களே இப்படியான பதிவுகள் இட எனக்கு விருப்பம் இல்லை ,ஆனால் நல்லவர்கள் போல வேடமிடும் சிலரின் முகத்திரையை கிழித்தெறிய வேறு வழி இல்லாததால் பல நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ,சீமான் தொடர்பான ஆதாரம் கீழே இணைக்கபட்டுள்ளது .

http://www.thainaadu.com/read.php?nid=1373119932#.UrcBT9IW2Zf


நன்றி : https://www.facebook.com/thamizhanda2013

Friday, December 20, 2013

'வீரம்' இசை - அதுதான் DSP

தேவிஸ்ரீபிரசாத் பாடி இருக்கும் 'தல' ஸ்பெஷல் பாடலான 'நல்லவன்னு சொன்னாலும்' இந்த வருடத்தின் சிறந்த குத்து பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

'எந்த படம் ஒடினாலும், நாங்கதான் அங்க ஹீரோ' இதுதான் கவிஞர் விவேகா.




முதல் பாடல் 'தல' பாடல் என்றால் இரண்டாவது பாடலான 'கண்ணும் கண்ணும்' தமன்னா பாடல்,

புஷ்பவனம் குப்புசாமி ஒரு 'ஜிங்க் சிக்கா' பாடலை பாடி இருக்கிறார். பொங்கல் மூடு ஏற்றும் கலக்கல் திருவிழா விழா பாடல்.

வீரம் தீம் பாடல் விறுவிறு.

கேட்ட பாடல்கள்தான்..ஆனாலும் கேட்கும்படியாக இருக்கிறது "வீரம்" படத்தின் பாடல்கள். மறுபடியும் கேட்க தூண்டும்படியாகவும் இருக்கிறது,
அதுதான் DSP.

Saturday, November 9, 2013

ஆரம்பம் - நூறு சதவீதம் நேர்மையான விமர்சனம்



ஆரம்பம் படத்திற்க்கு இதுவரை எவ்வளவோ பேர் விமர்சனம் எழுதி தள்ளிவிட்டார்கள். அவர்க்களுக்கும், என் விமர்சனத்திற்க்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம்,நான் படத்தை திருட்டுத்தனமாக, 'டவுன்லோட்' செய்து பார்த்துவிட்டு, இந்த விமர்சனத்தை எழுதுகிறேன்.

வலை உலக விமர்சன வரலாற்றில், இப்படி ஒரு விமர்சனம் இதுவே முதல் முறை எனலாம்.

என்ன செய்வது. நான் தற்போது பணியாற்றும் ஊரில் தியேட்டர்களே இல்லை என்பதால், படத்தை இப்படி 'இறக்குமதி'  செய்து, அதற்க்கு விமர்சனம் வேறு எழுத நேரிட்டமைக்கு வருந்துகிறேன்.

இன்னும் கொஞ்ச நாள் பொரு தலைவா, நல்ல பிரிண்ட் வரும் என்றான் என் நண்பன்.

ஆனால், எனக்கு தியேட்டர் பிரிண்ட் பார்க்கவே ஆசை.  'தல' படத்தை முதல் நாள்,முதல் காட்சி பார்க்கமுடியாத சோகத்தை, ஏக்கத்தை திரையரங்கில் ரசிகர்களின் விசில்,கைத்தட்டல்கள் இன்ன பிற சத்தங்களை பதிவு செய்து இருக்கும் இந்த பிரிண்ட் ஒரளவுக்கு போக்கிவிட்டது.

ஓளிப்பதிவு,இசை இவை இரண்டை பற்றியும் வேறு நல்ல பிரிண்ட் வந்தவுடன், பார்த்துவிட்டு எழுதுகிறேன். கதை பற்றி சொலவதற்க்கு ஒன்றுமில்லை. படத்தை பொருத்தவரை எனக்கு பெரிய ஏமாற்றம் தந்தவர்(கள்) கதாசிரியர் சுபா மட்டுமே.

'தல' ஒரு சீன் வரும் 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்தையே முதல் காட்சி பார்த்த நான் 'ஆரம்பம்' படத்தை அலசி, விமர்சனம் எழுதினால், அது கண்டிப்பாக நேர்மையானதாக இருக்காது.

ஆகையால், படத்தை பற்றி ஒரு வரி மட்டும்.  படத்தில் ஆயிரம் ஒட்டைகள் இருந்தாலும், அதை அடைத்து இருக்கிறது அஜித்தின் பிரசன்ஸ்.

எம்.ஜி.ஆர், ரஜினி ஆகியோருக்கு பின் காந்த சகதி படைத்த ஒரே நடிகர், அது தல தான்.

அடுத்து, வீரம் படத்துக்கு இதுபோல(??)- நூறு சதவீதம் நேர்மையான விமர்சனம்
எழுத இப்பவே வெயிடிங்.

-இன்பா

Friday, October 25, 2013

எங்கே போனாய் தாவணியே....



எங்கே போனாய்

கடந்த நூற்றாண்டின்
காணாமல்போனவைகளின் பட்டியலில்கூட
காணவில்லை உன் பெயரை.

கிராமபுறங்களில்
விளைநிலங்களோடு சேர்ந்து
நீயும்
தொலைந்து போய்விட்டாயே.

வயல்வெளிகளையும்,உன்னையும்
இனிவரும்
தலைமுறை
இன்டர்நெட்டில்தான்
காணமுடியும்.

சுடிதார்,மிடி,ஜீன்ஸ்
என மேற்கத்திய எதிரிகள்
உன்னை குற்றூயிராய் போட..
மிச்ச உயிரையும்
எடுத்துவிட்டது
நைட்டி.

இன்று
கொஞ்சமாவது
தன் படங்களில்
உன்னை
வாழவைத்து கொண்டிருக்கும்
தமிழ்சினிமா இயக்குனர்களுக்கு
குறிப்பாக
உனக்கு தொடர்ந்து
வாய்ப்பளிக்கும்
சிங்கம் ஹரிக்கு
நன்றி சொல்வாய்...

தொலைந்துபோன அல்லது
தொலைக்கப்பட்ட
தாவணியே...

-இன்பா..


Tuesday, August 6, 2013

காதலன் - இறந்தும் இருக்கிறான்


இங்கே
காதல் நாடகத்தின்
இறுதிக்காட்சி
ஒரு
இறுதி ஊர்வலத்தில்
முடிந்துவிட்டது,

இதோ
தலை சிதைந்து
வீழ்ந்துவிட்டது
காதல்.

சாதியின்
முரட்டு 'பூட்ஸ்" கால்களில்
மிதிபட்டு நசுங்கிவிட்டது
தருமபுரியில் பூத்த
ஒரு காதல்மலர்.

காதலன்
இறந்தும் இருக்கிறான்.
காதலியோ
இருந்தும் இறந்துவிட்டாள்.

மொத்ததில் இங்கே
மரித்துவிட்டது காதல்.
பிழைத்துவிட்டது சாதி.

காதல் இளவரசனே!

உனக்காக கட்டப்பட்டுவிட்டன
எத்தனையோ உள்ளங்களில்
தாஜ்மகால்கள்.

காதல் போயின்
சாதல் என்று
மகாகவியின் வாக்குக்கு
வாழவளித்தவன் நீ.

இனி தமிழுக்கு
உன் காதல்
ஆறாம் பெருங்காப்பியம்.

பிறப்பு தொடக்கம்.
இறப்பு முடிவு.

வாழ்வெனும் நாடகத்தில்
காதல்
இடையே வந்துபோகும்
காட்சிதான்.

காட்சிகள் மாறலாம்.
உன் மரணம் உட்பட
எந்த சோகத்தையும்
காலம் ஆற்றலாம்.

இரண்டு நூறு வீடுகளை
எரித்ததும்
இரண்டு உயிர்களை
குடித்தும்
இன்னமும் அடங்காவெறியுடன்
அலைகிறதடா சாதி.

இனி உருவாகும்
இளவரசன்களும்,திவ்யாக்களும்
சாதி அரக்கனுக்கு
சமாதி கட்டட்டும்.
சமூகத்தின் முன்
கைகோர்த்து வாழ்ந்துகாட்டி.

-இன்பா

Thursday, August 1, 2013

வெண்ணிலா,கடல் மற்றும் நான்



இருட்டுச்சகதியில்
பூத்ததொரு
தங்கத்தாமரை.

பகலின்
கிழிந்துபோன
சட்டைப்பையிலிருந்து
நழுவி விழுந்த
வெள்ளி நாணயம்.

வானம்
மேகக்கைகுட்டைகளால்
துடைத்து,துடைத்து
பாதுகாக்கும்
ஒளிப்பேழை.

உலகக்கூரையின் கீழ்
எல்லா உயிரினங்களின்
காதலுக்கும்
இறைவன் வைத்த
சாட்சிக் கைநாட்டு.

காதலியின்
பெயர் எழுத
கள்ளிச்செடியின் இலை போதும்.
காதலர்களின்
பெயர் பதிக்க
பாறையொன்று போதும்,
ஆனால்,
காதலை
பதிவு செய்ய
வெண்ணிலா
மட்டுமே வேண்டும்.

.இதோ..
நிலாத்தாய்
தன் ஒளிக்கரங்கள் நீட்டி
உலகை அழைக்கின்றாள்.

துள்ளிவரும் அலைகளை..
தலையாட்டும் மரம்,செடி,கொடிகளை,
நிமிர்ந்து நிற்கும் மலைகளை,

முந்திக்கொண்டு
முதல் நிலையில் செல்கிறது
என் கவிதை.


கவிதை : இன்பா

 
Follow @kadaitheru