நிலக்கரிப் படுகை மீத்தேன் : நிலத்தடியில் நிலக்கரி இருக்குமானால், அந்தக் கரிப்பாறைகளில் உள்ள நுண்துளைகள்
வழியே, கரிப்பாறைகளுக்கு அடியில் இருக்கும்மீத்தேன் வாயு ஊடுறுவி வெளிவரும். இது நிலக்கரிப்
படுகை மீத்தேன் ஆகும். (Coal Bed Methane) இங்கே நிலக்கரியைவெட்டி எடுப்பதுவேலையல்ல.
கரிப்பாறை நுண்துளைகள் வழியே மீத்தேன் வளியை உரிஞ்சி எடுப்பதே வேலை.
ஆழ்துளைக் கிணறுகள் வேட்டி, முதலில் 500
முதல் 1650 அடி ஆழம் வரை உள்ள நன்னீரை அசுர நீர் இறைப்பிகளால் இறைத்து வெளியே விடுவார்கள்.
அப்படி இறைக்கும் போது, நன்னீருடன் உப்பு, அமிலமும், கரியும் கலந்து கெட்ட நீராக மாறிவிடும்.
அப்படி கெட்டதாக மாறிய நீரை பாசனத்திற்கும்,
குடிக்கவும் பயன்படும் வாய்க்கால்கள், ஆறுகள் போன்ற ஓடைகளின் வழியே வெளியேற்றுவார்கள்.
நிலத்தடியில் இருந்த நன்னீர், கெடு நீராக
மாறியதொடு, வாய்க்கால், ஆறுகள், ஓடைகளில் ஓடும் நன்னீரையும் கெடு நீராக மாற்றி விடும்.
இப்படி நீரை இறைத்து வெளியேற்றியவுடன், அசுர
உரிஞ்சிகளால் நிலக்கரிப் பாறைகளில் இருக்கும் நுண் துளைகள் வழியே வரும் மீத்தேனை உரிஞ்சி
எடுப்பார்கள்.
இப்படி எடுக்கப் பட்ட வளியை பெருங்குழாய்கள்
வழியே பிற மாநிலங்களுக்கும், சிங்களத்துக்கும், சிறிது தமிழ்நாட்டுக்கும் அனுப்புவார்கள்.
அந்தப் பெருங்குழாய்த் திட்டத்துக்கும் கூடுதல் நிலம் தேவைப்படும்.
விளைநிலங்கள் கரி நிலங்களாக மாறும்.
* நிலத்தடி நன்னீர் வறண்டு போகும்.
* மேலும் நன்னீர் நிலத்தடியில் வறழ வறழ,
கடலோரப் பகுதி என்பதால், கடல் நீர் நிலத்தடியில் புகுந்து விடும்.
* இறைக்கப் படும் நீரால் சுற்றி வேளாண்மைக்காக
ஓடும் நீர் நிலைகள் மாசு பட்டு பயனற்றுப் போகும்.
* துவக்கத்தில் 1,66,000 ஏக்கர் என்று குறிக்கப்
பட்டிருக்கும் அளவில் 80 கிணறுகளையும் தோண்டி விட்டால், அந்தப் பகுதியின் நீரும் சுற்றுச்
சூழலும் கெட்டு விடுவதால் மெல்ல மெல்ல வேளாண்மை மங்கும்.
* காவிரிப் பாசனப் பகுதி எங்கும் நிலத்தடியில்
மீத்தேனும் நிலக்கரியும் இருப்பதாகக் கணித்திருக்கிறார்கள் என்பதால், 80 கிணறுகளுக்குப்
பின்னர் அசுர வேகத்தில் 800, 8000 கிணறுகள் என்ற அளவில் அது மீத்தேன் கிணறுகள் பெருகும்.
* தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று ஆயிரம்
ஆயிரம் ஆண்டுகளாகப் பெயர் பெற்றிருந்த தஞ்சை நெற்களஞ்சியம், கரிக்களஞ்சியமாக மாறும்.
இது தமிழ்நாட்டின் முதன்மையான வாழ்வாதாரத்தை அழித்து விடும்.
(நன்றி - தஞ்சை விஜயகுமார்)
வற்றிப்போன காவேரியால்
வறண்ட பாலைவனமானது
தஞ்சை.
மீச்சமிருக்கும் இயற்கையின்
எச்சத்தையும்
பறிக்கவந்ததடா மீத்தேன்.
மண்ணுக்கு
மீத்தேன்..
பெயரில் 'தேன்'
வைத்திருக்கும்
ஆலகால நஞ்சு.
குழாய் நாக்குகள்
பூமித்தாயின்
குருதி உறிஞ்சும்
கோரம்.
உண்டு கொழுத்த
வேசிமகன்கள்
தங்கள் வயிறு
வளர்க்க...
விவசாயிகள்
வயிற்றில் அடிக்கும்
கொடுமை..
இயற்கை மீதான
இந்த கற்பழிப்பை கண்டுதான்
மனம்தாங்காமல்
போய்விட்டாரோ
எங்கள் ஐயா
நம்மாழ்வார்??
செல்வாக்கு
கொள்ளிக்கட்டை கொண்டு
டெல்டா மாவட்டம்
என்னும் தேன் கூட்டை
கசக்கி பிழிந்து
நாசமாக்க வருகிறதடா
ஒரு கூட்டம்.
அன்னைபூமியை
மலடாடுக்குவதே
மீத்தேன் திட்டம்.
வாருங்கள்
தோழர்களே!
இனியொரு
'சதி' செய்தாவது
இத்தீயதை
தடுத்து நிறுத்துவோம்.
கவிதை : இன்பா
2 comments:
அழிவைதை பார்ப்பதே நாம் செய்ய இயலும்...
சாதி மத இன அடையாளங்களால் பிரிந்திருக்கும் மக்கள்..
இவர்களிடம் இருக்கும் இடம் முதல் அனைத்தையும் பிடுங்குவது மிக சுலபம்.
எந்த பொருள் ஆனாலும் அதை வைத்திருக்க தகுதி படைத்தோரிடமெ இருக்கும்.
தகுதியற்றோர் அனைத்தையும் இழப்பதே நடக்கும்.
well said vinoth kumar you are correctly predict that
Post a Comment