கன்னித்தீவாய் தொடரும்
காவேரி நதிநீர்ப்
பிரச்சினையின் வயது
வருடங்கள் நாற்பது.
நூலாறாய் ஒடும்
பாலாற்றுக்கும்
வந்ததடா சோதனை
ஆந்திர அணை
முல்லை பெரியாரில்
மூச்சுமுட்டி நிற்கிறது
நம் தமிழக உரிமை.
சிறுநீர் கழிப்பிடமாக
சிறுவாணி ஆற்றை
மாற்றும்
முயற்சியில் இருக்கிறது
கேரள அரசு.
தமிழின துரோகம்
.என்பதின்
அடையாள சின்னமாய்..
கச்சத் தீவு.
வாரம் தோறும்
ராமேஸ்வர மீனவர்கள் மீது
'பயிற்சி ஆட்டம்' ஆடுவது
இலங்கை ராணுவத்துக்கு
வாடிக்கை.
சொந்த நாட்டு
அகதிகளாய்..
நம் மீனவர்கள்.
இப்படி
உள்ளூரில் இருக்கும்
'ஆணிகளை'
புடுங்க வக்கில்லாத
பண்ணாடைகள் எல்லாம்
ஒன்றுகூடுகிறார்களாம்
"டெசோ மாநாடு"
என்னும் பெயரில்
வெளியுரில் இருக்கும்
'மலையை' பெயர்க்க
கெடுகெட்ட
அரசியல் சவாரிக்கு
இரண்டு குதிரைகள்.
ஒன்று
இங்கிருக்கும்
தமிழர்கள்.
இன்னொன்று
ஈழத் தமிழர்கள்.
கூவம் ஆறும்
மணக்கிறது
இவர்களின்
சாக்கடை அரசியலின்
முடை நாற்றத்தில்.
ஒருவரி விமர்சனம்
டெசோ மாநாடு -
தூத்தேறி.
கவிதை : இன்பா
4 comments:
டெசோ டெசோ டெசோ
இல்லையேல்
அட்லீஸ்ட்
பிஸ்ஸா பிஸ்ஸா பிஸ்ஸா
அதுவும் இல்லைன்னா
அட்லீஸ்ட்
தோசா தோசா தோசா
இன்பா....
கவிதை அருமையாய் எழுதி இருக்கிறாய் நண்பா...
அழகு வார்த்தைகள்
கொண்டு
வடித்தாய் ஒரு
அட்டகாசமான
டெசோ வெண்பா...
ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க உடந்தையாக இருந்துவிட்டு, எஞ்சியுள்ளவர்களின் நலனுக்காக, "டெசோ' மாநாட்டை ...
முல்லைப் பெரியார் பிரச்சனைக்கு தீர்வு இல்லாமல் எது இருந்து என்ன?
www.saaddai.com
Post a Comment