"வேதாளம், தூங்காவனம் ட்ரைலர் விமர்சனம் ரெடியாயிருக்குமே" என்று திரு.கேபிள் சங்கர் அவர்கள், தனது இணையதளத்தில், கொத்து பரோட்டா -12/10/15 பகுதியில் குறிப்பிட்டு இருந்தார்.
அதன் பாதிப்பில், வேதாளம் படத்தின் டீசர் மற்றும் ஸ்டில்கள் சிலவற்றை வைத்து, நான் எழுதிய வேதாளம் - திரைவிமர்சனம் என்ற பதிவுதான் இன்றைய இணையம் மற்றும் வாட்ஸ் அப்பில் 'ஹாட் டாபிக்' என்றாகி இருக்கிறது.
இந்த பதிவை எழுதி முடித்தவுடன், ப்ளாகின் லிங்கை திரு.கேபிள் சங்கர் அவர்களுக்கு அனுப்பி இருந்தேன். அதை அவர் படித்துவிட்டு
"Interesting” என்று ஒரே வரியில் பதில் அனுப்பினார். அவருக்கு என் நன்றிகள்.
நான் கற்பனையில் உருவாக்கிய இந்த பதிவை, பல பதிவர்கள் அப்படியே 'காப்பி' செய்து, தங்களது தளங்களில் பதிவேற்றம் செய்ய,
"ஆவி அஜித் " வேதாளம் படத்தின் கதை இணையத்தில் லீக் - திரைத்துறையினர் அதிர்ச்சி ! - என்று எழுதி இருக்கிறார் தனது முக நூலில்
நண்பர் பத்திரிக்கையாளர் திரு.அருண்குமார்.
தொடர்ந்து, இந்த பதிவு நூற்றுக்ணக்கானோரால் ஷேர் செய்யப்பட்டு, "வேதாளம் பேய்ப் படமா? இணையத்தைக் கலக்கும் கதை" என்று சினிமா விகடன் உட்பட பல்வேறு இணையதளங்கள் தனியாக பதிவு வெளியிடும் அளவுக்கு அசுரவேகத்தில் வளர்ந்து விட்டது.
இணையத்தில் ஒரு செய்தி வந்தால், அதன் அடிப்படை உண்மை பற்றி ஆராயமல், அது அப்படியே இணையவெளியெங்கும் பரப்பபடுகிறது.
இதுவே ஒரு தனிமனிதரை பற்றிய தவறான செய்தியாகவோ இல்லை சாதி/மத உணர்வுகளை தூண்டும் செய்தியாகவோ இருந்தால்.....
அது எத்தகைய விளைவுகளை ஏற்ப்படுத்தும்???
எதை பற்றி படித்தாலும், அதை பகிரும்முன் சில நிமிடங்களாவது சிந்தியுங்கள்...சிந்திப்போம்(எனக்கும்தான்) என் அருமை இணைய நண்பர்களே.
(குறிப்பு : வேதாளம் கதை மெகாஹிட் ஆகிவிட்டதால், அடுத்து "கபாலி" கதையை(!) வெளியிட இருக்கிறோம்)
-இன்பா
தினமலர் :
http://cinema.dinamalar.com/tamil-news/38777/cinema/Kollywood/Is-Vedalam-story-leaked-in-Online.htm
தினத்தந்தி :
http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2015/10/19144410/The-resources-will-Websites-Ajiths-vedhalam-Story.vpf
அதன் பாதிப்பில், வேதாளம் படத்தின் டீசர் மற்றும் ஸ்டில்கள் சிலவற்றை வைத்து, நான் எழுதிய வேதாளம் - திரைவிமர்சனம் என்ற பதிவுதான் இன்றைய இணையம் மற்றும் வாட்ஸ் அப்பில் 'ஹாட் டாபிக்' என்றாகி இருக்கிறது.
இந்த பதிவை எழுதி முடித்தவுடன், ப்ளாகின் லிங்கை திரு.கேபிள் சங்கர் அவர்களுக்கு அனுப்பி இருந்தேன். அதை அவர் படித்துவிட்டு
"Interesting” என்று ஒரே வரியில் பதில் அனுப்பினார். அவருக்கு என் நன்றிகள்.
நான் கற்பனையில் உருவாக்கிய இந்த பதிவை, பல பதிவர்கள் அப்படியே 'காப்பி' செய்து, தங்களது தளங்களில் பதிவேற்றம் செய்ய,
"ஆவி அஜித் " வேதாளம் படத்தின் கதை இணையத்தில் லீக் - திரைத்துறையினர் அதிர்ச்சி ! - என்று எழுதி இருக்கிறார் தனது முக நூலில்
நண்பர் பத்திரிக்கையாளர் திரு.அருண்குமார்.
இணையத்தில் ஒரு செய்தி வந்தால், அதன் அடிப்படை உண்மை பற்றி ஆராயமல், அது அப்படியே இணையவெளியெங்கும் பரப்பபடுகிறது.
இதுவே ஒரு தனிமனிதரை பற்றிய தவறான செய்தியாகவோ இல்லை சாதி/மத உணர்வுகளை தூண்டும் செய்தியாகவோ இருந்தால்.....
அது எத்தகைய விளைவுகளை ஏற்ப்படுத்தும்???
எதை பற்றி படித்தாலும், அதை பகிரும்முன் சில நிமிடங்களாவது சிந்தியுங்கள்...சிந்திப்போம்(எனக்கும்தான்) என் அருமை இணைய நண்பர்களே.
(குறிப்பு : வேதாளம் கதை மெகாஹிட் ஆகிவிட்டதால், அடுத்து "கபாலி" கதையை(!) வெளியிட இருக்கிறோம்)
-இன்பா
தினமலர் :
http://cinema.dinamalar.com/tamil-news/38777/cinema/Kollywood/Is-Vedalam-story-leaked-in-Online.htm
தினத்தந்தி :
http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2015/10/19144410/The-resources-will-Websites-Ajiths-vedhalam-Story.vpf
2 comments:
Vow super... You have a fine art of writing...bi loved your language... The flow... Choice of words... Super super.,. Keep rocking inba
superb inba
Post a Comment