Sunday, October 26, 2014

'பிளேபாய்' ராமச்சந்திரன்


கவர்ச்சியின் உச்சமாக உருவாகும் 'பிளேபாய்’ பத்திரிகைக்காகப் பணிபுரிய, இந்தியாவில் இருந்து தேர்வாகியிருக்கும் முதல் இந்தியப் புகைப்படக்காரர் ராமச்சந்திரன்.

''பொதுவா, 'பிளேபாய் பத்திரிகைக்கு போஸ் கொடுக்கிற மாடல்களுக்குத் திருமணம் ஆகி இருக்கக் கூடாது, குழந்தை பிறந்திருக்கக் கூடாது, 30 வயசுக்குள் இருக்கணும்’னு பல தவறான எண்ணங்கள் இருக்கு. ஆனா, அப்படி எதுவுமே கிடையாது. 40 வயசு தாண்டிய, குழந்தை பெற்ற பல ஹாலிவுட் நடிகைகள், 'பிளேபாய்’க்கு நிர்வாண போஸ் கொடுத்திருக்காங்க. ஆனா,  மாடலிங்கின் அடிப்படை விதிகளுக்கு அவங்க உடம்பும் பொருந்தணும். அது மட்டும்தான் ஒரே நிபந்தனை!'' - ராமச்சந்திரனுடனான உரையாடல் முழுக்க இப்படி அதிர்வேட்டு ஆச்சர்யங்கள்தான்.

''சொந்த ஊர் கும்பகோணம் பக்கத்தில் வலங்கைமான். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிப்பு. ஆனா, போட்டோகிராபி ஆர்வம்தான் சென்னையில் ஒரு விளம்பர நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்தது. அப்புறம் சொந்தமா ஒரு விளம்பர நிறுவனம் ஆரம்பிச்சேன். 'அடுத்து என்ன?’னு கேள்வி வந்தப்ப, கிடைச்ச வாய்ப்புதான் இது!

ஓவியம் வரைவது மாதிரி, கவிதை எழுதுற மாதிரி, மலையேற்றம் மாதிரி நிர்வாணமும் ஒரு கலை. 'காமசூத்ரா’ கொடுத்த நாடு, கஜுராஹோ சிற்பங்கள் படைச்ச நாடு. நிர்வாணத்தை விலக்கிவைக்க வேண்டிய அவசியமே இல்லை. 'இந்தியர்கள் காமத்தைக் காதலோட அணுகுபவர்கள்’னு நமக்கு வெளிநாடுகளில் ஒரு பேர் இருக்கு.

ஆனா, நமக்குள்ள இப்படி ஒரு நினைப்பு. ஜெர்மோ போஜனமி - இவர்தான் பிளேபாயின் பிரபல போட்டோகிராபர் கம் இயக்குநர். இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டோகிராபர்களை உருவாக்கியவர். சர்வதேசப் புகைப்படக்கலை, மாடல்களிடம் வேலைவாங்கும் விதம் பற்றி அவர்கிட்டதான் நிறையக் கத்துக்கிட்டேன்.

பிளேபாய் பத்திரிகை 25 நாடுகளில் தனித்தனியா அச்சாகி வெளிவருது. அதனால அந்தந்த நாடுகளின் நேட்டிவிட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுப்போம்.

பிரபலங்கள், டாப் மாடல்களுக்கான ஏஜென்சி மூலம் ஆர்வமுள்ள மாடல்களைத் தேர்ந்தெடுப்போம். பிறகு லொகேஷன், பட்ஜெட், ஒப்பந்தங்கள்னு நிறைய வேலைகள் இருக்கு. கடைசியாத்தான் போட்டோ ஷூட்.

சமயங்களில் ஒரு போட்டோ ஷூட் பட்ஜெட், ஒரு தமிழ் சினிமா பட்ஜெட்டையே தாண்டும். மாடல், போட்டோகிராபர்... அது ரெண்டும்தான் ஒரு ஷூட்டின் பட்ஜெட்டைத் தீர்மானிக்கும். சமீபத்தில் என் நண்பர், பிரபல பாடகி கேட்டி பெர்ரியை போட்டோ ஷூட் பண்ணதுக்காக, ஒரு லட்சம் அமெரிக்க டாலர் சம்பளமா வாங்கியிருக்கார். அதே சமயம் ஒவ்வொரு நாட்டுக்கும் சில விதிகளுக்கு உட்பட்டுத்தான் புகைப்படங்கள் எடுக்க முடியும். பாங்காக்கில் முழு நிர்வாணம் கூடாது. பிலிப்பைன்ஸில் நிர்வாணத்துக்கு அனுமதி உண்டு. ஆனா, இந்தியாவில் இது எதுவுமே சாத்தியம் இல்லை!''

''நிர்வாண போஸ் தருவது தொடர்பாக மாடல்களுக்கு தயக்கம் இருக்காதா?''
''குட் ஜோக்! 'நான்... நீ...’னு அடிச்சுப் பிடிச்சு ஓடி வருவாங்க. அவங்களுக்கு அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. வெளிநாடுகளில் 80 சதவிகித மாடல்களுக்கு பிளேபாய் போட்டோ ஷூட் பண்ணணும்கிறதுதான் லட்சியம். ஒரு தடவை பிளேபாய் அட்டையில் படம் வந்தா,  மரியாதை, பிரபலம், விளம்பர-சினிமா வாய்ப்புகள்னு ஒரே ராத்திரியில் வாழ்க்கை தலைகீழா மாறிடும்!''

'' 'பிளேபாய்’ பத்திரிகையில் வேலைசெய்ய வாய்ப்பு கிடைச்சது பத்தி உங்க வீட்டில் என்ன சொன்னாங்க?''

''இதுவரை நான் 'பிளேபாய் போட்டோகிராபி’ பண்றேன்னு அம்மாவுக்குத் தெரியாது!''

Mr Jarmo in his article mentioned about Mr.Gary Cole’s words about LRamachandran,

“IF EACH PHOTOGRAPHER WOULD HAVE EVEN 20% OF WILL POWER THAT LRAMACHANDRAN HAS, THERE WOULD BE MANY BETTER PHOTOGRAPHERS

During conversations with STC crew and longtime photography director Gary Cole, he commented,

“If each photographer would have even 20% of willpower that L Ramachandran has, there would be many more better photographers … period.”


0 comments:

 
Follow @kadaitheru