Friday, February 14, 2014

'ஒளி நிலா' பாலு

இவர்
கேமரா என்பது
வெறும் கருவி இல்லை
ஓளிக்கவிதை என
கண்டறிந்து சொன்னவர்.

நத்தையும்
பறவை போல
தெரியும்.
இவர்
'கண்' கொண்டு
பார்த்தால்.

சின்னச்சின்ன செடிகள்,
ஒடும் நதி,
தேங்கி நிற்கும் குளம்,
வானவில்,மழை,மேகங்கள்
கோபுரம்
கொலுசு,வளையல்...

இவையெல்லாம்
கதையோட்டத்தோடு
கலந்து
உயிரோட்டமாக காட்சியளிக்கின்றன
இவரது படைப்புகளில்.


இவரின் கதாநாயகிகளின்
விழிகளுக்கு மட்டும்
ஏனோ
ஒரு சிறப்பு ஈர்ப்புசக்தி.

இன்னும் 'தூக்கலான'
இளமை

'நீங்கள் கேட்டவை' தந்தவர்.
'வீ(டு)ட்டில்' இருந்து பார்க்கும்வண்ணம்
'மூடுபனி'யில் நனையும்
'மூன்றாம் பிறை'யை
நீங்கள் கேட்காமலே தந்தவர்.

'வண்ண வண்ண பூக்க(ள்')க்கு
இளமை வாசம் தந்தவர்.
''சதி லீலாவதி'யில்
சிரிக்க/சிந்திக்க வைத்தவர்.


அந்த பாலு
பாடும் நிலா என்றால்
மறைந்த
இந்த பாலு
ஒளி நிலா.

'மறுபடியும்'
இனி வரும்
'தலைமுறைகள்' காணுமா
இவர் போன்ற
ஒரு கலைஞரை??




இரங்கல் கவிதை -  இன்பா

0 comments:

 
Follow @kadaitheru