Sunday, January 13, 2013

பொங்கல் - சிறப்புக் கவிதை

                                  
வாழ்க்கையை ஒரு
சக்கரைப்பொங்கல் என்பேன்.
 
        பற்க்களில் இடருமென
        எவராவது ஒதுக்கிவைப்பதுண்டா?
        சக்கரைப்பொங்கலில்
        முந்திரிப்பருப்புகளை.

         குடும்பப்பொறுப்புகள்
         முந்திரிப்பருப்புகள்.

வாழ்வை ஒரு
வெண்பொங்கல் என்பேன்.

     ப்பும், மிளகுமாய்
     அதில் துன்பங்கள்.

    சிறு கடுகின் அளவே
.    எந்த பிரச்சனையும்.
   . ஆராயந்து பார்த்துவிட்டால்.

வாழ்க்கையை
நானொரு கரும்பு என்பேன்.

      கவலையில்லா
      குழந்தைப் பருவம்
      அடிக்கரும்பு.
      நோயோடு
      நரைகூடிய கிழப்பருவம்
      நுனிக்கரும்பு.

வாழ்க்கை நமக்கொரு
வாடிவாசல்
 
       எந்தக் காளை
       எப்படியென்பது
       வாடிவாசல்வரை புரியாது.
       அடுத்த நொடியில்
       நடக்கப்போவது
       யாருக்கும் தெரியாது.

மொத்ததில்
நம் வாழ்க்கை
பொங்கல் திருநாளாக
இருக்கட்டும்.

ஒயாது உழைக்கும்
கதிரவன்
உலகுக்கு
ஒரே கடவுள் என்றாகட்டும்

பூசணிப்பூக்களோடு....
நாளும் விடியலுக்கு முன்பே
ம் விழிகள் திறக்கட்டும்.


கவிதை : இன்பா

1 comments:

mani said...

PONGAL SERAPU KAVITAHI IS GREAT ONE.
ARJUNAN

 
Follow @kadaitheru