Saturday, October 6, 2012

பார்வை('கள்')

என்னதான்
'தோழி' என்று
விளித்தாலும்
அவள்
கண்களை தாண்டியும்
செல்கிறது.

ஜன்னலோரப் பயணங்களில்
கடந்துபோகும் நீர்நிலைகளில்
குளிக்கும் பெண்களை
தேடுகிறது
கொஞ்சமும் உறுத்தலில்லாமல்.


கோவிலுக்கு சென்றாலும்
அம்மன் சிலையை
'அளக்கிறது'.

கடைகளின் விளம்பரத்தாள்களில்
தொங்கும்
நடிகைகளின் கவர்ச்சியே
ஜனரஞ்சக பத்திரிக்கைகளை
வாங்குவதை தீர்மானிக்கிறது.

இலக்கிய பத்திரிக்கையாக
இருந்தாலும்
முதலில் பார்ப்பது
காமம் பேசும் கவிதைகளைத்தான்.

இணையத்தில்
எதை தேடினாலும்
முடிவது
'இதில்'தான்.


எதெச்சையாய் குழந்தை
எதிர்சீட்டு பெண்ணின்
'தலைப்பை' விலக்கும்போதும்
விட்டு விலகுவதிலை
என் பார்வை.

பார்வைகளை
பார்வைக்'கள்' என
மாற்றியது எது?

மனமொரு குரங்கு
மெய்ஞானம்
கட்டிப்போடும் விலங்கு.

எதைக்கொண்டு
கட்டுவது
என் பார்வையை,

கவிதை: இன்பா

0 comments:

 
Follow @kadaitheru