Sunday, August 10, 2014

'லைக்கா'வுக்கு லைக் போட்ட பிரபாகரனின் தம்பி(!)

கத்தி’ படத்தை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என நாம் தமிழ் கட்சி தலைவர் சீமான் கூறி இருக்கிறார்.

“‘கத்தி’ படத்தில் தமிழர்களுக்கு எதிரான காட்சிகளோ கருத்துகளோ இருந்தால் அதனை எதிர்க்கிற முதல் ஆளாக நான் தான் இருப்பேன். அந்தப் படத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதே தெரியாமல் யாரோ கிளப்பும் சர்ச்சைகளுக்காக அந்தப் படத்தை எதிர்க்க நான் ஒன்றும் ஏதும் தெரியாத மூர்க்கன் அல்ல " என்று விளக்கம் அளித்து இருக்கிறார்.

சிங்கள நிறுவனமான லைக்கா பற்றியும், ராஜபக்சேவுடனான தொடர்பு பற்றியும் ஈழத்தமிழர் அமைப்புகள் வெளியிட்டுள்ள செய்தி பின்வருமாறு.

தமிழீழ  மக்களை கொன்றுகுவித்த சிங்கள அரசு சுதந்திர தினத்திற்கு லைக்கா ஆதரவு வழங்குது    லைக்கா விற்கு சீமான் ஆதரவு??

என்ன  நடக்கின்றது??

‘சீமான் எதற்கு ’கத்தி’ படத்தை எதிர்க்கவில்லை?’ என பலரும் உசுப்பேற்றுவதற்காக நான் என் சொந்தத் தம்பிகள் மீது பாய முடியாது. லைக்கா மொபைல் நிறுவனம்  தமிழகத்தில்  இல்லை. அப்படியிருக்க அந்த நிறுவனத்துக்கும் ராஜபக்சேவுக்கும் தொடர்பு இருக்கிறது எனச் சொல்பவர்கள் அந்த நிறுவனம் வர்த்தகத்தை மேற்கொள்ளும் லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் அதற்கான எதிர்ப்பைக் காட்ட வேண்டும்.

உலக தமிழர்கள் சொல்லுவது சரி தான் இதோ இந்த படத்தில் பாருங்கள் லைக்கா  நிறுவனத்துக்கும் ராஜபக்சேவுக்கும் தொடர்பு இருக்கு.



"எதை ஆதரிப்பது எதை எதிர்ப்பது என்பது நானும் என் கட்சியும் முடிவு செய்ய வேண்டிய விசயம்". என்று வேறு கூறுகிறார் சீமான்.

அப்போது தமிழீழ விடுதலை புலிகள் எதற்கு இருகின்றார்கள் ?

இது போன்ற உளறல்கள்  இனி வருவது கூடாது

எதை ஆதரிப்பது எதை எதிர்ப்பது என்று  தமிழீழ விடுதலை புலிகளுக்கு தெரியும்  அவர்கள் தான் முடிவு செய்வார்கள் ,முடிவு செய்ய   யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது ,முடிவு செய்ய யார் நீங்கள்???

விடுதலை புலிகளுக்கு துரோகம் செய்வர்களை புடிக்காது அறிவீர்கள் என்று   நினைகின்றோம்.

“நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்.”  -தமிழீழ தேசியத் தலைவர் -


நான் பிரபாகரனின் தம்பி என்று கூறிக்கொள்ளும் சீமான், இன்று 'லைக்கா'விடம் 'பொட்டி' வாங்கிகொண்டு, அவர்களுக்கு படம் இயக்கவும் போகிறார்.

ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கை துரோகம் செயவதில் நான் யாருக்கும் சளைத்தவன் அல்ல என்று நிருபித்துவிட்டார் சீமான்.




"தமிழர் பிரச்சினைக்கு முதல் ஆளாக(?) குரல் கொடுக்கும் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்" என்று வேறு அழைப்பு விடுத்திருக்கிறார்.

பிரபாகரன் படத்தை போட்டுக்கொண்டு உண்டியல் குலுக்கும்,காசுக்கு குரைக்கும் நாம் தமிழரின் முகத்திரை கிழிந்துவிட்டது.

1 comments:

vivek kayamozhi said...

தமிழ்,தமிழ் நாடு ,தமிழர் என்று வாய் கிழிய பேசி, தமிழன் கழுத்தை கடித்து ரத்தம் குடித்த எத்தனையோ பேய்களை பார்த்து விட்டோம் .இது பத்தோடு பதினொன்று ...
நீங்கள் தான் சீமான் போன்ற கூத்தாடி பகல்வேஷக்காரரை பெரிதாக நினைக்கிறீர்கள் . இலங்கையில் எப்படியோ தெரியாது .. தமிழகத்தில் பொங்கிய வாய்ச்சொல் வீரர் எல்லாம் இதுவரை நம் கழுத்தை அறுத்தது தான் வரலாறு ...

 
Follow @kadaitheru