"பட்டங்கள்
ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்" என்றான்
பாரதி. தங்களால் போரினையும் நடத்தமுடியும் என நிரூபித்தவர் கேப்டன்
லெட்சுமி.
அக்டோபர் 24, 1914 ஆம் வருடம், அப்போது மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட நம் சென்னையில் பிறந்தார். அவரது தந்தை S.சுவாமிநாதன், சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியவர், தாய் அம்மு அவர்கள் கேரளாவை சேர்ந்த சமுகசேவகர் மற்றும் சுதந்திரபோராட்ட வீரர்.
ஏழை மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற ஒரே நோக்கோடு, 1938 ஆம் வருடம் சென்னை மருத்துவகல்லூரியில் பட்டம் பெற்றார். அதன்பின் சிங்கப்பூர் சென்று, அங்கு வாழும் ஏழை இந்திய தொழிலாளிகளுக்கு மருத்துவமையம் அமைத்தார். 1942 ஆம் வருடம் சிங்கப்பூர், ஜப்பான்வசம் வந்ததும், போரினால் பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சைகள் செய்தார்.
அப்போதுதான் அவர் வாழ்கையின் முக்கியமான திருப்பமான சம்பவம் நடந்தது. ஜூலை 2, 1943 ஆம் வருடம் சிங்கப்பூர் வந்த நேதாஜி அவர்கள் பெண்களுக்கான படைபிரிவை ஜான்சி ராணியின் பெயரால் தொடங்கவிருப்பதாக அறிவிக்க, கணமும் தாமதிக்காமல் அதில் இணைந்தார் லெட்சுமி. ராணுவ சேவைகளோடு, மருத்துவ சேவைகளையும் கவனித்தார். தனது சிறப்பான பணிகளால் விரைவில் ஜான்சிராணி படைபிரிவின் தலைமை பொறுப்பை ஏற்று கேப்டன் லெட்சுமி ஆனார்
1946, மார்ச் 4 ஆம் தேதி, பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு, சென்னைக்கு கொண்டுவரப்பட்டவர், நீண்ட சிறைவாசத்திற்கு பின் விடுதலை செய்யப்பட்டார்.1970 களில் நேதாஜியின் வழிகாட்டுதலின்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிபணிகளிலும், வங்கதேச போர்காலங்களில் அகதிகளுக்கான மருத்துவ சேவைகளில் ஈடுபட்டார். 2002 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதிக்கான தேர்தலில் நமது அப்துல்கலாம் அவர்களை எதிர்த்து, கம்யூனிஸ்டுகள் ஆதரவோடு போட்டியிட்டு, தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. தனது கணவர் பிரேம்குமரோடு கான்பூரில் செட்டில் ஆகி, ஏழை எளியவர்களுக்கான மருத்துவ சேவைகளை தொடர்ந்து கொண்டிருந்தார்.
அடுப்புஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று இருந்த அந்த காலகட்டத்தில் கேப்டன் லெட்சுமி சாதித்துக்காட்டிஇருக்கிறார். இவரைபோன்று 'வெளிச்சத்திற்கு' வராமல் 'இருட்டில்' இருக்கும் பாரதி கண்ட புதுமைபெண்கள் எத்தனயோ?
இன்று (23-7-12 ) இயற்கை எய்திய கேப்டன் லெட்சுமி அவர்களுக்கு எங்களின் வீர வணக்கங்கள்.
ஜெய்ஹிந்த்.
-இன்பா