Friday, February 17, 2012

வீணா (போன) மாலிக்

மறைந்த பிரபல ஓவியர் எம்.எப்.ஹுசைன், பிரபலமானதற்கு முக்கிய காரணம் அவர் சரஸ்வதி மற்றும் லட்சுமி போன்ற இந்து கடவுள்களை நிர்வாண ஓவியமாக வரைந்ததுதான்.

சில வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் காலில் அணியும் காலணிகளில் சரஸ்வதி மற்றும் விநாயகர் உருவங்கள் பதிக்கபட்டு வெளிவந்தன. இது அங்கு வாழும் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதை போன்று, ஐரோப்பாவில், உருவமே இல்லாத நபிகள் நாயகம் அவர்களின் உருவத்தை ஒசாமா பின்லேடன் பாணியில் ஒரு தீவிரவாதி போன்று ஒரு படம் வெளியிடப்பட்டது. அது முஸ்லிம் மக்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்ப்படுத்தியது.

சமிபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற Sydney Fashion week நிகழ்ச்சியில் ஒரு மாடல் "பிகினி" உடை அணிந்து வந்தார்.அந்த பிகினி உடையில் இந்து தெய்வமான லக்ஷ்மி உருவம் இருந்தது.


மேற்கண்ட பாணியில் ஒரு சம்பவம் நம் இந்தியாவில் நடந்து விட்டது. வட இந்திய நடிகை வீணா மாலிக் FHM என்ற பத்திரிக்கைக்கு கடந்த டிசம்பரில் ஒரு நிர்வாண போஸ் அளித்தார்.

கவனிக்க, அவரது மற்ற பாகங்களை(?) விட அவரது 'கை' பெரும் கவனம் பெற்று விட்டது. அதுவும் உலகம் முழுவதும்.

அதற்க்கு காரணம் அதில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான 'ISI ' என்று டாட்டூ இருந்தது. வீணா மாலிக் பாகிஸ்தானில் இருந்து வந்தவர் என்பதால்,அவர் பாகிஸ்தானுக்கு, இந்தியாவில் இருந்து உளவு பார்ப்பதாக டெல்லியில் இருக்கும் ஒரு இஸ்லாமிய அமைப்பு வழக்கு தொடர்ந்து இருக்கிறது.

பஜ்ரங்தள்  போன்ற இந்து அமைப்புகளும் வீணா மாலிக்குக்கு கண்டனம் தெரிவித்து இருக்கின்றன.

"அது ஒரு வெறும் பச்சைதான்.  பாகிஸ்தானுக்கு தான் உளவு பார்க்கவில்லை"  என்கிறார் வீணா மாலிக்.

வீணா மாலிக் ஒரு "வீணா"  போன போஸ் கொடுத்தாலும்,  அவர் ஒரு நல்ல காரியத்தையும் செய்து இருக்கிறார்.

அதுதான்,  வட இந்தியாவில் உள்ள   அடிப்படைவாத இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகளை இந்த போஸ் மூலம் ஒன்று இணைத்து இருக்கிறார்.

இது எப்புடி??

-இன்பா

0 comments:

 
Follow @kadaitheru