Saturday, November 9, 2013

ஆரம்பம் - நூறு சதவீதம் நேர்மையான விமர்சனம்



ஆரம்பம் படத்திற்க்கு இதுவரை எவ்வளவோ பேர் விமர்சனம் எழுதி தள்ளிவிட்டார்கள். அவர்க்களுக்கும், என் விமர்சனத்திற்க்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம்,நான் படத்தை திருட்டுத்தனமாக, 'டவுன்லோட்' செய்து பார்த்துவிட்டு, இந்த விமர்சனத்தை எழுதுகிறேன்.

வலை உலக விமர்சன வரலாற்றில், இப்படி ஒரு விமர்சனம் இதுவே முதல் முறை எனலாம்.

என்ன செய்வது. நான் தற்போது பணியாற்றும் ஊரில் தியேட்டர்களே இல்லை என்பதால், படத்தை இப்படி 'இறக்குமதி'  செய்து, அதற்க்கு விமர்சனம் வேறு எழுத நேரிட்டமைக்கு வருந்துகிறேன்.

இன்னும் கொஞ்ச நாள் பொரு தலைவா, நல்ல பிரிண்ட் வரும் என்றான் என் நண்பன்.

ஆனால், எனக்கு தியேட்டர் பிரிண்ட் பார்க்கவே ஆசை.  'தல' படத்தை முதல் நாள்,முதல் காட்சி பார்க்கமுடியாத சோகத்தை, ஏக்கத்தை திரையரங்கில் ரசிகர்களின் விசில்,கைத்தட்டல்கள் இன்ன பிற சத்தங்களை பதிவு செய்து இருக்கும் இந்த பிரிண்ட் ஒரளவுக்கு போக்கிவிட்டது.

ஓளிப்பதிவு,இசை இவை இரண்டை பற்றியும் வேறு நல்ல பிரிண்ட் வந்தவுடன், பார்த்துவிட்டு எழுதுகிறேன். கதை பற்றி சொலவதற்க்கு ஒன்றுமில்லை. படத்தை பொருத்தவரை எனக்கு பெரிய ஏமாற்றம் தந்தவர்(கள்) கதாசிரியர் சுபா மட்டுமே.

'தல' ஒரு சீன் வரும் 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்தையே முதல் காட்சி பார்த்த நான் 'ஆரம்பம்' படத்தை அலசி, விமர்சனம் எழுதினால், அது கண்டிப்பாக நேர்மையானதாக இருக்காது.

ஆகையால், படத்தை பற்றி ஒரு வரி மட்டும்.  படத்தில் ஆயிரம் ஒட்டைகள் இருந்தாலும், அதை அடைத்து இருக்கிறது அஜித்தின் பிரசன்ஸ்.

எம்.ஜி.ஆர், ரஜினி ஆகியோருக்கு பின் காந்த சகதி படைத்த ஒரே நடிகர், அது தல தான்.

அடுத்து, வீரம் படத்துக்கு இதுபோல(??)- நூறு சதவீதம் நேர்மையான விமர்சனம்
எழுத இப்பவே வெயிடிங்.

-இன்பா

 
Follow @kadaitheru